எல்லாரும் நினைப்பதுபோல் ஆர்பாட்டமாக அல்லது அட்டகாசமாக ம்ம் எப்படியும் கொண்டாடலாம். ஆனால் அதனை பிறருக்கு தொந்தரவு இல்லாமல் நமது கலாசாரத்துக்கு பங்கம் வராமல் அவற்றைக் கொண்டாடுவதில்தான் சிறப்பு இருக்கின்றது.
31 December 2018
25 December 2018
சிலருக்கு பதவிப் பிரச்சினை பலருக்கு உதவிப்பிரச்சினை!
ஆம் இன்று நள்ளிரவு முதல் பதவி உயர்வு பிரச்சினைகளை தீர்த்துத்தர வேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைநிறுத்தத்தினை புகையிரத ஊழியர்கள் செய்ய உள்ளதாக செய்தி கேட்டேன்.
ஐயா! இது பண்டிகைக்காலம், விடுமுறைக்காலம் இந்தக் காலத்தில் உறவினர்களைப் பார்க்க செல்லலாம், பெற்றோர்களைப் பிள்ளைகளும் பிள்ளைகளை பெற்றோர்களும் என பார்க்கச் செல்லலாம். இவர்கள் எல்லாம் தங்களது வருமானத்துக்கு ஏற்ப்ப, சாதாரண வஸ் மற்றும் புகையிரதங்களிலே பயணம் செய்து வரும் நிலையில், இந்த அழுத்தம் சொகுசு வாகனங்களில் பாதுகாப்பு வசதிகளுடன் செம்மையாகச் செல்லும் அரசியல்வாதிகளை உங்கள் வேலை நிறுத்தம் எவ்வாறு பாதிக்கும்??
ஐயா! இது பண்டிகைக்காலம், விடுமுறைக்காலம் இந்தக் காலத்தில் உறவினர்களைப் பார்க்க செல்லலாம், பெற்றோர்களைப் பிள்ளைகளும் பிள்ளைகளை பெற்றோர்களும் என பார்க்கச் செல்லலாம். இவர்கள் எல்லாம் தங்களது வருமானத்துக்கு ஏற்ப்ப, சாதாரண வஸ் மற்றும் புகையிரதங்களிலே பயணம் செய்து வரும் நிலையில், இந்த அழுத்தம் சொகுசு வாகனங்களில் பாதுகாப்பு வசதிகளுடன் செம்மையாகச் செல்லும் அரசியல்வாதிகளை உங்கள் வேலை நிறுத்தம் எவ்வாறு பாதிக்கும்??
23 December 2018
ஒற்றைத்துளி
ஒற்றைத்துளி வெள்ளம்மென பற்றைதனை மேவும்
ஓராயிரம் பாரம்தனை வீசவெனக் காவும்
பெட்டையிடும் முடடையினை பேரெடுக்க கூவும்
கடடைதனில் மந்தியெல்லாம் மறுகிழைக்கு தாவும்
நீ கூவவும் தாவவும் பிறந்தவனல்ல-தமிழ்
தாயையும் தமிழயும் மறந்தவனல்ல
சேவைக்கு பயந்து இறந்தவனல்ல
ஒற்றைத் துளியாய் இரு
வெள்ளமாய் வரும் படை பின்னால்
வேங்கயாய் உடை தடை முன்னால்
ஓராயிரம் பாரம்தனை வீசவெனக் காவும்
பெட்டையிடும் முடடையினை பேரெடுக்க கூவும்
கடடைதனில் மந்தியெல்லாம் மறுகிழைக்கு தாவும்
நீ கூவவும் தாவவும் பிறந்தவனல்ல-தமிழ்
தாயையும் தமிழயும் மறந்தவனல்ல
சேவைக்கு பயந்து இறந்தவனல்ல
ஒற்றைத் துளியாய் இரு
வெள்ளமாய் வரும் படை பின்னால்
வேங்கயாய் உடை தடை முன்னால்
18 December 2018
கேவலமான மனநிலையும் கேள்விக்குறியாகும் இளைஞர்களும்
மொத்த சனத்தொகையில் வேலையில்லாத வகுதியினரிடையே கிட்டத்தட்ட 15 விகிதமானவர்கள் இளைஞர்கள் என இலங்கையின் சனத்தொகை கணக்கீட்டு அறிக்கை சொல்லுகின்றது.
''வா மச்சான் இரு இப்படி, அதுசரி இப்ப உண்ட பிள்ள என்ன மச்சான் செய்யுறான்? என்று ஒருவர் கேட்க, மற்றயவர் ''என்னத்த மச்சான் போண் ஒண்டு இருக்கு, மற்றது கிரிக்கட் மட்ட அதை தூக்கினான் எண்டா பொழுதுபடத்தான் திரும்ப வீட்டுக்கு வாறான். எவ்வளவோ சொல்லிப் பாத்தன். அடே விளையாடினாலும் வெல்ல விளையாட வேணும்டா என்று. கேட்டானா? எத்தனையோ கோஸ் இருக்கு படிக்க, ஆனா அவன் இதையெல்லாம் கேட்டபாடில்லை மச்சான்'' என்று வருந்திக்கொண்டார்.
இது இன்றய பெற்றோரின் நிலை.
15 December 2018
சுட்டிக்காட்டாமல் விடப்படும் பெரிய குறையொன்று
தேத்தாத்தீவு கிராமத்தின் கிழக்கே இருக்கும் வங்கப் பெருங்கடல் அதுபோல் மேற்கே இருக்கும் மட்டக்களப்பு வாவி ஆகிய இரண்டும் முக்கியமான பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன. இதில் கிழக்கே இருக்கும் கடற்கரைவரை செல்லும் பிரதான பாதை "சுனாமிக்குப் பின்னர் மிக மிக மோசமடைந்து தூர்ந்து போயுள்ளது".
12 December 2018
பிராணிகளின் மரணங்களும் திராணியற்ற மனிதர்களும்!
உலகில் நிமிடத்துக்கு நிமிடம் எத்தனை எத்தனை வளர்ச்சி, எத்தனை எத்தனை கண்டுபிடிப்புக்கள்! மாற்றங்கள்! ஆனால் அவை எல்லாம் மனிதர்களை ஏமாற்றுவதற்கே அன்றி அவர்களை மாற்றுவதற்கல்ல என்பதனையே உணருகின்றோம். ஆம் இன்று மனிதர்களுக்கு ஏற்படும் பல அசம்பாவிதங்களை படம்பிடிக்கும், தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் ஒரு பொதுநோக்கில்லாத மனநிலை இன்றய சமுகத்தினர் மத்தியில் வேர்விட்டு வளர்ந்து வருகின்றது.
ஐந்து வருடத்துக்குள் 1000 யானைகள் இலங்கையில் அகாலமரணமடைந்துள்ளன என ஒரு பத்திரிகைசெய்தியில் பார்த்தேன். அதேபோல் யானைகளின் தொல்லையால் மனித உயிர்கள் பல பலிகொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறே ஏனைய பல பிராணிகள், மிருகங்கள் கொல்லப்பட்டு வீதிகளில் அனாதரவாக மற்றவர்களுக்கு அசௌகரியமாக கிடப்பதனை கண்ணுற்றுள்ளோம்.
02 December 2018
தம்பி ரமேஸ்!
நான் எப்பவோ எழுத நினைத்தது இன்று எழுதுகின்றேன். ஒருவர் பயன் கருதாமல் செய்வதும் பயன் கருதிச் செய்வதும் என இரு செயல்கள் உள்ளது. இரண்டும் கலந்த ஒரு கலவை மற்றும் மாற்றத்துக்கான புதிய அத்தியாயமாக தம்பி ரமேஸ் அவர்களைப் பார்க்கின்றேன். அவர் ஒரு ஆசிரியராக இருந்து மாவட்டத்தில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றம், இன்றய மாணவர்களின் சந்தைக்கான கல்வியின் தேவையை அறிந்த, வேலைவாய்ப்புக்கான படையின் தலைவனாய் உன்னைப் பார்க்கின்றேன். இதை படித்தாலும் பலர் புரிய நாள் எடுக்கலாம்.
01 December 2018
திருமேனி உலகுயர் கணபதியே
கலியுகப் பெருமானே காத்தருள் புரியும் தேனூர்ப் பதியப்பா
தொழுவேன் தொழுவேன் தொழுவேன் நான்
திருமேனி உலகுயர் கணபதியே
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
கருணை முகம் கொண்டு காவல் புரி தெய்வம்
கோயில் எழுந்த தீவு –தேனூர்
கோயில் எழுந்த ஊரு- 2
கடலும் ஆறும் கரை தொடும் நடுவினில்
வரும் அடியார் குறை தீர்கும் தலம்!
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
தொழுவேன் தொழுவேன் தொழுவேன் நான்
திருமேனி உலகுயர் கணபதியே
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
கருணை முகம் கொண்டு காவல் புரி தெய்வம்
கோயில் எழுந்த தீவு –தேனூர்
கோயில் எழுந்த ஊரு- 2
கடலும் ஆறும் கரை தொடும் நடுவினில்
வரும் அடியார் குறை தீர்கும் தலம்!
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி