
புதுவருஷம் பொறந்திட்டாலே(நான் சொல்ல வாறது ஆங்கிலப் புத்தாண்டு) ஆங்காங்கு அக்சிடன், குடிபோதை கலவரம், குழச்சண்டைகள், பட்டாசு வெடித்து ஆஸ்பத்திரியில் அதிகப்படியாக அனுமதித்தல் இப்படி நெகடிவான சம்பவங்கள்தான் கைலைற்றா வருவது வழமை. ஏன் என்றால் நல்லவிதமான கொண்டாட்டங்களில் யாரும் பாதிக்கப்படுவதில்லையே.
குறிப்பாக இளைஞர்களுக்கு, நானும் அந்த வயதைக்கடந்து வந்தவன் என்ற ஒரு அனுபவத்தினால் எனக்கும் பேச உரிமை உண்டு என நினைத்து இவற்றைச் சொல்லுகின்றேன்.
உங்களுக்கு தெரியும் பெரிய விருட்சமா இருக்கின்ற மரம் ஒன்று முறியும்போது அது பலமான சத்தத்துடன் முறியும் அது எல்லோருக்கும் புதினமாகவும் இருக்கும். அதே நேரம் ஒரு விதை புதிதாக முளைக்கும்போது பாருங்கள் எந்த சத்தமும் இல்லாமல் ஒரு விருட்சத்துக்கான அவதாரமாக அத்திவாரமாக அது அமைந்துவிடுகின்றது.
ஆகவே இளைஞர்களே நீங்கள் நாளைய விருட்சத்துக்கான வித்தாக இருந்து மரமாகி நாலுபேருக்கு நிழல்தரும் மரங்களாகவேண்டும் என்பதே எமது அவா.
என் அன்புக்குரிய இளைஞர்களே! ஏதிர்காலத்தில் இந்தச் சமுகத்துக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நாம் என்ன வகையான நன்மையினைச் செய்யவேண்டும் என்கின்ற நல்ல தீர்மானத்தினை எடுத்துக்கொள்ளும் ஓர்புத்தாண்டாக அமையவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
உங்கள் முன்பு புத்தாண்டு அன்று விடிகின்றபோது இரு தேர்புகள் இருக்கின்றது. ஒன்று உங்களிடமுள்ள கனவுகளை நிஜமாக்குவது அடுத்தது புதிய கனவுகளை உருவாக்குவது அல்லது பழைய நிறைவேறாத கனவுகளை புதைத்துவிடுவது. இதில் புதிய கனவுகளை நிஜமாக்குதல்வேண்டும் எனும் சங்கல்பத்தினை நிறைவேற்றுவதே நமது குறியாக இருக்க வேண்டும்.
அதற்காக நாங்கள் எங்கள் முன்னர் வருகின்ற ஒவ்வொரு வாய்பினையும் பயன்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். ஆனால் நம்மில் பலர் வாய்ப்புக்கள் வருகின்ற பொழுது அவற்றை தவறவிட்டு விடுகின்றோம். ஆனால் வாய்ப்புக்கள் வருகின்ற பொழுது அவற்றை பயன்படுத்துபவர்கள் அறிவாளிகள், வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ளுபவர்கள் புத்திசாலிகள். ஆகவே வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தி வெற்றி காணுகின்ற இளைஞர்களாக நீங்கள் மாறவேண்டும். இதனை இப்புத்தாண்டின் உறுதிமொழியாக இருக்கவேண்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
0 comments:
Post a Comment