ADS 468x60

30 September 2018

எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையும் முயற்சியாண்மை விஸ்த்தரிப்பின் தேவையும்.


Image result for entrepreneurship sri lankaஇன்றய இலங்கையில், நிதி அமைச்சின் கருத்துக்களின் படி கடந்த காலங்களில் ஏறத்தாள 22,000 வணிக கடன்களை வழங்கியுள்ளதாகவும் இது ஒரு முக்கியமான படியாக இருப்பினும், இளைஞர்களை தொழிற்கயிற்சி சார்ந்து ஈர்ப்பதும் அவர்களிற்கு மாற்று வாழ்வாதாரங்களை கண்டு பிடிக்க உதவுவதும் மிகவும் சவாலானதாக உள்ளது. ஆனால், இது மிகவும் செலவீனமானதும் அதே வேளையில் அவர்கள் வருமானமீட்ட மிக நீண்ட காலம் தேவைப்படும் என்றும் கணிக்கப்படுகிறது.



நகர்ப்புறங்களில் உள்ள இளைஞர்களுடன் ஒப்பிடும் பொழுது அநேகமானவர்கள் கிராமப்புறங்களிலேயே உள்ளனர். இங்குள்ளவர்கள் ஆரம்பத்தில் அவர்களிற்கான தொழிற் பயிற்சிகளை பல அரச மற்றும் தனியார் ஸ்த்தாபனங்களின் மூலம் பெற ஆர்வங்காட்டினாலும் கிராமப்புறங்களில் உள்ள தொழில் பற்றாக்குறை காரணமாக அவர்களிடையே திறனைப் பெற்றுக்கொள்வதற்கான ஆர்வம் குறைவடைந்து போகின்றது. அத்துடன் இந்த பயிற்சிகளுக்கான செலவு அதிகமாக உள்ளமையுடன் அவற்றைப்பெற்றதன் பின் பொருத்தமான வேலையினைப் பெற்று வருமானத்தினை ஈட்டிக்கொள்ள நெடுங்காலம் காத்திருக்கவேண்டியமை ஆகியன பாரிய சவாலாக உள்ளது.  இது மாத்திரமன்றி இளைஞர்கள் தொழிற்பயிற்சிகளின் பின்னர் உள்ழூர்களில் உள்ள ஒரு சில ஆளணி முகவர்கள் மூலம் உள்வாங்கப்பட்டு அவர்களுடைய திறமைகள் மளுங்கடிக்கப்படுவதுடன் இறுதியில் வேலைப் பாதுகாப்பு இன்றி கைவிடப்படுகின்றனர்.

ஒரு சில அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் தொழில் பயிற்சி மற்றும் திறன்சார் கல்வி; கருத்தில் கொள்ளப்படாவிட்டாலும், உலகநாடுகளின் பொருளாதார பின்னடைவுகளின் பின்னர் அவற்றில் இருந்து மீண்டுவர பொருளாதார மீள்கட்டமைப்பு மற்றும் தொழில் பயிற்சி, திறன்சார் கல்வி;யை வளர்த்துவிடல் ஆகியவற்றுக்கிடையே நெருக்கமான தொடர்பினை பேணினர். இந்த நிலையில் ஜேர்மனி, ஒஸ்ரியா மற்றும் சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் அவற்றினை நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக தொழிற்பயிற்சியை முன்னிலைப்படுத்திய பொருளாதார மீளுருவாக்கம் காட்சிப்படுத்தப்பட்டது. இது அடிப்படையில் நிலைத்திருக்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் கலிவியில் பலடவகைத்தன்மை போன்றவற்றை வேண்டி நின்றது.

இந்த கல்வியில் பலடவகைத்தன்மை முறையானது மூன்றாம் நிலை கல்வி வழங்கல், வாழ்நாழ் முழுவதும் கற்றலுக்கான ஏற்பாட்டினைக் கொண்டிருத்தல் அத்துடன் முக்கியமாக தொழில் மற்றும் வாழ்க்கைக்கான திறண் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்துதலினைக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்றாம் நிலை தொழில் கல்வி மற்றும் பயிற்சியானது முறைசார்ந்த மற்றும் முறைசாரா முறையில் உலக ஊழிய சந்தையை நிரப்ப தயார் செய்யப்படுகின்றது.

மேலதிகமாக, கல்வியில் பலடவகைத்தன்மை முறையானது குறிப்பாக பொருளாதாரத்தில் உள்ள திறன்களின் தேவையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு தேசிய அபிவிருத்தி மூலோபாயமாகவும், குறிப்பாக தொழில் நுட்பத் துறையில் மனிதவள அபிவிருத்தியில் மேம்பாட்டை உண்டு பண்ணும் மார்க்கமாகவும் பார்க்கப்படுகின்றது. இது மனிதவள மற்றும் பொது அபிவிருத்தி மூலோபாயம் கருத்தில் கொள்ளும் விடயங்களான, தரமான மற்றும் கேள்விக்கேற்ற கல்வி. பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி என்பனவற்றினைக் கொண்டுள்ளது. இவை பொருளாதார மற்றும் தொழில் துறை அபிவிருத்தியில் செல்வாக்கினைச் செலுத்தும் ஒன்றாக அமைவதனால், முதலீட்டாளர்கள், அரசாங்க கொள்கைகள் அதுபோல் தொழில் துறைகள் மீதான முதலீடுகள் என்பனவற்றின் சாத்தியப்பாட்டினை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை எடுத்துச் செல்லும் ஒன்றாக அமைந்துவிடும்.

மூன்றாம் நிலை தொழில் கல்வி மற்றும் பயிற்சியை பிரதானப்படுத்துதல், எதிர்பார்ப்பது நாட்டின் வளத்தினை புதுப்பித்தலை அதிகப்படுத்துவது மாத்திரமில்லாமல் பிரயோகப்படுத்தக்கூடிய வகையில் புதிய பாடத்திட்டங்களை கல்வி மற்றும் பயிற்சி கொண்டமைய வேண்டும்.

இவை தனியார் மற்றும் அரச பயிற்சி நிறுவனங்களுக்கிடையேயும் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கும் தொழில் தருனர்களுக்கு மிடையேயும் சுமுகமான கூட்டுறவினை வலுப்படுத்த வேண்டும்.  உண்மையில் அரசின் தலையீடு இல்லாமல் இளைஞர்கள் உலகின் தொழில் சந்தையில் நுழைவதென்பது சவாலானது. அதுபோல் பல வேறுபட்ட தனியார் துறைப் பங்களிப்புடனான முன்னெடுப்பும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. 

ஆகவே இந்த இளைஞர்களுக்கான தொழில் கல்வி மற்றும் தொழில்வாய்ப்பினை ஏற்ப்படுத்த வெறுமனே அரசாங்கம் மாத்திரமல்லாமல் தனியார் துறையினர் அரச சார்பற்ற நிறுவனத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்த முயற்சியில் இளைஞர்களுக்கான வாழ்வாதாரத்தினை நிர்ணயனம் செய்து அவர்களின் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு ஆவண செய்யவேண்டும். 

0 comments:

Post a Comment