ADS 468x60

20 December 2024

சிஸ்டம் சேஞ்ச் ஆகுமென்றார் யேசு பிரானே!- படுர கஸ்டம் சேஞ்ச் ஆகவில்லை யேசு பிரானே!

சிஸ்டம் சேஞ்ச் ஆகுமென்றார் இயேசு பிரானே!

கஸ்டம் சேஞ்ச் ஆகவில்லை இயேசு பிரானே!

யேசு பிரானே யேசு பிரானே!

 

ஊத்தும் மழை குறையவேண்டும் இயேசு பிரானே

உப்பளங்கள் பெருக வேண்டும் இயேசு பிரானே

தென்னை செழித்து ஓங்கவேண்டும் இயேசு பிரானே

தேங்காய் விலை குறையவேண்டும் இயேசு பிரானே

 

காக்கை குருவி வாழவேண்டும் இயேசு பிரானே!

காடழிப்போர் ஒழிய வேண்டும் இயேசு பிரானே!

நெல்லுமணி விழைய வேண்டும் இயேசு பிரானே!

நெனச்சவிலையில் அரிசி வேண்டும் இயேசு பிரானே!

 

புயலப்போல வந்த சுமை இயேசு பிரானே!- அள்ளிப்

புலத்தில் எம்மை வீசியது இயேசு பிரானே!

அந்த நாட்டில் தவிக்கின்றோமே இயேசு பிரானே!- நாங்க

சொந்த நாட்டில் வாழ வேண்டும் இயேசு பிரானே!

 

மறைந்த மகிழ்சி கிடைக்க வேண்டும் இயேசு பிரானே!- நாட்டில்

நிறைந்த தொழில் பெருக வேண்டும் இயேசு பிரானே!

குறைந்தசெலவில் குடும்பம் நடத்த இயேசு பிரானே!- எமக்கு

கூட வருவாய் கிடைக்கவேண்டும் இயேசு பிரானே! 

 

அடுத்த ஆண்டும் மலர வருது இயேசு பிரானே!- எமக்கு

அருளைப் பொழியும் நேரமிது இயேசு பிரானே!

எடுப்பார் கையில் பிள்ளையாக இயேசு பிரானே!- இன்னும்

எத்தனை நாள் வாழுவது இயேசு பிரானே!

 

0 comments:

Post a Comment