ADS 468x60

31 December 2024

2024இன் நூறாவது ஆக்கத்தில் நூறாவது நன்றி சொல்லக்கூடாதா!

இது நன்றி கூறும் நேரம், நினைந்து பார்க்கும் நேரம்! பாடம் படித்துக்கொள்ளும் நேரம்! நாம் பொதுவாக 2024இல் பல சவால்களை கடந்து வந்துவிட்டோம்! அவற்றை சாதாரணமாக திரும்பிப்பாருங்கள் அந்தத்தூரம் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும். உங்களையே நீங்கள் நம்மமறுப்பீர்கள்! ஆம் அதுதான் சாதனை, பாடம், சவால்களைக் கடத்தல். இதற்காக நான் பலருக்கு இங்கு நன்றி கூறவேண்டியிருக்கின்றது, இப்பிரலபஞ்சம் உட்பட. அத்துடன் நாம் கண்ட பிரதான சவால்களையும், விட்ட தவறுககளையும் பாடங்களாக சொல்ல இருக்கின்றேன். எல்லாம் மாற்றங்களைநோக்கிய தேற்றங்களே!

இது வெள்ளிச்சரத்தில் 2024ம் ஆண்டின் நுர்றாவது ஆக்கம். அதனை ஒரு நன்றிப்பெருக்கான ஆக்கமாக எழுத ஆசைப்படுகின்றேன்.

இந்த உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் எதையாவது கொன்றே ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும், நீங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கோடிக்கணக்கான உயிரினங்கள் இறக்கின்றன. பல தாவரங்கள், கண்களால் பார்க்க முடியாத மிகச் சிறிய உயிரினங்கள் உங்களுக்காகவே இறக்கின்றன.......

இப்போது செய்ய முடிவது ஒன்றுதான். சாப்பிடுவதையாவது நன்றியுணர்வுடன் சாப்பிடலாம்.

உணவின் ஒவ்வொரு கவளத்தையும் நன்றியுணர்வுடன் சாப்பிட வேண்டும். ஆம்இ நன்றியுணர்வுடன் சாப்பிட்டு பாருங்கள். என்ன சாப்பிட்டாலும் அது உடலுக்கு ஆனந்தமாக இருக்கும்.

உடலுக்குத் தேவையான அளவு மட்டும் சாப்பிடுங்கள். சிறப்பான உடல் நலத்துடன் இருப்பீர்கள். இந்த அணுகுமுறை ஒரு சிறந்த மாற்றத்தைக் கொண்டுவரும். பல உயிர்கள் நமக்காக இறக்கின்றன. சிறிதாவது நாம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டாமா? நமக்காக உயிர்விடும் உயிரினங்களுக்காக சிறிதாவது உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்தானே, நன்றியுணர்வுடன் சாப்பிடுங்கள், நம்மால் செய்ய முடிந்தது அதுதான்-நன்றி

நாம் ஏன் வாழ்கிறோம்? என்ற கேள்வி கேட்பதற்கு முன்னால் நாம் ஏன் பிறந்தோம் என்று கேட்டு இருக்கிறீர்களா? நாம் கேட்கவேண்டும். அதில் இருந்து தான் முதல் கேள்வி பிறக்கிறது. கேள்விகள் கேட்க கேட்க தான் நாம் வளர்கிறோம். கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். சரி நாம் ஏன் பிறந்தோம்? நாம் ஏன் வாழ்கிறோம்? விலங்குகள் கூடத்தான் பிறக்கிறது விலங்குகள் கூடத்தான் வாழ்கிறது அதற்கும் நமக்கும் என்ன வித்தியாசம். நம்மால் ஒரு மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பதே வித்தியாசம்.

இந்த உலகத்தில் பிறகும் எல்லா ஜீவராசிகளும் நான் தான் ப்ரஹ்மன் என்கிறது அட்வைத வேதாந்தம். அஹம் ப்ரம்ஹஸ்மி. ஒவொரு மனிதனுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கிறது அது எது என்பதை அவன் உணர வேண்டும் என்பதற்காக தான் வாழ்கையே. இந்த வாழ்க்கையில் தோல்விகள் வெற்றிகள் எல்லாம் கடந்து ஒன்று இருக்கிறது அது தான் நடுநிலைமை. அமைதி. அந்த அமைதி நிலைக்கு வருவது கடினம். 

நாம் கற்றதை வைத்து கொண்டு ஒரு மாற்றம் உருவாக்கவே நாம் வாழ்கிறோம். இந்த உலகில் கற்றது கைம்மண்ணளவு தான்/ இன்னும் என்ன இருக்கிறது என்று கற்று கொள்ள நாம் வாழ வேண்டும். என்ன சொல்கிறது இந்த பிரபண்டம் என்று ஆராய வேண்டும். நிறைய தெரிந்து கொள்ள நாம் வாழவேண்டும்.

ஆக நாம் உலகை மாற்ற முதலில் நம்மை மாற்ற வேண்டாமா? 

மனிதன் தவறு விடாமல் வாழ்வதில்லை.  அந்தத்தவறுகள் நம்மை சிந்திக்க திருத்த கற்றுக்கொள்ள தேவையானவற்றை புகட்டினால் அது வரவேற்கத்தக்கது, அல்லாது அது ஒருவனை இன்னும் தவறுசெய்யத் தூண்டினால் அது மோசமான விளைவுகளை ஊக்குவிக்கும். இதில் நல்ல மாற்றம் தேவை.

இந்த உலகத்தில் சிறப்பாக வாழும் பலர் நன்றிப்பெருக்குடையவர்கள். நன்றியல்லாதவர் நலிவடைந்தே போவர். அதுவும் வள்ளுவர் சொல்லும் ஒரு கருத்து 'திணையைப்போன்று ஒருவர் செய்யும் நன்றி சிறிதாக இருப்பினும் நன்றியின் மகத்துவம் அறிந்தோர் அதனை பனைமரத்தினைப்போல பெரிதாக மதிப்பர்' என்கின்றார். 

இந்தப் பிரபஞ்சம் நமக்கு எவ்வளவோ செய்துகொண்டு இருக்கின்றது. அதனை நான் உட்பட ஒரு கணம் கண்மூடிச் சிந்தித்துப்பார்பதில்லை. அந்த நேரத்தினை வீணாக அடுத்தவரை வீழ்துவதிலும், நம்மை குறை சொல்லுவதிலும் கழித்துவிடுகின்றோம்.

இரண்டு கண்ணும் தெரியாதவர்கள், கால்கள் முடியாதவர்கள், செவிப்புலன் இழந்தவர்கள் எத்தனையோ சாதனைகளை ஏனைய உடலுறுப்புக்களை வைத்துக்கொண்டு சாதிக்கும் பொழுது, இவையெல்லாம் இறைவனால் தரப்பட்டும், நாம் எனக்கு அது இல்லை இது இல்லை என குறைபட்டுக்கொள்ளுகிறோம் இல்லையா நண்பர்களே!

சரி, உண்மையில் நாம் ஒவ்வொருவரும் பல மாற்றங்களை கடந்து வந்திருக்கின்றோம் கடந்த ஆண்டு. அதில் இலங்கை நாட்டின் ஜனாதிபதி, அரசாங்கம் அனைத்தும் மாற்றம் பெற்றுள்ளது. தேவையற்றவர்கள் என மக்கள் எண்ணியவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். அது ஒரு பெரிய மாற்றம்தான் இல்லையா?

நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். முதலில், ஒருத்தருக்கு குடும்பம், குடும்ப உறவுகள், நட்புகள், சமுகம் என ஒருவரது வாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருக்கும். அதில், என் அப்பாவையும் அம்மாவையும் பார்துக்கொள்ளுவதில் அல்லும் பகலும் அயராது முன்னின்ற என்சார்பான குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றிசொல்லி முடியாது. உங்களை எப்போதும் என் நெஞ்சில் வைத்திருக்கின்றேன். நன்றியுணர்வோடு இருக்கின்றேன்.

எனது வாழ்க்கையில் முதல் இழப்பு என் தந்தையின் பிரிவுதான். நான் மிக மன உழசை;சலுக்கு ஆளாகினேன். ஆனால் எனக்கு எல்லாவகையிலும் பலர் ஆற்றுப்படுத்தும், ஆறுதல்கூறும் உதவிகளை உற்றார், உறவுகள் நண்பர்கள் உடனிருந்தும் தூர இருந்தாலும் உடனிருப்பதுபோலும் உதவிகளைச் செய்து என்னை இழந்த சோகத்தில் இருந்து இறக்கிவைத்தனர். 

இவர்களுக்கெல்லாம் நன்றி சொல்ல ஒரு நா போதாது எனக்கு. இதில் என்னோடு தொடர்பு பட்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் கோடி.

அப்படியே காலம் மெதுவாக நகரும் போது தேர்தல் வந்தது. அந்த நேரத்தில் பல மாற்றங்களை நோக்கி களமிறங்க பல புதிய முகங்கள் கொண்டுவரப்பட்டன. மட்டக்களப்பில் இருந்து புத்திஜீவிகள், நலன்புரி அமைப்புக்கள், தனிப்பட்டவர்கள் என என்னை களமிறக்க பேராதரவு நல்கினர். இறுதியில் அரசியலுக்குள் அரசியல் இருப்பது தெரியாமல் அதில் இடம்பெற முடியாது போனது. இருப்பினும் அந்த அலை எனது அரசியல் பிரவேசத்துக்கு ஆரம்பப் புள்ளி. இவர்கள் அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றிகள்.

உங்களுக்குத் தெரியும், ஒரு காலத்தில் என்னை 'வெள்ளிச்சரம் சீலன்' என்றே அழைத்தனர். அந்தளவுக்கு அதில் மக்களுக்கு நன்மை பகர்கும் கருத்துக்களை கற்றவற்றில் இருந்து மற்றவர்க்கு அளித்தேன். மில்லியன் வாசகர்கள் நெருங்கிவிட்ட நிலையில் அதில் 1000 ஆக்கங்களை ஊக்கம் கெடாமல் அடைந்தேன். அது எனது மயிற்கல்லாக இருக்கின்றது. அதில் உள்ள வாசகர்கள், ஊக்குவிப்பாளர்கள் இதனை முதலில் எனக்குச் சொல்லித்தந்த தம்பி ரமேஸ் ஆகியோருக்கு நன்றி சொல்ல விரும்புகின்றேன். அதற்கு அப்பால் எனது குடும்பத்தினர் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்தைகளே இல்லை.

என் மனைவிக்கு நன்றி சொல்லவேண்டும். ஏனெனில் இந்த லப்டொப் அவள் தந்த பரிசு, அதில்தான் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் கோர்கப்பட்டன. வாடகை வீடுகளில் வாழ்ந்தாலும் சொந்த சொற்களில்தான் இவற்றை எழுதிவருகின்றேன். நன்றிகள் கோடி.

இன்னும் பல நண்பர்கள் இருக்கின்றார்கள், நான் சோர்ந்துபோகும் போதெல்லாம் ஊக்கமருந்தாக அவர்களது பொன்னான நேரத்தினையும், காலத்தினையும் என்னோடு செலவிடுபவர்கள். அதிலும் சில சகோதரர்கள் வைத்தியத்துறையில் உள்ளனர். ஆவர்கள் எனக்கு பல தடைவ இலவசமாக ஆலோசனை சொல்லி எத்தனை உதவிகளை செய்கின்றனர் மறக்க முடியாத அந்த உதவிகளையெல்லாம் எப்போவாவது திருப்பிக்கொடுக்கவேண்டும் என நினைத்து வைத்திருக்கின்றேன். நன்றிகள் கோடி.

இந்தப் பிரபஞ்சம் எனக்கு எத்தனை விடயங்களை தந்துதவிக்கொண்டிருக்கின்றது. மூச்சுக்குக் காற்று, பேச்சுக்கு வார்த்தை, செவிக்கு ஓசை, வாய்க்கு ஊரசியான உணவு, வாழ தேவையான இடம், நடக்கக் கால்கள், நல்லது செய்ய கைகள், உடுக்க உடை, படுக்கக் கட்டில், துடைக்கத் துணி, எடுக்கக் காசி, படிக்கப் பல நுர்ல்கள், பழக மனிதர்கள், உழவப் பூமி, உல்லாசமாய் இருக்க இயற்கை, கைபேசி, கணணி, கடிகாரம், ஒளி, குளிர், மழை, வெப்பம், இருள், இறையன்பு எத்தனை எத்தனையப்பா எனக்கு நீங்கள் தந்துகொண்டிருக்கின்றீர்கள். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எத்தனை தடைவ நான் அதைச் சொன்னாலும் அடங்காது என் பிரபஞ்சமே! நன்றி மறக்காமல் இருப்போம்.

நம்மை நேசிப்பவர்களுக்காக. நாம் ஏன் வாழவேண்டும் என்று யோசிப்பவர்கள் நாம் போனால் நம்மை பற்றி யோசிக்கும் கூட்டத்தை பற்றி யோசிப்பதே இல்லை. இதனால் தான் அதிகப்படியான தற்கொலைகள். நாம் ஏன் வாழவேண்டும் என்று யோசிக்கும் கூட்டங்கள் ஒரு முறையாவது நாம் பிரிந்தால் என்னவாகும் என்று நினைத்தால் தற்கொலைகள் நடக்காது. நம்மை நேசிக்கும் கூட்டம் எல்லா இடத்திலும் இருக்கிறது. உதாரணமாக, நீங்கள் பைக் எடுத்து செல்லும் போது ஸ்டாண்ட் எடுக்காமல் சென்றால் எங்கிருந்தோ ஒரு குரல் உங்களை பார்த்து ஸ்டாண்ட் எடுக்கவில்லை என்று கத்தும். நம்மை எல்லாரும் நேசிக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. நாம் ஏன் வாழவேண்டும்? நம்மை நேசிப்பவர்களுக்காக. (We must live for people who will miss us when we are gone)

இதுவும் ஒரு நன்றியுணர்வுதான், நம்மை நமக்குத் தெரியாமலே நேசிப்பேருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.

அனைவருக்கும் நன்றி உணர்ச்சி அவசியமானது.நம்மைப் பெற்றவர்கள், நமது வாழ்க்கையில் இன்பத்திலும் துன்பத்திலும் உடன் வரும் துணைவி குழந்தைகள், காலத்திற்கு அன்றாடம் நம்மை நகர்த்தும் நாள்கள், உணவு, உணவு தரும் விவசாயிகள், நம்மோடு உடன் வரும் நம்மை சார்ந்த உறவுகள் நட்புகள், நமக்கு வேலை கொடுத்து நமது வாழ்க்கை தரத்தை உயர்த்திய நிர்வாகம் அதிகாரிகள் அனைவரும் நன்றிக்கு உரியவர்கள்.நமக்கு கல்வியறிவு தந்து நமது அறிவை வளர்த்த ஆசிரியர்கள் என்றும் நன்றிக்கு உரியவர்கள்.புத்தக வாசிப்பு மூலம் நமக்கு மன தெளிவை உற்சாகத்தை அளிக்கும் நல்ல கருத்துகளை மனதில் விதைக்கும் எழுத்தாளர்கள் தத்துவவாதிகள் அறிஞர்கள் கவிஞர்கள் கதாசிரியர்கள் அனைவரும் நன்றிக்கு உரியவர்கள்.நமது முன்னேற்றத்திற்கு உதவும் நமது வாழ்க்கையை நமது நலனை எண்ணும் அனைவரும் நன்றிக்கு உரியவர்கள் தான்.நமது வளர்ச்சிக்கு உதவிய அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று நாம் மனதார வாழ்த்துவோம்.

அனைவருக்கும் வர இருக்கும் 2025 மகிழ்சி நிறைந்த கவலை குறைந்த ஆண்டாக இருக்க வாழ்துகிறேன்.

0 comments:

Post a Comment