ADS 468x60

18 December 2021

ஒவ்வொரு பாவமும் பனியாய்ப் போக பாலகன் பிறந்து வந்தான்!

 ஒவ்வொரு உயிரும் வருந்தும் வேளை
ஆண்டவர் வருகின்றார்
ஒவ்வொரு அடியவர் நினைக்கும் வேளை
எம்முடன் இருக்கின்றார் - இருந்து
ஏற்றங்கள் அருள்கின்றார்
இயேசுவே! இயேசுவே! இயேசுவே! இயேசுவே!

ஒவ்வொரு வாழ்வும் சிறக்கும் வேளை 
ஆண்டவர் மகிழ்கின்றார்
ஒவ்வொரு நாளும் பிறக்கும் வேளை
ஒளியாய் முகிழ்கின்றார்
ஒவ்வொரு பாவமும் பனியாய்ப் போக 
பாலகன் பிறந்து வந்தான்
ஒவ்வொரு பாரமும் உயிர்களுக்காக 
சிலுவையில் ஏற்றுக்கொண்டார்
இயேசு சிலுவையில் ஏற்றுக்கொண்டார்

ஒவ்வொரு ஜீவனின் உறவில் கலந்து
அற்புதம் நிகழ்த்துகின்றார்
ஒவ்வொரு அற்புதம் நிகழ்த்தும் வேளை
உன்னதம் செய்கின்றார்
ஒவ்வொரு துயரமும் உலகில் களைய
மீண்டும் வருகின்றார்
ஒவ்வொரு துயரமும் கடக்கும் கால்களில்
வலிமை தருகின்றார்
தேவ வல்லமை அருள்கின்றார்!

0 comments:

Post a Comment