ADS 468x60

06 February 2022

இன்று இந்த நாட்டின் மக்கள் எவற்றையெல்லாம் விருப்பம் இல்லாமல் வெறுக்கின்றனர்:

மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆதாரம் இன்றி அலுப்பில் இருக்கின்றனர். அரசாங்கமும் எதுவும் செய்யமுடியாத நிலையில் இயன்றளவு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையினை இயன்றளவு முன்னெடுத்து வருகின்றன. இருப்பினும் அநேகமான மக்கள் இந்த நாட்டில் நடந்தேறிவரும் பல வேண்டத்தகாத விடயங்களை வெறுக்கின்றனர். அந்தவகையில் இன்று இந்த நாட்டின் மக்கள் எவற்றையெல்லாம் விருப்பம்; இல்லாமல் வெறுக்கின்றனர் என கீழே பட்டியலிட்டுள்ளேன்.: 

நாட்டை சீரழிக்கும் கொரோணா தொற்றுநோய் அதற்கு பொறுப்பானவர்களின் விவேகமற்ற செயல்களால் மோசமடையும் பாதிப்பு, 

மற்றும் பால் மா, அரிசி, சீனி, மருந்துப் பொருட்கள், மண்ணெண்ணெய் போன்றவற்றை சேகரிக்க அல்லது பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டியுள்ளமை,  

தவறான நிர்வாகத்தில் அங்கீகரிக்கப்படாத திடீர் திடீர் மாற்றங்கள் காரணமாக ஏற்பபட்டுவரும் எரிவாயு வெடிப்புகள், 

இரசாயன உரம் மற்றும் விவசாய உள்ளீடுகளின் பற்றாக்குறை, மாறாக இயற்கை உரப்பாவனை காரணமாக பயிர்செய்கை விளைச்சலில் ஏற்பட்டுவரும் தோல்விகள் மற்றும் இவைகாரணமாக எதிர்பார்க்கப்படும்  உணவு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்; அச்ச நிலமை, 

பெட்ரோலிய எரிபொருட்களின் பற்றாக்குறை, அதுபோல் அடிக்கடி ஏற்படும் விலையேற்றம் மற்றும் செயலிழந்த மின் உற்பத்தி நிலையங்கள் காரணமாக அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு;க்கள்,  

தொடர்சியான அத்தியாவசிய உற்பத்திப் பற்றாக்குறை மற்றும் தேவைக்கதிகமாக அச்சிடப்படும் பணம், 

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சென்று முறையாகப் படிக்க இயலாமை, மற்றும் அவற்றுக்கான இணையவழிக்; கற்றல் கருவிகள் மற்றும் இணைய வசதிகள் இல்லாதமை, 

எப்போதும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, 

அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான நில அபகரிப்பு, கண்டபடியான சட்டவிரோத காடழிப்பு, மணல் மற்றும் மாணிக்கக்கல் அகழ்வு, 

மற்றும் அடிக்கடி நிகழும் மனித-யானை மோதல்;கள், 

சாதரண மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குதல், மற்றும் சீரற்ற கொள்கைகள் மற்றும் நிர்வாக முறமை, அதுபோல் பல அரச வர்த்தமானி அறிக்கைகள்; வெளியிட்ட பின்னர் அடிக்கடி திரும்பப் பெறுதல்;, 

அதிகரித்த ஊழல், வீண் விரயம், பணமோசடி, எந்தவித தகுதியுமில்லாத சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்களுகள் ஆகியோருக்கு உயர் பதவிகள் கொடுத்தல்,  

தேசிய சொத்துக்களை விற்பனை செய்தல் அதுபோல் பற்றாக்குறையான இயற்கை வளங்களை தவறாக ஒதுக்கீடு செய்தல், 

நிதி கையாழ்கை ரீதியான சரியான ஒழுக்கமின்மை, 

சுயநலம், அதனால் ஏழை மற்றும் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் முன்னுரிமைத் தேவைகளைப் புறக்கணித்தல்;, 

வெளிநாட்டுத் துறையின் தவறான நிர்வாகம், கடன் மறுசீரமைப்பு இல்லாமல் தொழில்ரீதியாக இல்லாத வெளிநாட்டுக் கடன் முகாமைத்துவம், நீண்ட கால வெளிநாட்டுக் கடனைச் செலுத்த குறுகிய கால அதிக செலவில் கடன் வாங்கப்பட்ட நிதிகள், 

அதிக மதிப்பிழந்த ரூபாய், ஏற்றுமதித் துறை ஊக்குவிப்புத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றினைக் குறிப்பிடலாம். 

விவேகமற்ற மற்றும் பயனற்ற வெளிநாட்டு உறவுகள், சர்வதேச முகவர்களுடன்; சரியான தொடர்புகளை மேம்படுத்துவதில் ஏற்பட்டுவரும் தோல்வி, குறிப்பாக ஐஎமஎப் மற்றும் யுஎன்சிஆர் அரசியல்மயமாக்கல் 

முக்கிய சுதந்திரமான அரச நிறுவனங்களின் வினைத்திறனற்ற செயலாற்றுகை, செயலற்ற நல்லாட்சி, அரிதான பொறுப்புக்கூறல், அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலற்ற தன்மை.

இவை அனைத்தும் அரச நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சியின் தொழிற்தகமையற்ற, திமிர்பிடித்த, சிறுபிள்ளைத்;தனமான ஆட்சியின் காரணமாக தோன்றுகின்றன மற்றும் குறைந்தளவான வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பாய்ச்சல்கள், அதனால் குறைந்த பொருளாதார வளர்ச்சி, இவை அனைத்தும் தோல்வியடைந்த நிலையை நோக்கிச் செல்லும் நாட்டின் குடிமக்கள் மீதான அதிகப்படியான மன அழுத்தத்தினை ஏற்படுத்தும்.

மக்கள், சிவில் சமுகத்தினர், வர்தகர்கள் புத்திஜீவிகள் ஆகியோரின் ஆலோசனைகள், கருத்துக்கள் ஆய்வுகளாக சேகரிக்கப்பட்டு அவை சட்டவாக்கம், கொள்கைத் தயாரிப்பு, வர்தமானி அறிவிப்புக்கள் ஆகியவற்றில் பிரதிபலிப்பதனூடாக மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகலாம். சரிந்து வரும் பொருளாதாரத்தினை சீர்செய்ய இந்த நாட்டின் அங்கத்தவர்கள் அவசியமானவர்கள் என்பதனை யாரெல்லாம் மறந்து செயற்படுகின்றனரோ அவர்கள் நிச்சயம் மக்களால் நிராகரிக்கப்படுவர்.


0 comments:

Post a Comment