போராட்டத்தின் பின்னணி: சமீபத்திய கலவரம் 2018-ல் பிரதமர் ஷேக் ஹசீனா எடுத்த முடிவின் அடிப்படையில் உருவானது. மாணவர்களின் போராட்டத்துக்குப் பதிலளிக்க, 1971ல் பாகிஸ்தான் எதிரான சுதந்திர போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவு மீண்டும் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது, இது மாணவர்களின் எதிர்ப்பை தூண்டியது.
20 July 2024
வங்காளதேச கலகம்: மாணவர் எழுச்சியின் விளைவுகள்
14 July 2024
புத்திஜீவிகளின் வெளியேற்றம்: நாட்டின் வளர்ச்சிக்கு பேரிடர்!
படித்த இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவது நாட்டின் வளர்ச்சிக்கு பேரிடராகும். 30 வருட யுத்த காலத்தில் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறியதைப் போலவே, தற்போதும் கல்விமான்கள், புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறி வருவது துயரமானது.
யுத்த காலத்தை விடவும் தற்போது கல்விமான்கள் மற்றும்
புத்திஜீவிகளின் வெளியேற்றம் அதிகம். மருத்துவர்கள்
உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது நாட்டின்
வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.
சுகாதாரத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறையால், அரசு வைத்தியசாலைகளில் ஒரு மருத்துவர் ஒரு நாளைக்கு 200க்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
13 July 2024
களுதாவளையில நீ களவெடுத்தால் நண்பா
களுதாவளையில நீ களவெடுத்தால் நண்பா
களுவாஞ்சிகுடியில
பொலிஸ் பிடிக்கும்
கண்ட கண்ட
கருமமெல்லாம் பழகிப்புட்டா
கண்ணு மண்ட
உள்ளுக்குப்போய் நோய்பிடிக்கும்
களுதாவளையில நீ
களவெடுத்தால் நண்பா
களுவாஞ்சிகுடியில பொலிஸ் பிடிக்கும்
வீதி விபத்துக்கள் தொடர்ந்துகொண்டே போகும் பேரழிவு
2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 1103 வீதி விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 1154 பேர் உயிரிழந்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் 2200 வீதி விபத்துகளில் 2557 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை இது ஒப்பிடுகையில் காட்டுகிறது.
10 July 2024
களுதாவளைச் சுயம்புலிங்கர் பேராலயம் ஒரு ஆன்மீக நிறுவனமாகும் கனவு!
'களுதாவளைக்கு நீங்க வந்து பாருங்க-அங்கு
கணநாதன் சந்நதியில் நின்று பாருங்கள்
ஆறாத காயங்களும் ஆறி போகுங்க-அது
ஆறாவிட்டால் வந்து என்னைக் கேளுங்க'
எழுத்தினை இப்படி துவங்குகின்றேன். எனது சிறிய வயசில் பசுமரத்தாணிபோல் பதிந்த பல விடயங்களில் என்னுடைய அம்மம்மாவின் பாசம் அன்பு என்பவை மறக்கமுடியாதது. ஆம் எனது அம்மம்மா என்னுடனும் எல்லோருடனும் சிரித்த முகத்துடன் அன்பாகவும் பாசமாகவும் இருக்கும் ஒரு இறை நம்பிக்கைகொண்டவர். அவர்; பார்ப்பதற்கு எப்பொழுதும் நெற்றி நிறைய நீறணிந்து, சுத்தமாக உடைதரித்து மங்கலமாக இருப்பார்.
26 June 2024
வர்தக மற்றும் சுற்றுச்சூழல் ராஜாங்க அமைச்சு மட்டக்களப்பாருக்கு வரப்பிரசாதமா?
நண்பரும் அமைச்சருமான ச.வியாழேந்திரனின் அன்பான அழைப்பின்பேரில் அண்மையில் அவரது உத்தியோகபூர்வ வாசல்தலத்தில் சந்தித்து பல மணிநேரம் எமது நீண்டநாள் நட்பினை பகிரக்கிடைத்தது. அரசியல் மற்றும் அபிவிருத்தி சார்ந்தே பலவிடயங்களை எமக்குள் கதைத்துக்கொண்டோம். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் அவரது செயற்பாட்டுக்கு கிடைத்த தீனியாக இந்த புதிய அமைச்சுப்பதவி அமையும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
13 June 2024
இல்லத்தின் பாதுகாப்பு: விழிப்புணர்வும் கட்டுப்பாடும் அவசியம்
இந்த மாணவி, மின்சார தைக்கும் இயந்திரத்தின் மோட்டார் கம்பிகளை சுவரில் உள்ள சுவிட்ச் சொக்கெட்டில் இணைக்க முயற்சித்து தோல்வியடைந்தார். பின்னர், மின்சாரக் கம்பிகளை வெட்டி, கம்பிகளை நேரடியாக சொக்கெட்டில் செருகுவதன் மூலம் இணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.








