ADS 468x60

28 March 2024

புதுக்குடியிருப்பு- களுதாவளை வரையான கிராமத்தில் ATM-ஏரிஎம்மின் அவசியம்!

நாம் இன்று தொழில்நுட்ப வளர்சிபெற்ற ஒரு உலகில் வாழுகின்றோம். இந்த வகையில் பல துறை அபார வளர்சிபெற்று தத்தமது சேவைகளை பட்டிதொட்டி எங்கு விஸ்தரித்து வருகின்றது. இருப்பினும், கிராமப்புறங்களில் வங்கிச் சேவைகளை அணுகுவது எப்போதும் ஒரு சவாலாக இருந்து வருகிறது. பணம் எடுப்பது, வைப்பு செய்வது, கணக்கு நிலுவைத் தொகை சரிபார்க்கவது போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக கூட கிலோமீட்டர் கணக்கில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேரம் வீணாவதுடன், போக்குவரத்துச் செலவும் அதிகரிக்கிறது.

பிரச்சனை

அதிக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் அரச தொழில் செய்பவர்கள், வெளிநாட்டில் அதிகம் வேலை செய்பவர்கள், விவசாயிகள், மீனவர்கள், முயற்சியாளர்கள் எனப் பலர் வாழும் எமது பிரதேசத்தில் தமது பணப்புழக்கத்தினை செய்ய நீண்ட தூரம் பிரயாணம் செய்து களுவாஞ்சிகுடிக்கே செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு துவங்கி களுதாவளை வரையிலான பகுதியில் சுமார் 10,000 வங்கி வாடிக்கையாளர்கள்  ஏறத்தாள வசிக்கின்றனர். ஆனாலும் இங்கு எந்த ஒரு ஏடிஎம் வசதியும் இல்லை. இதனால், அன்றாட பணப் பரிவர்த்தனைகளுக்கு மக்கள் பல கிலோ மீற்றர் தொலைவிலுள்ள களுவாஞ்சிகுடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

23 March 2024

பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் இறக்குமதி அதிகரிப்புதான்

கடந்த காலத்திலிருந்தே, நம் நாட்டு மக்கள் நம் சொந்த பொருட்களை விட வெளிநாட்டு பொருட்களையே அதிகம் மதித்து நுகர்கின்றனர். நிற்க, எமது நாட்டில் எவ்வளவு ருசியான, சுகாதாரமான மற்றும் நல்ல நம்பகமான உணவாக இருந்தாலும், வெளிநாட்டில் இருந்து வந்தது என்று சொன்னால், எந்த ஒரு கேள்வி பார்வையோ தயக்கமோ இன்றி வாங்கி நுகர்வதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். தோல் வெள்ளையாக இருந்தால், காய் பெரிதாக இருந்தால், பளபளப்பாக இருந்தால், ஒன்றல்ல நூறு நோய் வந்தாலும் வெளிநாட்டுப் பொருட்களை விரும்புவார்கள் நம் மக்கள். வெளிநாட்டுப் பொருட்களைப் பொறுத்தவரை, இந்த நாட்டு மக்கள் எந்தக் குப்பைக் குவியலையும் விரும்புகிறார்கள் என்பதையே நாம் பழகியிருக்கின்றோம்.

இந்நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு வேகமாகக் குறைவதற்கு முக்கியக் காரணம், தடையற்ற இறக்குமதியாகும். இந்த நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றுவதற்குப் பதிலாக பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து பொருட்களை இந்த நாட்டில் நிரப்புகிறோம். அது பற்றிய அலசல்தான் இது.

20 March 2024

நான் கிழக்கின் சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அதிகாரியாக இருந்தால்!

எனது தேசத்தின் பாகுபாடற்ற சுற்றுலாத்துறையினை எத்தனையோ வகையில் வளர்த்தெடுக்க முடியும். ஆனால் அதற்கான அறிவும், திறனும் ஆற்றலும் இல்லாமையினால் அவற்றை கொண்டாட முடியவில்லை, வருவாய் ஈட்டமுடியவில்லை. ஊழலற்றவகையில் முதலீடகளை ஊக்குவித்தால் மிக பிரமாதமாக இத்துறையினை கட்டியமைக்கலாம். அதற்கான பரிந்துரைகள் இந்த கட்டுரையின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன.

உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆய்வாளர் மார்கோ போலோ தனது முதல் இலங்கைப் பயணத்தில் பின்வருமாறு கூறினார். 'இலங்கை அதன் பரப்பளவில் உலகின் சிறந்த தீவு.' இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கு நினைவு கூர்வோம். மார்கோ போலோ பன்னிரண்டாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்தார். அவர் இங்கு வந்தபோது, இலங்கை முற்றிலும் பொருளாதார இயந்திரமாக இருந்தது. அப்போது சீன மற்றும் ரோமானிய சுற்றுலா பயணிகள் இங்கு அதிகளவில் வந்திருந்தனர். 

17 March 2024

செல்போன் அடிமைத்தனத்தில் உங்கள் குழந்தைகள் சிக்கியுள்ளனரா இதோ விடுதலை!

'இன்றைய இளைஞர்களையும் மாணவர்களையும் பெரும்பான்மையாக பாதிக்கும் பிரச்சனைகளில் ஒன்று செல்போன் பழக்கம்.' செல்போன் என்பது தொடர்பு கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்லாமல், கேம்கள், சமூக வலைத்தளங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட ஸ்மார்ட்போனாக மாறியுள்ளது. இதன் காரணமாக,  அளவு கடந்த செல்போன் பழக்கம் என்ற பிரச்சனை தோன்றுகிறது.

ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் எங்கள் தொலைபேசிகளைச் சரிபார்க்கிறோம். ஆடை இல்லாமல் இருப்பதை விட ஃபோன் இல்லாமல் இருப்பதனை நாம் இன்று நிர்வாணமாக உணர்கிறோம்;;! எங்கள் தொலைபேசிகள் மூலம் பல வசதிகளையும் மற்றும் பொழுதுபோக்குகளையும் அடைவதற்காய் இது நம் வாழ்வின் மிகவும் வசதியான விஷயங்களில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் இதுதான் கொடுங்கோன்மையின் அமைதியான வடிவமாகவும் இருக்கலாம்.

16 March 2024

நான் மட்டக்களப்பில் ஒரு அமைச்சராய் இருந்திருந்தால்!

நேற்றைய நிலவரப்படி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை எழுநூறு ரூபாயைத் தாண்டியது. சந்தையில் நிலவும் பெரிய வெங்காயத் தட்டுப்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் உயிரை மட்டும் பிடிச்சிக்கொண்டு கல்வி, தொழில், வருமானம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், நல்லது கெட்டது எல்லாத்தையும் இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் துன்பப்படும் இந்த நேரத்தில் சாதாரண உணவுப்பொருட்களைக் கூட பெறமுடியாத நிலையில் ஏங்கும் மக்களுக்கு நான் மட்டும் இந்த மண்ணில் நான் ஒரு அமைச்சராய் இருந்திருந்தால். 

பொருட்கள் சேவைகள் தட்டுப்பாட்டுக்கு பல தீர்வினை கொடுத்து நடைமுறைப்படுத்தியிருப்பேன்.

15 March 2024

கிராமம் மகிழ்சிகளின் சொர்கவாசல்

எத்தனை தான் வசதிகள் நகரங்களில் இருந்தாலும், இன்னொருவரை பார்ப்பதற்கும், உறவாடவும் வசதியில்லாத நரகவாழ்க்கைதான் நகர வாழ்க்கை. கனகாலம் கண்டு தம்பிய இஞ்சால வாருங்கோ, மத்தியானம் சாப்பிட்டுத்துப்போங்கோ, இளணீர் ஒன்று குடிப்பமா, எருமைப்பால் இருக்கிறது போடவா, சோளத்த முறிச்செடுங்க தம்பி அப்பப்பா எத்தனை உபசரிப்பு, விருந்தோம்பல் வினாக்கள் எம் கிராமத்து மக்களின் வெள்ளை மனங்களின் வரவேற்பில்.

மரத்துக்கு கீழ பாயை தட்டி பணிய இருக்கச் சொல்லி, செம்பில தண்ணியக்கொண்டு செய்யும் சேமம் இருக்கே! அட 5 ஸ்டார்கொட்டலிலும் கிடையாது போங்க.

13 March 2024

ஏன் இலங்கைக் கல்வியில் சீர்திருத்தங்களை இவ்வாறு செய்ய முடியாது?

  • பிள்ளைகளின் பாடசாலை பிரவேச வயதை நான்கு வயதாக குறைக்கவேண்டும்
  • 10ஆம் தரத்தில் ஜீ.இ.சி. பொதுத்தேர்வு நடத்த வேண்டும்.
  • ஆங்கில வழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கான கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். 
  • தேசிய பாடசாலைகள், மாகாண சபை பாடசாலைகள் என வகைப்படுத்துவதை நிறுத்திவிட்டு இந்த நாட்டில் படிப்படியாக ஒரே வகையான பாடசாலைகளை நிறுவ வேண்டும்.

சில பாடசாலைகளில் ஆய்வகங்கள் இல்லை. நூலகங்கள் கிடையாது, விளையாட்டு மைதானங்கள் இல்லை. அதுபோக நீச்சல் குளங்கள் இல்லை. அழகியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகுப்பறைகள் கிடையாது. அறிமுகப்படுத்தப்படும் நட்பு வகுப்பறைகள் இல்லை. இன்னும் பல சுத்தமாக குடிநீர் கிடையாது, சுகாதாரமான கழிவறைகள் கிடையாது. என்னய்யா கத விடுறீங்க! 

10 March 2024

எமது பட்டிருப்புத் தொகுதி தரிசு வயல்கள்: புத்துயிர் பெறுவதற்கான அழைப்பு

ஏறக்குறய 600 ஏக்கர் வயல் நிலம் செய்கை பண்ணப்படாமல் இருக்கின்றது,

ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ நெல் விளையக்கூடிய நிலம். ஆக மொத்தத்தில் 900,000 கிலோ நெல் விளைச்சலை ஒவ்வொரு வருடமும் இழக்கின்றோம். 

அதுபோல இந்த வயல் நிலங்களில் ஒரு ஏக்கரினை செய்கை பண்ண 10 வேலையாட்கள் தேவை அப்படியானால் இக்கிராமங்களில் உள்ள 6000 வேலையாட்கள் ஒரு சீசனுக்கு உழைப்பினை இழக்கின்றனர்  இல்லையா.

எமது பிரதேசத்துக்கு வளமான விவசாய வரலாறு இருந்தபோதிலும், உணவுப் பாதுகாப்பிற்கு இலங்கை அதிகரித்து வரும் சவாலை எதிர்கொள்கிறது. இவ்வாக்கம் தரிசு நிலங்கள், கைவிடப்பட்ட மற்றும் பயிரிடப்படாத வளமான வயல்களின் அதிகரிப்பு பற்றி ஆராய்கிறது. குருக்கள்மடம் துவங்கி களுதாவளை வரையான பிரதேசத்தை ஒரு ஆய்வாகக் கவனத்தில் கொண்டு, புறக்கணிக்கப்பட்ட இந்தக் காணிகளுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் உணவு உற்பத்தி, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான பரந்த சாத்தியக்கூறுகளை கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. 

இந்த நிலையில் பல ஆயிரக்கணக்கான பயிர்செய்யும் நிலங்கள் பாழடைந்து தருசு நிலமாக மாறிவருவதனைக் காணலாம். குறிப்பாக குருக்கள்மடம் துவங்கி களுதாவளை வரையுள்ள பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் சதுப்பு நிலம் பாழடைந்து கிடக்கின்றது.

07 March 2024

இலங்கையில் தடைகளை உடைக்கும் புதிய பெண் தொழில்முனைவோர்

உலகளவில், தொழில் துறையில் புதிய யுகம் பிறக்கிறது. இதில், பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. உலக தொழில் முனைவோர் ஆய்வுக் கண்காணிப்பு அமைப்பின் (Global Entrepreneurship Monitor - GEM) 2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, உயர் வளர்ச்சி கொண்ட தொழில் முனைவோரில் ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் இந்த விகிதம் அதிகமாக உள்ளது. இலங்கையிலும் பெண்கள் தொழில் முனைவோராக உருவாகும் போக்கு அதிகரித்து வருகிறதா?

01 March 2024

இலங்கை தலைவர்கள் சிறந்த அரசியல் பொருளாதார நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்

2024ம் ஆண்டு உலகளவில் தேர்தல் நடக்கும் வருடமாக அமைகிறது. 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கையிலும் பல தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 

2022ம் ஆண்டு தொடக்கத்தில், சுதந்திர இலங்கையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது நாடு. மிகக் குறுகிய காலகட்டத்தில், இந்தப் பொருளாதார நெருக்கடி தாண்டி, அரசியல் மற்றும் சமூக துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.