இலங்கையில் 2000 ஆண்டுக்கு முன்பதாகவே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உண்டா?
ஆம்! ஆதாரம் இல்லாமலா ஒரு இன இருப்புப்பற்றி பேசிட முடியும், ஆதாரம் இல்லாமலா ஒரு தேசியம் பற்றி பேசிவிட முடியும்! ஆதாரம் இல்லாமலா உலக அரங்கில் போய் நிற்க முடியும்?
இலங்கையின் பழந் தமிழ்ப் பெயர் `ஈழம்` என்பதாகும். ஈழத்தினைச் சேர்ந்த சங்க காலப் புலவர் ஒருவரே சங்க இலக்கியப் பாடல்களையே பாடியுள்ளார். அவரது பெயர் ஈழத்துப் பூதன்தேவனார் என்பதாகும். இவரது பெயரின் முன்னொட்டான `ஈழம்` இன்றைய இலங்கையினைத்தான் குறிக்கின்றதா? என்ற ஐயம் உள்ளவர்கள் இவர் மொத்தமாக ஏழு சங்க இலக்கியப் பாடல்களைப் பாடியுள்ளார் அதனைப் பார்க்கவும்
அகநானூறு 88, 231, 307,
குறுந்தொகை 189, 343, 360,
அவர் பாடிய சங்க காலப் பாடல்களைக் கீழுள்ள இணைப்பில் காணலாம்.
ஈழத்துப் பூதன்தேவனார் - தமிழ் விக்கிப்பீடியா (wikipedia.org)
அதே போன்று 1310ம் ஆண்டில் (CE 1310 ) `சரசோதிமாலை` என்ற நூலானது இயற்றப்பட்டது. இது ஒரு பழங்கால காலக்கணிப்பு நூலாகவிருந்தது. இன்று சோதிட நூலாகக் கணிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து `செகராசசேகரம்` என்ற ஒரு பழந் தமிழ் மருத்துவ நூல் ஒன்று நான்காம் பராக்கிரமபாகு மன்னன் கேட்டுக்கொண்டதற்காக CE 1380 - 1414 இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டது. இந்த நூலின் 8000 பாடல்களை இன்றும் கீழுள்ள இணைப்பில் காணலாம்.
செகராசசேகர வைத்தியம் - நூலகம் (noolaham.org)
அதே போன்று 13ம் 17ம் நூற்றாண்டுகளிற்கிடையே ஈழத்தில் பின்வரும் நூல்கள் படைக்கப்பட்டன.
பரராசசேகரம்
தக்கிண கைலாசபுராணம்- {பண்டித ராசர்}
கண்ணகி வழக்குரை- {சகவீரர்}
கதிரைமலைப் பள்ளு
திருக்கரசைப் புராணம் - {கரசைப் புலவர்}
இரகு வம்சம் – {அரசகேசரி}
வையாபாடல் – {வையாபுரி}
வியாக்கிர பாத புராணம் - {வைத்திய நாத முனிவர்}
கைலாய மாலை - {முத்துராச கவிராயர்}
0 comments:
Post a Comment