ADS 468x60

02 December 2018

தம்பி ரமேஸ்!

நான் எப்பவோ எழுத நினைத்தது இன்று எழுதுகின்றேன். ஒருவர் பயன் கருதாமல் செய்வதும் பயன் கருதிச் செய்வதும் என இரு செயல்கள் உள்ளது. இரண்டும் கலந்த ஒரு கலவை மற்றும் மாற்றத்துக்கான புதிய அத்தியாயமாக தம்பி ரமேஸ் அவர்களைப் பார்க்கின்றேன். அவர் ஒரு ஆசிரியராக இருந்து மாவட்டத்தில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றம், இன்றய மாணவர்களின் சந்தைக்கான கல்வியின் தேவையை அறிந்த, வேலைவாய்ப்புக்கான படையின் தலைவனாய் உன்னைப் பார்க்கின்றேன். இதை படித்தாலும் பலர் புரிய நாள் எடுக்கலாம்.

ஒரு நல்ஆசானாய் இருப்பதற்குரிய அத்தனை தகுதியும் உன்னிடம் உண்டு தம்பி. நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தவருடம் இந்த ஸ்றீமில் உன்னிடம் படித்து பல்கலைக்கழகம் போக தகுதிபெற்றுள்ளார்கள் என்பதை நினைத்து புழகாங்கிதம் அடைகின்றேன். நான் நாழும் பொழுதும் உன்னை நாடிவந்த, நன்றிமறவாத, சாதி மதம் கடந்த மாணவச் செல்வங்களை உன் வீட்டு வாசலில் கண்ட நாட்கள் சொல்ல முடியாத பெருமையாக நினைத்தேன்.

விரிந்த நோக்கம், பரந்த ஆற்றல் இவை உன்னை இன்னும் மேன்மைப்படுத்தும். கல்விதான் ஒரு மனிதனால் செய்யக்கூடிய பெரிய தானம், பெரிய உதவி அதை எல்லோராலும் பக்குவமாய் பாடுபட்டு மற்றவர்களின் மேன்மைக்காய் வெறும் ஆசிரியர் என்ற நாமத்தினை சொருகிக் கொள்ளுபவர்களால் செய்ய முடிவதில்லை.

அதற்கு அப்பாற்பட்டு ஒரு புதிய தசாப்தத்தின் விடிவெள்ளியாக உன்னை பார்க்கிறேன். இன்னும் தொழில் நுட்பத்துறையில் மாணவர்களின் விருப்பத்தினை திசை திருப்பி அவர்களை எதிர்கால வேலைவாய்ப்பில்லாத திறனில்லாத ஒரு கேவலமான சந்ததியில் இருந்து விடுபட ஆற்றுப்படுத்துவதற்காக நானும் உன்னுடன் கைகோர்ப்பதில் பெருமைப்படுவேன்.

இன்று அன்நிய நாட்டு வேலையாளர் இறக்குமதிக்கு எதிராக திறனாளிகளை உண்டுபண்ணும் செயல்வீரனாக உன்னைப் பார்கிறேன். காரணம் கொள்கை அமைச்சில் இருந்து தெரிந்து கொண்டவைதான் கொஞ்சம். எமது மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொண்டு தொழில் நுட்பக் கல்வியில் கால்வைத்து தொழில் பெறும் வர்க்கமாக மாறனும் அதை தம்பி ரமேஸ் ஒரு புரட்சியாக எமது சமுகத்துக்கு வழங்கி அந்த குறைபாட்டை ஈடேற்ற எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்!
இந்த உலகில் நீங்கள் வந்ததால் ஒரு முத்திரை ஒன்றை விட்டுச் செல்லுங்கள். சுவாமி விவேகானந்தர்.

1 comments:

Brunthapan Sanmuganadan said...

I'm very proud to be and to say " I'm a student of Ramesh sir "������

Post a Comment