இன்றைய உலகம், மனித நேயத்தை பெரிதாக மதித்து வருவதில்லை. பணம், அதிகாரம், மற்றும் சமூகப் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்கின்ற ஒரு சுயநலமிகு சூழல் நிலவுகிறது. ஆனால், நம்முடைய வளர்சி என்பது வெறுமனே பொருளாதார ரீதியில் மட்டுமே இருக்கக்கூடாது, ஆன்மிக ரீதியிலும் வளர்ந்து இருக்க வேண்டும்.
நாம் தற்போதைய சமுதாயத்தின் ஆன்மிக வீழ்ச்சி குறித்து உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்விதம் நகராமல் இருந்தால், எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களின் அடிப்படையில் தடைகள் உருவாகக் கூடும். ஆன்மீகம் பல இடங்களில் அட்டகாசமாக மாறியுள்ளதனை நாளுக்கு நாள் அவதானித்து வருகின்றோம்.
நாம் படிக்கும் நாளாந்த செய்தித்தாள்களில் கூட அதிகமானவை சமூக முறைகேடுகள், குற்றங்கள் மற்றும் பல்வேறு மனக்கசப்பான வேதனைகளைக் குறிப்பதையே காணலாம். இது நம் சமுதாயத்தின் ஆழ்ந்த ஆன்மிக வீழ்ச்சியைக் காட்டுகிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.
சமுதாய நீதியும் சுயநலத்தின் தாக்கமும்
சமூகத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி மிக முக்கியமானது, ஆனால் நம் அரசியல் வரலாற்றில் சுயநலத்தின் அடிப்படையில் பலர் சமுதாய வளங்களை சுரண்டி அதனை கேள்விக்குறியாக்கியிருக்கின்றனர். அதிகாரத்தின் பேரில் நடத்தப்படும் சுயநலமிகு நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஆன்மிகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
போதைச்சூழல் மற்றும் பொருளாதாரத்தின் தாக்கம்
நமது நாட்டில் போதைப்பொருள் பிரச்சினை, பொருளாதாரத் திறவுகோலத்தோடு இணைந்து அதிகரித்தது. நுகர்வுவாத ஆசைகளால் மயங்கிய சமூகத்தில், தங்கள் உழைப்பை ஊக்குவிக்காமல்;, பணம் சேர்க்கும் முயற்சிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆட்சியில் உள்ளவர்களுக்கு தெளிவான திட்டங்கள் தேவை. ஆனால், பல முயற்சிகளும் வெற்றியடையாமல் போயுள்ளன. இதற்கு மேலாக, ஊடகங்கள் மற்றும் மதத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஆன்மிக சீரமைப்பு தேவை
நமது நாட்டில் மதகுருக்களின் உபதேசங்கள், பெருந்திருவிழாக்கள், மற்றும் பல்வேறு ஆன்மிக நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வந்தாலும், அவை மக்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கின்றன என்பதே கேள்வியாகும். ஆன்மீகத்தை இல்லாமல் செய்து வீண் செலவு, கலாசார சீரழிவு, உணவு வீணடிப்பு என்பன திட்டமிட்டு நடக்கும் பல ஆலயச் சூழலை நாம் நாளாந்தம் பார்கின்றோம். ஆலயங்களில் நிதி மோசடி, வெளிப்படைத்தன்மையின்மை, பதவிமோகம், அரசியல் ஈடுபாடு, இயற்கை வளங்களை அலயத்தின் பேரால் அழித்தல், தேவைக்கு அதிகமான விழாக்கள், செலவுகள் என்பன எதையும் வளர்த்துவிடும் திட்டமில்லாத மாற்றங்களே. ஆகவே ஆன்மிக வளத்தை மீண்டும் பெற சிறந்த திட்டங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறான ஒரு சூழலில் அரசின் 'க்ளீன் ஸ்ரீலங்கா' போன்ற வேலைத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், அதனால் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களை எட்ட முடியும்.
எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த, ஆன்மிக ரீதியில் செழித்த நாடு ஒன்றை உருவாக்க இந்த முயற்சிகள் அவசியம். ஆழ்ந்த ஆன்மிகத்திற்கான விழிப்புணர்வுடன் செயல்படும் நாடே வெற்றி பெறும்.
தீர்வுகளுக்கான வழிமுறைகள்
ஆன்மிக வளர்ச்சி என்பது வெறும் மத பரப்புரைகளை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல், அதை சமூகத்தின் நடைமுறையில் செயல்படுத்துவதிலே இருக்க வேண்டும். ஆளும் அரசாங்கம் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும். ஊடகங்கள், மத குருக்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்த பங்கு வகித்தால், இது ஒரு சமூக புரட்சியாக மாறும்.
ஆன்மிக வளத்தை மேம்படுத்த, குழந்தைகளின் கல்வித் திட்டங்களில் மதமும் ஆன்மிகமும் அடங்கிய பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும். உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்கும் வகையில், வாழ்வியல் கல்வியைக் சேர்த்து கற்பிக்க வேண்டும்.
மதங்களின் பங்கு
இந்த நாடு பல மதங்களின் ஒருங்கிணைந்த பயணத்தைக் கொண்டுள்ளது. இந்த பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். மதங்கள் தரும் நல்ல ஒழுக்கக் கருத்துக்களும் வாழ்க்கை நெறிமுறைகளும் சரியாக மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டால், ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.
அதுபோலவே, பொதுவாழ்வின் ஒழுங்குகள் மற்றும் சட்டங்கள் வலுவாக செயல்படுத்தப்பட வேண்டும். சமூகத்தில் சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எந்த ஒரு சுயநலமான செயல்களுக்கும் இடம் அளிக்காமல், ஆட்சியாளர்களும் மக்களும் நேர்மையாக செயற்பட வேண்டும்.
முடிவுரை
இன்றைய உலகம் முற்றிலும் மாற்றத்திற்குத் தேவையான ஒரு நிலைமையில் இருக்கிறது. மக்களும் அரசாங்கமும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆன்மிக வளம்இ சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி ஒருங்கிணைய முடியும்.
அரசாங்கம் மட்டும் போதுமானதாகாது; அனைத்து தரப்பினரும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். கல்விஇ மதம்இ அரசியல் போன்ற அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் ஒரு ஆன்மிக வளமான இலங்கையை உருவாக்கலாம்.
இந்த முயற்சிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டால்இ எதிர்காலத்தில் ஒரு சக்தி வாய்ந்தஇ தன்னிறைவான இலங்கை கண்டிப்பாக உருவாகும்.
0 comments:
Post a Comment