ஒரு காலத்தில் சாதாரண தரம் மற்றும் உயர்தர சித்திபெற 'குதிரை ஓடி' பாசு பண்ணிய பலர், இன்று பல பல பெரிய உத்தியோகத்தில் உலாவருகின்றனர். அதுவும் நம்மள ஒரு மாதிரி ஏளனமா வேற பாக்குதுகள், அவருடைய 'ரை' என்ன? புள் ஸ்லிப் சேட் என்ன, சூ என்ன... அப்பப்பா?
அதுதான் ஒரு அடிமட்டக் கல்வி என்றெடுத்துக்கொள்வோமே, ஆனாலும் இலங்கையில் வழங்கப்படும் கல்வியை அந்தந்த ஆசிரியர்களின் கல்வித்தரத்தை வைத்தே நாம் மதிப்பிடுகின்றோம். நன்கு கல்வியில் மேலோங்கியவரிடமே எமது குழந்தைகளை கல்வி கற்க அனுப்புகின்றோம். அந்த நம்பிக்கையிலும் கலப்படம் என்றால் என்ன பண்ணுவது?
பாராழுமன்றத்தினைச் சுத்தப்படுத்தினால் மாத்திரம் போதாது, கல்விப்புலத்தினையும் கழுவிச் சுத்தமாக்கணும். இத்துறையில் உள்ளவர்களை, அவர்களது கல்வியின் உண்மைத்தன்மையைத் துருவித் துருவி ஆராயவேண்டும். அப்படி ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிவரும்.
இன்று சபாநாயகருக்கு எழுந்துள்ள பிரச்சினை நாளை பல போலி ஆய்வாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என்போருக்கும் வரும் வாய்ப்புள்ளது. என்னைப் பொறுத்தளவில், சிலர் அரசியல் பின்கதவால் வந்தவர்கள்! இல்லை எனச் சொல்ல முடியுமா? நீங்கள் நன்றாகப் பாருங்கள் அங்கு நேர்மைக்கு, தராதரத்துக்கு, தகுதிக்கு, அனுபவத்துக்கு இடமிராது! ஏல்லாம் பாரபட்சம்.
காக்கை பிடிக்க கற்றுக்கொள்ளாதவன், கள்ள வளிகளைக் கற்றுத் தேறாதவன் கல்விப்புலத்தில் முன்வர முடியாத ஒரு நிலை உயர் கல்வி நிறுவனங்களில் அதிலும் குறிப்பாக நமது பிராந்தியத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறானவர்கள் மூலம் வழங்கப்படும் கல்வி எப்படிங்க எதிர்கால சச்ததியை வளப்படுத்தும்? அது அந்த மக்களை நெறிப்படுத்தும்?
தயிர் சட்டியும், இறால் கறியும், நண்டுக்குழம்பும், சாராயப் போத்தல்களும், பணமும், மண்டியிடலும்தான் சிலருக்கு அந்தப்பட்டத்தை இலகுவாகப் பெற்றுக்கொடுத்திருக்கின்றது என்றால் நம்ப முடியுமா? ஆனால் அவர்களது பெயரை கூகுளில் சென்று தேடிப்பாருங்கள் எத்தனை கட்டுரைகளை அவர்கள் இச்சமுகத்துக்கு ஆய்வு செய்து எழுதியுள்ளனர் என? ஓன்றுமில்லாமல் இருக்கும் அல்லது ஒன்று இரண்டு தெண்டிச்சு போட்ட பேப்பர்களைக் காணலாம்.
சரி நம்மள கரைச்சல்படுத்திறானுகள் என்று பக்கத்தில் உள்ள இந்திய மிகப் பின்தங்கிய பல்கலைக்கழகங்களில்தான் அதிகம்பேர் சென்று இந்தப்பட்டங்களைப் பெற்று பாடம் படிப்பிக்கின்றார்கள், பதவி உயர்வும் பெறுகின்றனர். "உன்ன நான் காட்டிக் கொடுக்கல்ல என்ன நீ காட்டிக்கொடுக்காத" என்ற நிலையில் பல "தகுதியில்லாதவர்களின் கூடாரமாக" மாறிவருகிறது நமது ஒரு சில பல்கலைக்கழகங்கள். இவர்களினால் செய்யக்கூடிய ஒரே வேலை கெட்டிக்காரர்களை தட்டிவிடுவிட்டு அவர்களைப்போன்ரோரைத் தட்டிக்கொடுப்பதுதான்.
அதுபோல அந்ததந்தக் காலத்துக்கு வருகின்ற அரசியல்வாதியை வளைத்துப்போட்டு அவர்கள் ஊடாக, பதிவி உயர்வு, பதவி நீக்கம், வோட் மெம்பர் தெரிவு, புதிய பதவி நியமனம் என எல்லாவற்றையும் அரசியல்மயமாக்கி பின்வழியால் வருவதையே வழிவழியாய் செய்யும் அயோக்கியர்களின் கூடாரமாக சில இடங்கள் மாறிவிட்டது.
அதுபோல இதனையே சில மாணவர்கள் பின்பற்றுகின்றனர், அவர்களுக்கு பார்டிகள், பிறசன்கள், இன்னோரன்ன உதவிகளை செய்பவர்களுக்கே கிளாஸ்களைக் கொடுத்து அவர்களுக்கு அல்லக்கைகளாக முன்னேற்றிவிடுகின்றனர். அது பிற்காலத்தில் அவர்களுக்கே ஆப்பாக முடிந்த கதைகளும் இல்லாமல் இல்லை. இந்த அசிங்கமான கலாசாரத்தை இந்த அரசாங்கத்தில் மாற்றாவிட்டால் எந்த அரசாலும் இந்த ஊழல், பின்கதவு, காக்கை கலாசாரத்தை மாற்றமுடியாது.
போலிக் கலாநிதிப் பட்டம் என்றால் என்ன?
போலிக் கலாநிதிப்
பட்டம் என்பது பல வருடங்களும் உழைப்பும் தேவைப்படும் உயர்கல்வித் தரங்களை பூர்த்தி
செய்யாமல் எளிதாகப் பெறப்படும் பட்டமாகும். இவை பெரும்பாலும் "தரக்குறைவான
கல்வி நிறுவனங்கள்" அல்லது "தர்மபுரி டிகிரி மில்கள்" மூலம்
கொடுக்கப்படும், பணத்தை மட்டும் தேவைப்படும்
சான்றிதழ்களாகும்.
இலங்கையில் நிலமை
இலங்கையில் போலிக்
கலாநிதிப் பட்டங்கள் ஒரு பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டன. சமூகத்தில்
மரியாதையையும், தொழில்முறை முன்னேற்றத்தையும் அடைய
விரும்பும் சிலர், இவற்றை வாங்கி, தங்களது வலிமையற்ற திறமைகளை மறைத்து பொய்
புகழ் பெறுகின்றனர். குறிப்பாக, கல்வித்
துறையிலும் அரசுத் துறைகளிலும் இதற்கான சோதனை முறைகள் பலவீனமாக உள்ளதால், இவர்கள் முக்கியமான இடங்களை அடைய
முடிகிறது.
போலிக் கலாநிதிப் பட்டங்கள் பெருகும் காரணங்கள்
- சமூக
மரியாதை: இலங்கையில்
"படித்தவர்" என்ற வார்த்தைக்குப் பெரும் முக்கியத்துவம் உள்ளது. அதனால் "கலாநிதி" என்ற பட்டம், மிகவும் மதிப்புக்குரியதாகக்
கருதப்படுகிறது.
- தொழில்முறை
முன்னேற்றம்: பல்வேறு தொழில்முறைகளில், உயர்கல்விப் பட்டம் கொண்டவர்களுக்கு
முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
- கட்டுப்பாடற்ற
சோதனை முறை: கல்விச்சான்றிதழ்களை சரிபார்க்க பலவீனமான அமைப்புகள்
இருப்பதால், போலிக்
பட்டங்கள் எளிதில் பரவி வருகின்றன.
- தகுதிகள்
வாங்கும் இலகு வழி: யதார்த்த கலாநிதி பட்டங்களைப் பெறுவதற்காக காலமும்
பணமும் செலவிடாமல், குறைந்த
செலவில் பட்டங்களை வாங்க முடியுமென்ற ஆசை.
இலங்கையில் இதன் தாக்கங்கள்
- கல்வித்துறையின்
நம்பகத்தன்மை குறைதல்: நிஜமான பட்டங்களின் மதிப்பையும், கல்வித் தரத்தையும் இது
கேள்விக்குள்ளாக்குகிறது.
- பொது
நம்பிக்கை இழப்பு: போலிக் பட்டம் கொண்டவர்கள் முக்கிய இடங்களை
பிடிக்கும்போது, அரச மற்றும்
கல்வித்துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கை குறைகிறது.
- திறமையற்ற
நிர்வாகம்: போலிக் பட்டங்கள் கொண்டவர்கள் தகுதி இல்லாமல் மிக
முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது, நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
- திறமையானவர்களின்
வெளியேற்றம்: கற்றவர்களும், திறமையானவர்களும்
அங்கீகாரம் பெறாமல், வெளிநாடுகளுக்கு
செல்வதைத் கட்டுப்படுத்த முடியாத இழப்பு நிலை.
சில எடுத்துக்காட்டுகள்
- சமீபகால
விவகாரங்கள்: 2024-ல், இலங்கையில் பல முக்கியமான நபர்கள்
போலிக் கலாநிதிப் பட்டங்கள் வைத்திருப்பது வெளிப்படையாகி பரபரப்பை
ஏற்படுத்தியது.
- உலகளாவிய
நிலைகள்: Chronicle of Higher Education வெளியிட்ட அறிக்கையின்படி, இவ்வகைப் பட்டங்கள் ஏராளமான பணத்தை
உலகளவில் ஈட்டுகின்றன.
- கட்டுப்பாட்டின்
பற்றாக்குறை: வெளிநாட்டு அல்லது உள்நாட்டு பட்டங்களை சரிபார்க்க ஒரு
மையமயமான அமைப்பு இலங்கையில் இல்லை.
இதை எதிர்க்க என்ன செய்யலாம்?
- சான்றிதழ்
சோதனை முறைகளை பலப்படுத்தல்: பணி வழங்கும் நிறுவங்களும், அரசுத்துறைகளும் படிப்புச்
சான்றிதழ்களை உறுதிப்படுத்த வேண்டும்.
- பொது
விழிப்புணர்வு: போலிக் பட்டங்களின் தீமைகள் குறித்து ஊடகங்கள் மூலம்
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- கட்டுப்பாட்டு
சட்டம்: போலிக்
பட்டங்களைப் பயன்படுத்தும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை உருவாக்க
வேண்டும்.
- அங்கீகாரம்
கொண்ட கல்வி நிறுவனங்கள் பட்டியல்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி
நிறுவனங்கள் பற்றிய தேசிய தரவுத்தொகுப்பை உருவாக்க வேண்டும்.
- உண்மையான
கல்வியாளர்களுக்கு ஆதரவு: உள்ளூர் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுலபமாக உயர்
கல்வி பெறுவதற்கான நிதியுதவிகள் வழங்க வேண்டும்.
உண்மையில் கல்வி என்பதை நாம் ஒருவரிடம் இருந்து பொருளாகவோ விலை கொடுத்தோ பெற முடியாது. நாம் கற்றால் மட்டுமே கல்வியை பெற முடியும். அனுபவம் மூலம் கற்பதும் கல்விதான் அவ்வகையில் ஒருவன் பிறப்பது முதல் இறப்பது வரை கற்றுக் கொண்டே இருக்கின்றான். ஆனால் இது தலைகீழாக இருக்கிறது இன்று.
அவ்வழியில் ஒருவன் நற்குணம் பெற்றும் உயர்வான எண்ணங்கள் பெற்றும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற கல்வி என்பது அவசியமாகும். விலங்குகளில் இருந்து மனிதனை பிரித்துக்காட்ட கல்வி அவசியம் என்கிறார் வள்ளுவர். ஆனால் நாம் இதில் எங்கு இருக்கின்றோம் என்பதனை சுயபரிசோதனை செய்தால் விளங்கும்.
ஒளவையார் 'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் மாசறக்கற்றோன் சிறப்புடையவன் மன்னனுக்கு தன் தேசமல்லாமல் சிறப்பில்லை கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்கிறார்.
எனவே கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது இதன் மூலம் புலனாகின்றது. மேலும் கல்வியை அறம் சார்ந்து கற்பவன் மேலும் சிறப்புடையவன் ஆகின்றான். எனவே கல்வி அறம் சார்ந்த ஒன்று, அது நேர்மையான வழியில் இருந்து கிடைப்பதாய் இருக்கணும் அதைத்தான் நாம் நேசிக்கின்றோம்.
முடிவுரை
போலிக் கலாநிதிப் பட்டங்கள் இலங்கையின் கல்வித் தரத்திற்கும் சமூக நம்பகத்தன்மைக்கும் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்குகின்றன. இதனைத் தடுக்க அரசாங்கம், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உண்மையான உழைப்புக்கு மதிப்பளிக்கும்போதுதான், இலங்கை அறிவுத்துறையின் மதிப்பு மீண்டும் உயரும்.
'பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது' என மகாத்மா காந்தி கூறுகின்றார். இவ்வாறான கல்வியின் சிறப்பை அறிந்து நாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டும். ஆனால் கல்லாத பொய் சான்றிதழ்கள் உங்களை என்றோ ஒரு நாள் கைவிட்டு விலகும்.
விவேகசிந்தாமணி
0 comments:
Post a Comment