ADS 468x60

24 December 2021

நாடு எதிர்நோக்கும் டொலர் நெருக்கடி தீர்வுதான் என்ன?

 இந்த நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களாலும் இரண்டு முக்கிய விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன. அதில் ஒன்றுதான் நாடு எதிர்நோக்கும் டொலர் நெருக்கடி. மற்றையது பிக்ஸ் ரேட்டிங்ஸ் இலங்கையின் தரத்தை குறைத்துள்ளது. இந்த இரண்டு காரணிகளின் தாக்கம், வர்த்தகர்கள் முதல் சாதாரண குடிமக்கள்வரை அனைவருக்கும் இது சாதகமான ஒன்றல்ல. இது எல்லோரையும் மோசமாகப் பாதிக்கும் என்றே சொல்ல வேண்டும். தற்போது இலங்கை எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சினை டொலர் தட்டுப்பாடு என பரவலாக நம்பப்படுகிறது. ஏனெனில், 2019ஆம் ஆண்டின் இறுதியில் 7642 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு, 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் 5664 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 2021ஆம் ஆண்டளவில் மிகக் குறைந்த அளவான 1100 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் குறைந்துள்ளது.


 ஆனால் தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் இந்த வருட இறுதிக்குள் அது 3,000 மில்லியன் டொலர்களாக இருக்கும் என்று கூறுகிறார். வெளிநாட்டு கையிருப்பு 2020 இல் 5.7 மில்லியன் டாலர்களாக (2019 இல் 7.6 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில்) வீழ்ச்சியடைந்தமையினால், 2021 ஆம் ஆண்டளவில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று பலர் கணித்துள்ளனர். 

மூடிய பொருளாதாரக் கொள்கை

நாடு ஏன் டாலர் நெருக்கடியை சந்தித்தது?, இன்று நாட்டின் பொருளாதாரம் எதிர்நோக்கும் பிரச்சினையை எவ்வாறு தவிர்ப்பது? இவை நம் மத்தியில் இருக்கும் கேள்விகளாகும்.

இன்று இலங்கை சுதந்திரமடைந்து 73 வருடங்கள் கடந்துள்ள போதிலும், 1977ஆம் ஆண்டு வரை டொலர் நெருக்கடி ஏற்படவில்லை, ஏனெனில் எமது மூடிய பொருளாதாரக் கொள்கையினால் ஏற்றுமதி வருமானத்திற்கும் இறக்குமதி செலவினத்திற்கும் இடையிலான வேறுபாடு மிகக் குறைவாகவே காணப்பட்டது. இந்த வேறுபாடு சம்மந்தமான 1950 ஆம் ஆண்டிலிருந்தான தரவுகளை ஒப்பிட்டுப் பார்பது நமது விளக்கத்துக்கு அவசியமானது.

1950 முதல் இன்று வரையிலான டாலர் வருவாய் மற்றும் செலவுகள் (கூ 1 மில்லியன்)

ஆண்டு ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தக இடைவெளி

  1. 1950      297 246 +53
  2.  1955      398 310 +88
  3.  1960      377 421 -44
  4.  1965      401 401- 0
  5.  1970      339 392-53
  6.  1977      767 726 +41
  7.  1978      845 1025 -180
  8.  1980      1065 2052-987
  9.  1990      1984 2686-702
  10.  2000      5522 7320 -1798
  11.  2005      6347 8863 -2516
  12.  2010      8626 13451 -4825
  13.  2015      10547 18935 -7996
  14.  2019      11941 19937 -7996
  15.  2020      10047 16055 -6008
  16. 2021      8934 14938 -6003

மூடிய பொருளாதாரம் வர்த்தக பற்றாக்குறை பிரச்சினையை ஏற்படுத்தவில்லை என்றாலும், பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலையில் இருந்து. அதன்பின் 1978 இல் திறந்த பொருளாதாரம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. 

1978 ஆம் ஆண்டு முதல் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அரசாங்கமும் வெளிநாடுகளில் கடன் பெற்று அந்த கையிருப்புகளை அதிகரித்ததுடன், ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிலையே உருவாக்கப்பட்டு இருந்தது. 1976 இல் 946 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வெளிநாட்டு கையிருப்பு 2005 இல் 2735 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருந்தது.  (பெரும்பாலும் UNP ஆட்சியின் போது), அதுபோல் 2005-2015 காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் 8208 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டது. இந்த நிலை 2019 இறுதிக்குள் 7642 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனவே வெளிநாட்டு டொலர் கையிருப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும் நாம் நெருக்கடியில் இருந்துமீழ ஏற்றுமதி சார் பாரிய உற்பத்திக் கொள்கைகளை ஊக்குவிப்பதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கையில் திறன்சார் மனித வளங்களை உருவாக்கும் கட்டாயத்தில் இருக்கின்றோம். அதுபோல டொலர் கையிருப்பில் பெரிய செல்வாக்கினை கொண்டுள்ள சுற்றுலாத்துறையில் கொவிட்டுக்கு பின் நாம் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.


0 comments:

Post a Comment