
ஐயா! இது பண்டிகைக்காலம், விடுமுறைக்காலம் இந்தக் காலத்தில் உறவினர்களைப் பார்க்க செல்லலாம், பெற்றோர்களைப் பிள்ளைகளும் பிள்ளைகளை பெற்றோர்களும் என பார்க்கச் செல்லலாம். இவர்கள் எல்லாம் தங்களது வருமானத்துக்கு ஏற்ப்ப, சாதாரண வஸ் மற்றும் புகையிரதங்களிலே பயணம் செய்து வரும் நிலையில், இந்த அழுத்தம் சொகுசு வாகனங்களில் பாதுகாப்பு வசதிகளுடன் செம்மையாகச் செல்லும் அரசியல்வாதிகளை உங்கள் வேலை நிறுத்தம் எவ்வாறு பாதிக்கும்??
உண்மையில் இது மிகவும் பாதிக்கப்போவது சாதாரண மக்களையே. இவை பல சிக்கல்களை ஏற்படுத்தி மக்களை மிக மிக சங்கடத்துக்குள் கொண்டு செல்லுவதுடன் அவர்களது திட்டமிட்ட எல்லா நடவடிக்கைகளையும் இந்த கொண்டாட்ட காலங்களில் முடக்கிவிடும்.
இவ்வாறு சிலர் பதவிக்காக பகிஷ்கரிப்பினை செய்கின்ற ஒரு பக்கம் மறுபுறம் உதவிக்காக ஏங்கும் வடக்கு மக்களின் அவல நிலை மோசமடைந்து வருவது கவனத்தில் கொள்ளவேண்டிதொன்றாக உள்ளது.
அழுத்தம் அரசாங்கத்துக்கு கொடுங்கள் மக்களுக்கு கொடுக்காதீர்கள் அவர்கள் ஏற்கனவே விலையேற்றம், வேலை நிறுத்தம், வேலையின்மை, பணப்பெறுமதி குறைவு, கொலை, கொள்ளை போன்ற அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டு பாரிய அழுத்தத்தில் உள்ள நிலையில் இந்தப் பண்டிகைக்காலம், விடுமுறைக்காலம் மாத்திரம் சிறு ஆறுதலைக் கொடுக்கும் அதை கெடுத்துவிடாதீர்கள்.
0 comments:
Post a Comment