காதல் செய்ய இன்றொரு நாள் போதுமா
கவிகளாய்
கீதமாய்
நாம் காதல் செய்ய இன்றொரு நாள் போதுமா?
பூக்களா
காதல் பூக்களா
பாக்களா
காதல் பாக்களா
இன்ப காதலுக்கு இவை எல்லாம் சமமாகுமா
கவிகளாய்
கீதமாய்
நாம் காதல் செய்ய இன்றொரு நாள் போதுமா?
மானென்றும் தேனென்றும் சிலர் கூறுவார்-பின்
மனம் கொண்ட பொருளோடு உனைத் தேடுவார்
நொடி கூடப் பிரியாமல் தடுமாறுவார்
மடி கொண்டு உனைத்தாங்கி மலர் தூவுவார்
தினம் தோறும் நினைத்தேனே உனை நானென்றோ
நினைத்தேனே உனை நானென்றோ
நினைத்தேனே
தேனே
தினம் தோறும் நினைத்தேனே உனை நானென்றோ
கண் தூங்கும் உடலோடு மனம் தூங்குமோ
உடலோடு மனம் தூங்குமோ
உடலோடு
உன் உயிரன்றி உடலோடு எதுவும் உண்டோ
திகட்டாத ஆனந்தம் என்றும் காதல்தான்
ஆனந்தம் என்றும் காதல்தான்
ஆனந்தம்
திகட்டாத ஆனந்தம் என்றும் காதல்தான்
தேடடா ஆ
காதலுக்கு எது ஈடடா
காதல் கவி நானடா
0 comments:
Post a Comment