ADS 468x60

25 December 2021

2022 ஆம் ஆண்டின் துவக்கம் 2021 ஆண்டின் முடிவைவிட பயங்கரமானது.

என்னைப் பொறுத்தமட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான ஒரு வருடத்தை நாம் நெருங்குகிறோம். சோகமான மற்றும் கொடூரமான ஆண்டுகள் நாம் கடந்து வந்துள்ளோம் இருப்பினும் வரப்போகும் இந்த ஆண்டைப்போல் போல பயங்கரமானவை எதுவும் இல்லை என்றே பல பொருளாதார அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சந்தேகத்திற்கு இடமின்றி, வரும் ஆண்டு பொருளாதார ரீதியாக மோசமான ஆண்டாக இருக்கும் என பலர் ஆரூடம் கூறிவருகின்றனர். ஏன் எனில் நாம் கடன்பட்டு கடன்பட்டு கடனின் உச்சத்தில் இருக்கின்றோம்.


எதிர்நோக்கும் கடுமையான பற்றாக்குறை

இந்த ஆண்டு (2021) ஆண்டு கடுமையான பற்றாக்குறையான ஆண்டாக இருந்தது. இது பல அத்தியாவசிய உணவுப் பற்றாக்குறையால் மிகமோசமான நிலைக்குச் சென்றது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகளவு உயர்ந்து கொண்டிருந்த ஆண்டு அதிலும் குறிப்பாக அரிசி, சீனி, பால் மா, கோதுமை மாவு, ரொட்டி, எரிவாயு, மண்ணெண்ணெய், பெற்றோல் போன்றவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது.

வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள்

இது பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் ஆண்டு. கோவிட்-19 ஆல் ஏற்கனவே சீர்குலைந்திருந்த கல்வி, ஆசிரியர்களின் நீட்டிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தால் முடங்கியது. மருத்துவர்கள், செவிலியர்கள், துறைமுகப் பணியாளர்கள், தபால் மற்றும் ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்டோர் அவ்வப்போது வேலைநிறுத்தம் செய்து பொருளாதாரத்தை முடக்கினர்.

இந்த ஆண்டின் இறுதியில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது, அத்தோடு இந்த ஆண்டு நாட்டில் அதிக பணவீக்கத்திற்கு மேலும் ஊக்கமளித்திருக்கின்றது.

வீட்டு பாதுகாப்பு

மக்கள் படும் சிரமங்களை அடிக்கோடிட்டு காட்டுவது போல், வீடுகளில் சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடிக்கும் பயங்கரத்துடன் ஆண்டு முடிகிறது. குட்டுப்பாடில்லாத காஸ் விலையேற்றம் ஒருபுறும் மறுபுறும் அவை பாதுகாப்பு இன்றி வெடித்துச் சிதறும் அச்சம்.

அழிவடையும் விவசாயம்

விவசாயத்திற்கு, குறிப்பாக உணவு உற்பத்திக்கு உர இறக்குமதித் தடை பாரிய அடியாக இருப்பது ஒரு பெரிய அபாயகரம்;. ரசாயன உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களை தடை செய்யும் அவசர, பின்விளைவுகளை கருத்திலெடுக்கா முடிவால் நாட்டின் விவசாயம் பாழடைந்த ஆண்டாக 2021 நீண்ட காலமாக நினைவுகூரப்படும். இதனால் விவசாயத்தை நம்பி வாழும் இலட்சக்கணக்கான மக்கள் அதபோல் அவர்களின் உணவு விளைச்சலை எதிர்பாத்து இருக்கும் கோடிக்கணக்கான பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஆண்டு.

சுதந்திரத்தின் போது ஏழு மில்லியன் மக்களுக்கு அரிசியினை வழங்கிய நாடாக இருந்து 22 மில்லியனுக்கு அரிசியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாறிய நாடு, இந்த ஆண்டு மீண்டும் அரிசி இறக்குமதியைச் சார்ந்ததாக மாற்றப்பட்டது. அதுவும் வெளிநாட்டு நாணயம் இல்லாத நெருக்கடி நேரத்தில்.

கிராமப்புற வாழ்வாதாரங்கள்

இந்த தவறான நடவடிக்கையால் விவசாயத்தின் மீதான சீர்குலைவு, நாட்டின் உணவு உற்பத்தியை மட்டும் பாதிக்கவில்லை, கிராமப்புற வாழ்வாதாரத்தை அடியோடு அழித்துவிட்டது. இன்று இந்நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினரின் உணவுப் பற்றாக்குறை மற்றும் அவற்றிற்கான அதிக விலை மற்றும் குறைந்த வருமானம் காரணமாக உணவை அவர்களால் நினைத்தபடி அணுக அல்லது பெற முடியாத நிலை ஆகியவற்றால் மக்கள் அச்சத்தில் உறைந்த ஆண்டு.

பொருளாதார நெருக்கடி

இன்று போல், ஒருபோதும் இந்த நாடு தனது வெளிநாட்டு நிதி நெருக்கடியை கடுமையானதாக  எதிர்கொண்டது கிடையாது. டோலர் கையிருப்புப் பற்றாக்குறை, அதிக திருப்பிச் செலுத்தவேண்டிய கடன்தொகை, நாணய பெறுமதி இறக்கம், அதிகரித்த இறக்குமதிச்செலவு, வேலையின்மை, உற்பத்திக்குறைவு என வரிசையான பொருளாதார நெருக்கடியை நாம் இந்த ஆண்டில் சந்தித்துள்ளோம்.

ஆனால் சுனாமிப்பேரழிவின் பின்னர் தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்), அரசுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பாரிய அளவில் பணத்தை கொட்டின. வெளி இருப்புக்கள் பெருகின. இந்த மனித அவலத்தால் பொருளாதாரம் காப்பாற்றப்பட்டது. ஆனால் இன்றய கொவிட் தொற்றினால் அவற்றிற்கு நேர்மாறாக நடப்பது கவலைக்குரியதே.

இலங்கை சிவில் யுத்தம்

சுனாமிபோல் மற்ற தேசிய பேரழிவுகள் எமது நாட்டில் இருந்தன. 30 ஆண்டுகால விடுதலைப் புலிகளின் யுத்தம் மற்றும் உள்நாட்டுப் போர் ஆகியவை மற்ற பயங்கரமான பேரழிவுகளாகும். மிக சமீபமாக. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு மற்றொரு மனித சோகம் மற்றும் பொருளாதார பின்னடைவு, பின்னர் கொவிட்-19 உலகளாவிய மற்றும் இலங்கை பொருளாதாரத்தை மிக மோசமாக பாதித்தது.

பயங்கரமான 2021

ஆண்டு முடிவடையும் நிலையில், பல தசாப்தங்களுக்கும் மேலான எமது வாழ்நாளில் இது போன்ற பயங்கரமான ஆண்டை எம்மால் நினைவுகூர முடியவில்லை. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் 74 ஆண்டுகளை நெருங்கிவிட்டாலும், அச்சம், பயங்கரவாதம், இன வன்முறை, கிளர்ச்சிகள், முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போர், பயங்கரமான சுனாமி எனப் பல அத்தியாயங்கள் நாம் கண்டு வந்துள்ளோம். இவற்றில் நாம் சந்திக்காத பேரதிர்சியை நாம் வருகின்ற ஆண்டில் சந்திக்கவேண்டி வரும். இந்த நிலை கடுமையான பற்றாக்குறையின் 1970-77 காலகட்டத்தை விஞ்சுகின்ற அளவுக்கு இருக்கும் என பல பொருளாதார நிபுணர்கள் அச்சமூட்டுகின்றனர்..

பொருளாதார நெருக்கடி

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, சமையல் எரிவாயு, மின்சாரத் தடைகள், பொருட்களின் விலையேற்றம் இவை ஒரு இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இல்லாத ஒரு நிலையினையே, மேல்கூறிய 2021 கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் பற்றாக்குறைகளுடன் முடிவடையும் ஆண்டு 2022 ஆம் ஆண்டு இருக்கப்போகின்றது.. இன்னும் சில நாட்களில் உதயமாகும் புத்தாண்டுக்கான வாய்ப்புகள் இந்த ஆண்டு நாம் அனுபவித்ததை விட இருண்டதாகத் தெரிகிறது.

முடிவுரை

அடுத்த சில வாரங்களுக்குள் சில வெளிநாட்டு உதவிகள் வராத பட்சத்தில் நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும்; என்ற எதிர்பார்ப்புடன் ஆண்டு முடிவடைகிறது. முடிவடையும் ஆண்டு பேரழிவாக இருந்தபோதிலும், நாம் வெளிநாட்டு உதவியைப் பெற்று, கடுமையான கொள்கை மாற்றங்களைச் செய்யாவிட்டால், விடியும் ஆண்டு மோசமாக இருக்கும்.

21 ஆம் நூற்றாண்டின் இந்த 21 ஆம் ஆண்டு இந்த நாட்டிற்கு பாடம் புகட்டும் மிகமோசமான ஆண்டுகளில் ஒன்று.


0 comments:

Post a Comment