நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து உரையாடல் மற்றும் ஆரோக்கியமான விவாதத்தை பேணுவது அரசியல் கட்சிகளின் முக்கிய பணியாகும். நாட்டை நேசிக்கும் ஒரு அரசியல்வாதி இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பிரதிநிதிகளிடம் இத்தகைய ஈடுபாட்டை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால்தான் இவர்கள் மக்கள் பிரதிநிதி என்ற பெயர் பெற்றார்கள். இப்படிப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒரு நாட்டுக்கு கிடைத்த வரம். இலங்கையின் அரசியல் வரலாற்றில் காலனித்துவ கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் இது போன்ற பல அரசியல்வாதிகள் இருந்துள்ளனர். இவர்களிடம் இருந்து பல்வேறு பாடங்களை ஆழமாகப் படித்து விவாதப் பாடத்தில் தேர்ச்சி பெற்ற இத்தகைய வரலாற்றுக் கதைகள் புதிய அரசியல்வாதிகளுக்கும் உதாரணமாக உள்ளது.
25 October 2024
23 October 2024
பணம் பொருள் பெற்று வாக்களித்தால் என்னவாகும்?
ஒரு தேர்தலில் போட்டியிடும் தம்பி ஒருத்தர் என்னிடம் சொன்னார் 'அண்ணன் நம்மட்ட பணம் ஒன்றும் கிடையாது குணம் மட்டும்தான் உள்ளது, கிடைத்தால் தரமான சேவை செய்வேன்' ஆனால் இன்று ஒவ்வொரு வேட்பாளரும் பணத்தை வீசி செலவு செய்வதால், பத்து பதினைந்து கோடி இல்லாமல், மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது போல.
அதன் பின்னர் நீங்கள் சொல்லுவதனை பா.உறுப்பினர் கேட்கவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அந்தக் கேள்விக்கு விலை பெற்றாச்சே!
19 October 2024
எதுடா தேசியம்? மக்களை ஏமாற்றுவதா!
இன்று எமது மக்களுக்கு என்ன நடந்துள்ளது? ஒன்றும் நடக்கவில்லை! ஐந்தைந்து வருடத்துக்கு ஒருதடவை வந்து வந்து அஞ்சி சதத்துக்கும் பெறுமதி இல்லாத வேலைகளைளே மக்களுக்கு செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு நன்மை பயக்கும் எல்லாவற்றினையும் செய்துள்ளனர்.
அதுமாத்திரமா, சிலர் வெறும் கோசமும், வேசமும், ஆர்பாட்டங்களும், ஆக்கிரோசங்களும் செய்வது மக்களை எப்படி வளர்துவிடும்? இது தேசியத்தின் சொத்தான மக்களை எப்படி வலுவூட்டும்?
17 October 2024
தலைவர் மாறினாலும் நம்ம தலையிடி மாறவில்லை- உணவின் விலையேற்ற அச்சுறுத்தல்
புதிய தலைமைத்துவத்தின் கீழ் ஒழிந்துவிட்டது என நினைத்த காலங்காலமாக செயல்படும் மார்க்கெட் மாஃபியா இந்த நாட்களில் மீண்டும் சுறுசுறுப்பாகி வருவதாக தெரிகிறது. ஒவ்வொரு பருவத்திலும் வௌ;வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது.
இன்றைய சந்தையை அவதானிக்கும் போது அரிசி விடயத்திலும் இதே போன்ற வர்த்தக மாபியா செயற்படுவது தெளிவாகின்றது. குறிப்பாக நாட்டு அரிசி (புழுங்கல்), சிவப்புப் பச்சை மற்றும் சிவப்பு புழுங்கல் (நாடு) அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதால், சந்தையில் நாட்டு அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த அரிசி நெருக்கடியைக் கருத்தில் கொண்டால், இந்த நாட்டில் விவசாயக் கொள்கையின் சீத்துமம் என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க முடியும். கீரி சம்பா அரிசி விலையினை கடந்த சில வருடங்களில் வைத்து பார்க்கும்போது மிக அதிகமாக இருந்தது. இதனால், பல விவசாயிகள் நாம் சாதாரணமாக விரும்பி உண்ணும் நாடு மற்றும் சம்பா சாகுபடியை கைவிட்டு, கீரி சம்பா விளைவித்தனர்;.
15 October 2024
இலங்கையில் 2000 ஆண்டுக்கு முன்பதாகவே தமிழர்கள் வாழ்ந்தார்கள்
இலங்கையில் 2000 ஆண்டுக்கு முன்பதாகவே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உண்டா?
ஆம்! ஆதாரம் இல்லாமலா ஒரு இன இருப்புப்பற்றி பேசிட முடியும், ஆதாரம் இல்லாமலா ஒரு தேசியம் பற்றி பேசிவிட முடியும்! ஆதாரம் இல்லாமலா உலக அரங்கில் போய் நிற்க முடியும்?
இலங்கையின் பழந் தமிழ்ப் பெயர் `ஈழம்` என்பதாகும். ஈழத்தினைச் சேர்ந்த சங்க காலப் புலவர் ஒருவரே சங்க இலக்கியப் பாடல்களையே பாடியுள்ளார். அவரது பெயர் ஈழத்துப் பூதன்தேவனார் என்பதாகும். இவரது பெயரின் முன்னொட்டான `ஈழம்` இன்றைய இலங்கையினைத்தான் குறிக்கின்றதா? என்ற ஐயம் உள்ளவர்கள் இவர் மொத்தமாக ஏழு சங்க இலக்கியப் பாடல்களைப் பாடியுள்ளார் அதனைப் பார்க்கவும்
அகநானூறு 88, 231, 307,
குறுந்தொகை 189, 343, 360,
நற்றிணை 366.
13 October 2024
இலங்கையில் ஏற்படவேண்டிய அரசியல் மாற்றம்
இலங்கையின் அரசியல் நிலைமை என்பது பல சவால்களை எதிர்கொண்டு உள்ளது. எளிதாகவே முன்னேற முடியாத நிலைமை மற்றும் அரசியல் முன்னணியில் உள்ளவர்களின் தீர்மானங்கள், நாட்டின் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத விதமாக இருக்கிறது. எனவே, இலங்கையில் ஏற்படவேண்டிய சில முக்கியமான அரசியல் மாற்றங்களைப் பற்றி கீழே விவரிக்கின்றேன்.
இலங்கையின் அரசியலமைப்பில் அடிப்படை மாற்றங்கள் தேவை. மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை உருவாக்குவது அவசியம். ஜனநாயக அடிப்படையில் செயல்படும் முறைமைகள் ஏற்படுத்த வேண்டும்.
12 October 2024
மட்டக்களப்பு மீனவ மக்களைப் பார்க்கும்போது ஏற்ப்படுகின்ற வலி
மட்டக்களப்பு மீனவ மக்களைப் பார்க்கும்போது ஏற்ப்படுகின்ற வலி சொல்லி மாளாது. அத்தனையும் இம்மக்களை வழி நடத்துகிறவர்களையே சாரும்..
பாருங்கள் இந்தப் பக்கம் கிறுகினா வயல், அந்தப்பக்கம் கிறுகினா கடல், மலை, காடு, மேடு அத்தனை வளங்களிலும் எத்தனை பயன்...
இருந்தும் என்ன??
ஏன் நாங்கள் இன்னொருவனுக்கு உழைத்துக் கொடுக்கவேணும், பாருங்கள் இன்று பலருக்குக் கடற்கரை இருக்கின்றது ஆனால் ஒரு கறிக்கு மீன் கூடக் கிடைப்பதில்லை.
11 October 2024
கட்சியோ சின்னமோ ஒரு விடயமல்ல!
தனிமனித ஆளுமைதான் ஒரு வழிகாட்டிக்கு முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த ஆழுமை மக்கள் நலன் சார்ந்து அவர்களை மீட்பதற்காக சிந்திததுத் திட்டமிடுதலிலும் அதனை செயற்படுத்துவதிலும்தான் தங்கியிருக்கின்றது.
அரசியல் தலைமைகளில் அதிகாரமுள்ளவர்களாக இருப்பவர்கள் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவேணடும், அனர்த்தங்களின் போது ஆஜராகவேண்டும், அத்துடன் சாணக்கியத்துடன், சாமர்த்தியத்துடன் பணியாற்றவேண்டும் என்பதை ஏற்கும் மனோபாவம் அரசியல் செய்யும் எல்லோரிடத்திலும் இருப்பது அவசியம்.
என்றும் மக்களின் நலன்களுக்காக கடமை உணர்வுடன் செயற்பட்டால் நம் மக்களைவிட விட மட்டற்ற மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
05 October 2024
நீங்கள் தேடும் சரியான இடத்தில் உங்களை பொருந்திக்கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையில், நீங்கள் யாராக இருப்பது, உங்கள் திறமை
மற்றும் உங்களின் உண்மையான மதிப்பு என்னவென்று அறிந்துகொள்ளும் சரியான இடத்தை
கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம்.
ஒரு சிறிய கதையை நம் வாழ்வோடு இணைத்துப் பார்க்கலாம்
ஒரு தந்தை தனது மகனுக்கு, 50 ஆண்டுகளாக வலுவாக இருந்த ஒரு பழைய வோல்க்ஸ்வேகன் பீட்ல்
காரை கொடுத்தார். தந்தை மகனிடம், இதற்கு என்ன மதிப்பு வழங்குகின்றனர் என்று முதலில் விற்பனை
மையத்துக்கு செல்லச் சொன்னார். மகன் சென்று வந்தபின், "அவர்கள் இதற்கு $10,000
தருவதாகச் சொன்னார்கள், ஏனெனில் இது மிகவும் பழையதாகவும் பயன்படுத்தப்பட்டதாகவும்
தெரிகிறது" என்றான்.