ADS 468x60

04 November 2018

பாதிக்கப்பட்ட மக்களிடையே நுண்ணறிவை வளர்க்கும் நூலகத்திட்டம்

'இன்று வாசிப்பவர்களே நாளைய தலைவர்களாகின்றனர்' என்கின்ற வாசகத்துக்கு ஏற்ப நாளைய தலைமுறைகளை இன்றே உருவாக்கும் நுண்ணறிவினை வளர்க்கும் நூலகத்திட்டம் இலங்கை மற்றும் அவஸ்த்திரேலிய விருதுபெற்ற மாணவர் சங்கத்தினால் (Sri Lanka Australia award alumina  association )  மட்டக்களப்பு, பட்டிருப்பு வலயத்தில் அமைந்துள்ள மண்டூர் 40, ஜீ.ரி.எம் பாடசாலைக்கு ஒரு தொகை நூலகத்துக்கான தளபாடங்களும் மாணவர்களுக்கான புத்தகங்களும் 3.11.2018 அன்று அந்தப் பாடசாலையில் வழங்கிகைப்பப்பட்டது. மட்டக்களப்பில் இத்திட்டத்தினை இந்த அமைப்பின் உறுப்பினரான சி.தணிகசீலன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பாடசாலைக்கான புதிய நூலகம் திறப்பு வைபவத்துடன் இந்தப் பாடசாலையை பசுமையாக்கும் நல்லநோக்கத்துக்கான ஆரம்ப கட்டமாக பலவகை பயன்தரும் மரங்கன்றுகள் நடப்பட்டு மாணவர்கள் இயற்கையை நேசிக்கும் மனப்பாங்கினை வளர்பதற்கான ஊக்குவிப்பு செயற்பாடாகவும் இது அமைந்திருந்தது.


இந்த நிகழ்வு அதிபர் திரு.க.சந்திரகுமார் அவர்களின் தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராமத்தின் சங்கங்கள் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அதிபர் அவர்கள் நிகழ்வை ஆரம்பித்து வைத்து பேசுகையில் 'மட்டக்களப்பில் கஷ்ட்ட மற்றும் அதிகஷ்ட்டப் பிரதேசங்களில் உள்ள பல மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழக பட்டத்தினைப் பெறமுன்னமே, பாடசாலைக்கல்வில் இருந்து இடைவிலகி வருகின்றனர்;, ஏனெனில் அவர்களின் பெற்றோரினால், அவர்களுக்கான சீருடை, அப்பியாசப் புத்தகங்கள், பாடசாலை பைகள் மற்றும் இதர பொருட்களை வழங்க முடியாத நிலையில் இருப்பதனை காண்கின்றோம். இவ்வாறான ஒரு நிலையில் இத்திட்டத்தினை இந்த பாடசாலைக்கு வழங்கியமையை இட்டு பெரிதும் இந்த பாடசாலை மற்றும் கிராமத்தவர்கள் சார்பில் நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.' எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் என்னை உரையாற்ற அழைத்த போது, நான் கூறினேன்  'அதிகம் இம்மாணவர்களின் பெற்றோர்கள் முக்கியமாக கூலித்தொழில் செய்து பிழைப்பவர்களாகவும், விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களில் ஈடுபட்டுவதுடன் கூடுதலாக நிலையில்லாத நாளாந்தம் வருவாய் பெறும் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு குறைந்த வருவாயுடன் வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விடயம். இவர்கள் பல பாதிப்புக்களை தாண்டி தமது வாழ்க்கையை நடாத்திக்கொண்டிருக்கின்ற வேளையில் பிள்ளைகளின் படிப்பில் கருசனை கொள்ள முடியாத நிலையிலேயே, மாணவர்களது இடைவிலகல், சிறுவயதில் திருமணம், சிறுவயதில் வேலை செய்தல், வேறு வேண்டாத வேலைகளில் ஈடுபடுதல் போன்ற இழப்புக்களை எமது எதிர்கால சந்ததியினர் சந்தித்து வருகின்றனர். இவற்றை நிவர்த்தி செய்து அவற்றை வெல்லுவதற்கான ஒரே ஆயுதம் கல்வி மாத்திரம்தான். ஆதை வளப்படுத்தவே இத்திட்டத்தினை நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவர்கள் உதவியுள்ளனர். படிக்காமல் இருப்பதனை விட பிறக்காமல் இருப்பதே மேல் என்றார் பேரறிஞ்ஞர் அண்ணா, தூக்குக்கயிறை முத்தமிடும் வரை வாசித்துக்கொண்டே இருந்தார் உமர் முக்தர், பிச்சை புகினும் கற்கை நன்றே என்கின்றனர் எம்முன்னோர் இவற்றையெல்லாம் ஏன் சொல்லுகின்றேன் என்றால் நாம் எமது இழப்பை கல்வி எனும் ஆயிதத்தைக் கொண்டு மட்டுமே வெல்ல முடியும் என்பதனால்தான்' 

இந்த நிகழ்வில் இந்த அமைப்பின் தலைவராகக் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வி.அனுஸா அவர்கள் கருத்துரைக்கையில், இந்த திட்டம் மூன்றாவது திட்டமாகும் இந்த திட்டத்தினை நாம் சரியான பாடசாலைக்கு கொடுத்துள்ளோம் என நினைத்து பெருமையாக இருக்கின்றது. இவ்வாறான திட்டங்கள் ஜாதி மத பேதமில்லாமல் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு பெறுமதியான தளபாடங்கள், பல பாடப்புத்தகங்களுக்கு அப்பால் நல்ல பண்பை வளர்க்கும் புத்தகங்கள், நீதிக்கதைகள், உலக அறிஞ்ஞர்கள், தொழில் நுட்பம், கதை, நாவல், முன்னேற்றம், ஊக்கப்படுத்தல், திறன் விருத்தி சார்ந்த பல பல புத்தகங்கள் வழங்கி பயன்படும் வகையில் இவை திறந்து வைக்கப்பட்டு இது பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.









0 comments:

Post a Comment