ADS 468x60

18 December 2021

மறதி ஒரு தேசிய வியாதி!


பெற்றோல் விலை ஏறினால் மறப்போம்
பால் மா இல்லை என்றாலும் மறப்போம்
கற்றார் பட்டம் தராட்டியும் மறப்போம்
காணாமற் போகும் தேசம் மறப்போம்

வங்கியில் அடித்த பணம் மறப்போம்
வாழக் கிடைக்கா காஸ் மறப்போம்
வாங்கிய மறை வரி மறப்போம்
வானுயரும் செலவு தானும் மறப்போம்

குற்றம் செய்யும் தலைமை மறப்போம்
கொடுங் கோல் ஆட்சி மறப்போம்
ஏற்றம் இல்லா மாற்றம் மறப்போம்
ஏங்கும் விவசாயி ஏமாற்றம் மறப்போம்

பட்டினி மறப்போம் பசளை மறப்போம்
சட்டம் மறப்போம் பெற்ற பட்டமும் மறப்போம்

சீனியை பதுக்கியது மறப்போம்
சீரழிக்கும் கொராணாவை மறப்போம்
கற்ற கல்வியை மறப்போம்
கற்றவரும் செய்த பிழை மறப்போம்

இனம் மறப்போம் குணம் மறப்போம்
வனம் மறப்போம் வறுமை மறப்போம்
பட்ட அடி, பாரிய மண்கொள்ளை
கெட்ட பொருள் கேள்வியில்லா உற்பத்தி
அனைத்தும் மறப்போம் 

ஏனென்றால் மறதி எங்களுக்கு
தேசிய வியாதி

0 comments:

Post a Comment