தனிமனித ஆளுமைதான் ஒரு வழிகாட்டிக்கு முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த ஆழுமை மக்கள் நலன் சார்ந்து அவர்களை மீட்பதற்காக சிந்திததுத் திட்டமிடுதலிலும் அதனை செயற்படுத்துவதிலும்தான் தங்கியிருக்கின்றது.
அரசியல் தலைமைகளில் அதிகாரமுள்ளவர்களாக இருப்பவர்கள் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவேணடும், அனர்த்தங்களின் போது ஆஜராகவேண்டும், அத்துடன் சாணக்கியத்துடன், சாமர்த்தியத்துடன் பணியாற்றவேண்டும் என்பதை ஏற்கும் மனோபாவம் அரசியல் செய்யும் எல்லோரிடத்திலும் இருப்பது அவசியம்.
எனவே அந்த தலைமத்துவ விருப்பம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் பின்வருவனவற்றை ஒப்பிட்டுப்பாருங்கள்!
1. பதவி அதிகாரம் பட்டம் என்பன இறைவன் தந்த கொடை என்பதை சிரமேற் கொண்டு, மக்கள் அதற்கான வித்துக்கள் என்பதை மறக்காமல். பொறுப்புக்களை, கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவது.
2.மக்களின் எஜமானன் என்பதற்கு பதிலாக மக்களின் சேவகன் என்று சதாவும் நினைவில் கொள்வது.
3. சமூகத்தில் இடம் பெறும் கூட்டு முயற்சிகளுக்கு பங்களிப்பு செய்வது, நற் பணிகளை செய்வதற்கு முனைபவர்களை பரந்த மனதோடு ஆதரிப்பது, தட்டிக் கொடுப்பது, ஊக்கப்படுத்துவது அவற்றை விரும்புவது.
4. தன்னை விட பிறரை முற்படுத்துவது. யாரையும் குறைத்து மதிப்பிடாதது. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடுவது, காழ்ப்புணர்வுடன் செற்படுவதில் இருந்து விடுபடுவது.
5. ஆக்கபூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் வரவேற்பது, பிறரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது.
6. ஜனநாயக மரபுகளையும்,விழுமியங்களையும் பேணுவது, மதிப்பது.
7.உரியவர்களுக்கு உரிய அந்தஸ்தையும், மதிப்பையும், கௌரவத்தையும் வழங்குவது.
8. சமயத் தலைவர்கள் மூத்தோர், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் முதலானோரின் தொடரான ஆலோசனைகள், வழிகாட்டல்களை பெறுவது.
9. பிறர் பற்றி கிடைக்கும் தகவல்களை முறையாக ஊர்ஜிதம் செய்வது, உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காது விவேகத்துடன் செயற்படுவது.
10. வெற்றி, தோல்வி, இன்பம் ,துன்பம் முதலான சந்தர்ப்பங்களில் பொறுமைக் காப்பது.
0 comments:
Post a Comment