ADS 468x60

18 December 2018

கேவலமான மனநிலையும் கேள்விக்குறியாகும் இளைஞர்களும்

Image result for boys  on road sri lankaமொத்த சனத்தொகையில் வேலையில்லாத வகுதியினரிடையே கிட்டத்தட்ட 15 விகிதமானவர்கள் இளைஞர்கள் என இலங்கையின் சனத்தொகை கணக்கீட்டு அறிக்கை சொல்லுகின்றது.

''வா மச்சான் இரு இப்படி, அதுசரி இப்ப உண்ட பிள்ள என்ன மச்சான் செய்யுறான்? என்று ஒருவர் கேட்க,  மற்றயவர் ''என்னத்த மச்சான் போண் ஒண்டு இருக்கு, மற்றது கிரிக்கட் மட்ட அதை தூக்கினான் எண்டா பொழுதுபடத்தான் திரும்ப வீட்டுக்கு வாறான். எவ்வளவோ சொல்லிப் பாத்தன். அடே விளையாடினாலும் வெல்ல விளையாட வேணும்டா என்று. கேட்டானா? எத்தனையோ கோஸ் இருக்கு படிக்க, ஆனா அவன் இதையெல்லாம் கேட்டபாடில்லை மச்சான்'' என்று வருந்திக்கொண்டார். 

இது இன்றய பெற்றோரின் நிலை.


''மச்சான் இஞ்சப்பாரு இஞ்சபாரு 200 லைக்குக்கு மேல வந்திட்டுடா, ஆனா அவள் இன்னும் என்ட ரிக்குவெஸ்ட்ட அக்சப்ற் பண்ணி இல்லையே, அவளுக்கு யுனிவெஸ்ரில படிக்கிறன் என்ற திமிருடா' என ஒருத்தன் சொல்ல இன்னொருவன் 

''விடுறா மச்சான் நமக்குத்தான் ஏஎல் எழுதியும் கெம்பஸ் கிடைக்கலயே! இஞ்சப்பாரு வேல்முருகிட ரவி, யோகன்ட வேணு இவனுகளும் வாத்திமாரிட பிள்ளைகள் தான், இப்ப மத்திய கிழக்கில வேலை செய்யுறான்கள், ரவி ஆட்டோ எடுத்து ஓட்டுறான். அவனுகளப் பாருடா பின்னேரமான நல்லா பண்ணெடுக்கானுகள். நல்ல காசிடா மச்சான் அவனுகளிட்ட. ஆனா சும்மா படிச்சவனுகள் பெரிசா என்னத்த கிழிக்கானுகள்? அதோட அது அவனவன்ட அதிஸ்டம் மச்சான்".

என்று கூறுகின்ற பொதுவான மனோபாவம் பெரும்பாண்மையான இளைஞர்களிடையே காணப்படுகின்றது.

இவர்கள் குறுங்காலத்தில் பிழையான வழியில் சொகுசாக வாழவேண்டும் என நினைத்து திறன் அற்ற வேலைகளுக்கு கூலியாளாக, எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் எமது நாட்டின் உற்பத்திக்கும் எமது வீட்டின் மகிழ்ச்சிக்கும் முறையான முறையில் பங்காற்ற முடியாமல்போகும் துர்ப்பாக்கியத்தினையே காண்கின்றோம்.

இன்னொரு பகுதியினர் ''காலாகாலத்துக்கு ஒழுங்காப் படிச்சி ஒரு வாட்டு லேபர் எண்டாலும் அரசாங்கத்தில எடுத்தா, கழுதைய கலியானம் காட்சி எண்டு தள்ளி சாகிற காலத்தில சிவசிவா என்றிருந்திருக்கலாம். அதுக்குத்தான் சொல்லுறாங்க 'கோழி மேய்கிற எண்டாலும் கோர்ணமெந்தில மேய்க்க வேண்டும் எண்டு'' என்று ஒருவர் சொல்ல, 

அதுக்கு மற்றவர், 'ஓம் அண்ணன் தம்பிட புள்ளயும் எங்கயோ காலக் கையப்புடிச்சிக் கிடிச்சி காசி கட்டி அரசாங்கத்தில கிளாக்கு வேலை எடுத்து இருக்காம். நானும் பாக்கிறன்தான் இருக்கிற வளவு வாய்க்கால வித்துப்போட்டு ஒரு வேலக்குஞ்ச எங்காவது எடுப்பம் எண்டு ம்கூம் அகப்படுதில்லயே''

என்று இந்தப் பெற்றோர்கள் இன்னும் அரசாங்க வேலை வேண்டும் என்ற நிலையில் இருப்பதனால் அரைவயசு போகும்வரை உற்பத்திக்கு உழைக்கும் இளையோர்கள் எமது நாட்டிற்கு பயனற்றுப் போகின்றார்கள். அதனால் வேலையாட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்கவேண்டிய நிலையில் இலங்கை இருக்கின்றது.

இனி பொதுவாக சமுகத்தின் பார்வை எவ்வாறு இருக்கின்றது எனப்பாருங்கள். ''இஞ்சபாருங்க அம்மாச்சி! நம்மட குஞ்சித்தம்பி அண்ணண்ட பிள்ள வார நேரத்த. ராவு ஒன்பது பத்து மணியாகின்றது ம்ம் அப்படி என்ன வேலையோ தெரியல்ல. இப்படியெல்லாம் வேலை செஞ்சி திரியிற புள்ளய நம்ப முடியாது!' என்று ஒருவர் சொல்ல, 

மற்றவர் '"இந்தப் புள்ளைகள யாருதான் கலியானம் கட்டப்போகின்றார்களோ பார்பம், மற்றது மருமகன் குமராகினமா, படிச்சமா, கலியானம் முடிச்சமா எண்டிருக்கணும் இதென்னண்டா இவளுகள் யாரோட லூட்டி அடிக்காளுகளோ ஆரு கண்டா? ஆஆஆ அரசாங்கத்தில வேலை எடுத்தா இப்படியெல்லாம் திரியவேண்டிய அவசியம் இல்லையே'' என இவர்களது மனநிலை.

இந்த மனநிலையில் மாற்றம் ஏற்படுவது எப்போது? இந்த மனநிலையை வளர்பவர்கள் அதிகம் அதை அறிவூட்டி இல்லாமல் செய்பவர்கள் சொற்ப அளவிலேயே உள்ளமை மாற்றப்படிவேண்டியுள்ளது. அதுபோக எமது மண்ணில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளை மேம்படுத்தி அவற்றை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்றுமதி செய்யும் செயற்பாட்டை துவங்கி கைகளில் பணப் புழக்கத்தினை அதிகரிக்கும் செயற்பாடுகளுக்கு கற்றவரும் மற்றவரும் அறிவூட்டி இந்தப் பாழ்பட்ட மனோநிலையினை அடியோடு ஒளிக்கவேண்டும். அது தான் எமது எதிர்காலத்தினை ஒளிரச் செய்யும்.

0 comments:

Post a Comment