மட்டக்களப்பு மீனவ மக்களைப் பார்க்கும்போது ஏற்ப்படுகின்ற வலி சொல்லி மாளாது. அத்தனையும் இம்மக்களை வழி நடத்துகிறவர்களையே சாரும்..
பாருங்கள் இந்தப் பக்கம் கிறுகினா வயல், அந்தப்பக்கம் கிறுகினா கடல், மலை, காடு, மேடு அத்தனை வளங்களிலும் எத்தனை பயன்...
இருந்தும் என்ன??
சொந்தக் கடற்கரையில் சொந்த ஊர் மக்கள் வேற்று மக்கள் போல விறைத்து நின்று ஏமாற்றத்துடன் போவதனை பல தடைவ கண்டுள்ளோம் அல்லவா? உடனே ஒரு மீன் மிச்சமும் இல்லாமல் கொடுத்து வைத்தவன்போல் கூடையோட கொண்டு போயிடுவானுகள்.
நாம் நினைத்தால் இந்த பெறுமதியான மீன்களைக் கொண்டு மாசு போடலாம், கருவாடு போடலாம், இன்னும் பல உணவுப் பொருட்களை தயாரித்து நாங்கள் அதன் முழுப்பயனையும் அனுபவிக்கலாம் அல்லவா. இதனால் இன்று வேலை இல்லாமல் இருக்கும் பலருக்கு வேலைகளை இதன் மூலம் உருவாக்கலாம் இவல்லையா?
அல்லது எமக்கென்று ஒரு சந்தையை அமைத்து அதன் மூலம் நாமே மீன்களின் விலையை நிர்ணயி;கும் சக்தியாக மாறலாம் அல்லவா?
களுதாவளையில் ஆ ஊ என ஒரு சந்தையை துவங்க முன்வந்தனர். ஆனால் பல வாத்தக சக்திகளுக்கு அது அடியாய் விழும் என அனைத்தும் நிறுத்தப்பட்டிருப்பதே எமது தலைமைகளால் செய்யும் முன்னெடுப்பா?
எனவே இங்கிருந்து அவற்றை வறுமைக் கோட்டில் வாடும் இந்த மீனவர்களுக்கு இந்த வசதியையும் வழியையும் காட்டிக் கொடுத்தால் மிகவும் குறைந்த வருமானம் ஈட்டி கஸ்ட்டப்படுகின்ற எம் ஏழைமக்களின் தொகையை கணிசமாகக் குறைக்கலாம் அல்லவா,,,,
யாரிங்கே யாரிங்கே... ஓ யாருமில்லையா இதுதான் நம்ம தலைவர்கள்.... வாருங்கள் எல்லா அனுபவசாலிகளும்,; புத்திஜீவிகளும் கைகொடுத்து எம்மக்களைப் பாதுகாப்போம்... சும்மா அம்மா என்றதும் அது இது என்றதும் வெறும் நாடகங்கள்... இன்னும் பின்தங்கிய குலமாக எம் மக்கள் இருக்கக் கூடாது... நாங்கள் ஒன்று கூடி இந்த மக்களை எல்லா வகையிலும் கட்டியெழுப்புவோம் வாருங்கள் வாருங்கள்.
0 comments:
Post a Comment