ADS 468x60

06 December 2021

புவிவெப்பமடைதல் மக்கள் மத்தியில் அதிக உயர்வுதாழ்வை ஏற்படுத்தி வருகின்றது.

இன்று உலகம் பல முக்கிய பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸின் பரவல் ஏற்கனவே உலகளவில் 269 மில்லியன் நோய்த்தொற்றாளர்களுக்கு வழிவகுத்தது, இதன் காரணமாக கடந்த ஆண்டில் 5.3 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக பருவநிலை மாற்றத்தால் நாடுகளுக்கு இடையே சமத்துவமற்ற நிலை அதிகரித்து, ஏழை நாடுகளில் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளிப்பட்டும், சில பணக்கார நாடுகளின் வளமை மேம்பட்டும் உள்ளது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

புவி வெப்பமடைதல் அல்லது புவியின் காலநிலையின் நீண்டகாலமாக மனிதனால் உருவாக்கப்பட்ட வெப்பமாக்கல், இது கட்டுப்பாட்டை மீறிச் சுழல்வதாக ஐ.நா கூறுவதானது, இன்னும் வரவிருக்கும் பல நூற்றாண்டுகளுக்கு மேலும் காலநிலை இடையூறுகளை எமக்கு ஏற்படுத்துவது உறுதியாகியுள்ளது என்பதனை நாம் உணரத்தலைப்படவேண்டும். வெப்ப மண்டலத்திலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் இதனால் மிக மோசமாக பாதிக்கப் பட்டுள்ளன. மோரிட்டேனியா, நீஜெர் நாடுகளில் தனிநபர் GDP - ஜி.டி.பி., வெப்ப நிலை பாதிப்பு இல்லாத சூழ்நிலையைவிட 40% க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

இன்று கொடிய வெப்ப அலைகள், சூறாவளி மற்றும் இதர வானிலை கோளாறுகள் உச்சமடைந்து உச்சகட்டங்கள் இன்னும் தீவிரமடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. முன்னர் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வெப்ப அலைகள் இப்போது ஒவ்வொரு தசாப்தத்திற்கும் நிகழ்கின்றன என்று உலக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் ஒரு நாளில் மட்டும், அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் வீசிய சூறாவளியில் 70க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் பிற மாநிலங்களில் சூறாவளி பேரழிவை ஏற்படுத்தியதால் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த ஆண்டில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ள - இந்தியாவில் - புவி வெப்பமடைதல் காரணமாக 2010ல் தனிநபர் GDP-ஜி.டி.பி. 31% குறைவாக இருந்தது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. உலகின் ஒன்பதாவது பெரிய பொருளாதார நாடான பிரேசிலில் இது 25% அளவு பாதிப்பாக உள்ளது.

இந்த நிலமை காரணமாக பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. சமீபத்திய உலக சமத்துவமின்மை அறிக்கையில் உலகளாவிய ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகமாகப் பேசப்படுகின்றது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் உச்சத்தில் இருந்ததைப் போலவே இன்றும் அவை பெரிதாக உள்ளன என்று அது கூறுகிறது. 1990 களின் நடுப்பகுதியில் இருந்து திரட்டப்பட்ட தகவலின்படி உலகின் 38% வீதம் சொத்துக்கள்; 1% வீதம் பணக்காரர்களிடையே உள்ளது எனச் சுட்டிக்காட்டுகின்றது, இது 2020 முதல் இன்னும் அதிகரித்துள்ளது. நம்மிடையே உள்ள சொத்து சமத்துவமின்மை அனைத்து பிராந்தியங்களிலும் தீவிர மட்டத்தில் உள்ளது. உதாரணமாக, இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் முதல் 10% வீதமானவர்களே அந்நாட்டின்; தேசிய வருமானத்தில் 57% வீதமானவற்றினை அனுபவித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு கீழுள்ள வசதி குறைந்த 50% வீதமான மக்கள் வெறும்; 13% வீதமான நாட்டின் வருமானங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.

உலக வங்கியின் கூற்றுப்படி, இந்த அதிகரித்துவரும் நெருக்கடியின் விளைவாக 88 முதல் 115 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்படுகிறார்கள், அதனால் புதிதாக தீவிர ஏழ்மையில் தள்ளப்படும் பெரும்பான்மையானவர்கள் தெற்காசிய மற்றும் துணை-சஹாரா நாடுகளில் ஏற்கனவே வறுமை விகிதங்களில் அதிகமாக உள்ளனர். 

2021 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 143 முதல் 163 மில்லியன் வரை உயர்ந்துள்ளது. இந்த 'புதிய ஏழைகள்' ஏற்கனவே பல பரிமாண மற்றும் தொடர்ச்சியான வறுமையில் வாழும் 1.3 பில்லியன் மக்களின் வரிசையில் சேருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஏற்கனவே உலகளாவிய தொற்றுநோய்களின் போது பலமாக பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 காரணமாக வேலை இழப்புகள் மற்றும் சம்பளக் குறைப்புகளை அமல்படுத்திய நம் நாட்டில், காய்கறிகள் மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் உட்பட அடிப்படை உணவுத் தேவைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். 

எனவேதான் புவி வெப்பமடைதலால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வெப்ப மண்டல நாடுகளில் பயிர் விளைச்சல் பெரும் பாதிப்புக்குள்ளாகி உலக மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆகவே பருவநிலை மாற்றம், வறுமை, தொற்றுநோய் மற்றும் சமத்துவமின்மை போன்ற பிரச்சனைகளை சமாளிக்க இன்று உலகம் ஒன்றுபட வேண்டும். அவற்றுக்கிடையேயான பனிப்போரில் பல அப்பாவி மற்றும் வறியமக்களின் தேவைகளில் இருந்து கவனத்தை சிதறடிக்கும் சக்திகள் நமக்கு தேவையில்லை.

இத்துடன் இந்த புவி வெப்பமடைதல் நடவடிக்கைக்கேற்ப நம் பயிர் முறைகளை மாற்றி அமைக்கும் புதிய திட்டம் தேவை என்று கூறும் இந்த ஆய்வாளர்கள். புவி வெப்பமடைதலைப் பொறுத்தவரை இந்த நிலையே நீடிக்கும் என்பதாலும் பெரிய மாற்றங்கள் நிகழ சாத்தியங்கள் குறைவு என்பதாலும், புதிய தானியங்களை பயிர் செய்யும் முறையை கண்டுபிடித்து வெப்பத்தின் வீச்சிலிருந்து உணவைக் காக்க வேண்டும் என்றும் இவர்கள் புதிய யோசனை தெரிவித்துள்ளனர்.

உசாத்துணை

https://www.bbc.com/tamil/global-48137311

https://tamil.webdunia.com/environment-articles-in-tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-109011200040_1.htm

https://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/bb5bc6baabcdbaabaebafbaebbeba4bb2bcd/baabc1bb5bbf-bb5bc6baabcdbaabaeb9fbc8ba4bb2bcd-ba8baebcd-baab99bcdb95bc1-b8eba9bcdba9


0 comments:

Post a Comment