ADS 468x60

27 February 2022

பெண் முயற்சியாண்மையின் வளர்சிக்கு டிஜிடல் மூலமான மாற்றத்தின் தேவை!

இன்று உலகில் தீவிரமாக ஏற்பட்ட கொவிட்-19 தொற்றுநோய் டிஜிட்டல்மயமாக்கலின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. லொக்டவுன்கள் மற்றும் சமூக இடைவிலகல் ஆகியவை வர்த்தகம் செய்யும் விதத்தை வெகுவாக மாற்றியுள்ளன. 

எங்களில் பலர் இன்னும் பாரம்பரிய வியாபார, தொழில் முயற்கசிகளை நம்பி அதில் இருந்து வளர்சிபெறாத முறைசாரா பொருளாதாரப் பொறிக்குள் இருந்து விடுபட்டதாக தெரியவில்லை. பல்கலைக்கழகம் வரைசென்றும் பயன்தராத கல்வி முறையில் தொழில் வளர்க துளியும் திறனற்ற மானிடங்களை பிரசவிக்கும் நிலையில் இருந்து நாம் எப்போது விடுதலை அடைவோமோ அப்போதே நாடும் வீடும் வளம்பெறும். 

குறிப்பாக பெண் முயற்சியாண்மை நகர்ப்புறங்களுக்கு அப்பால் வளர்க்கப்படவில்லை, வளரவும் இல்லை காரணம் உலகத்தோடு ஒட்ட ஒழுகாமை, சீரழிந்த தலைமைத்துவம், வழிகாட்டாத பல்கலைச் சமுகம் மற்றும் ஏனைய அமைப்பு முறைக் கோளாறுகளை பொதுவாகச் சொல்லிவிடலாம். ஆகவே இவ்வாறான பின்தங்கிய நிலையில் இருந்து பெண் முயற்சியாளர்களை முன் முயற்சியாளர்களாக்க வேண்டிய பொறுப்பெடுப்பவர்கள் தகைசான்றவர்களாகவும், சமுகப் பற்றாளர்களாகவும் சிறந்த வழிகாட்டிகளாகவும் இருக்கவேண்டும். நிச்சயம் இவர்களை நாம் எல்லாவகையிலும் உலகத்தரம் வாய்ந்த தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கலாம். அதற்கான ஆற்றலும் விருப்பமும் எமது பெண் சமுகத்திடம் கொட்டிக்கிடக்கின்றது.

இன்று பார்போமானால், சாதாரண ஊழியர்களிடையே வீடியோ கொன்பரன்சிங் மேற்கொள்வதிலிருந்து இணையத் தயாரிப்புக்கள் மற்றும் சேவை வழங்கல்களை உருவாக்குதல், தொழில்நுட்பத்தைத் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அதை மாற்றியமைக்க, இந்த தொற்றுநோய் காலங்களில் தொழில் முயற்சியாண்மை மாறியுள்ளது.

இந்த மாற்றங்களில் பல, டிஜிட்டல் கருவிகளின் தொடர்ச்சியான பயன்பாட்டை அவசியமானதாகவும், நன்மை பயக்கும் மற்றும் விரைவில் மாற்றுவழி இல்லாத கட்டாயமானதாகவும்; இருக்க வாய்ப்புள்ளது.

உலகம் முழுவதும், டிஜிட்டல் மாற்றம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையில்; தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இது உலகப் பொருளாதாரத்தில் நாமும் பங்கேற்க புதிய வழிகளை வழங்குகிறது.

ஆனால் இலங்கையில் உள்ள பல பெண்களுக்கு சொந்தமான சிறிய மற்றும் நடுத்தர தொழிலை கொண்டுசெல்ல, அதன் மாற்றத்திற்கு உதவுவதற்கு நம்பகமான் இதுபோன்ற புதிய பயன்பாட்டு ஆலோசனை, ஆதரவு மற்றும் வழிகாட்டுதலின் மிகப்பெரிய தேவை உணரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இன்னும் கூடுதலான எண்ணிக்கையில், சமீபத்திய தொழில்நுட்ப மாற்றத்தினை அணுகவும் பயன்படுத்தவும் இயலாமையானது தங்கள் தொழிலை வளரவும் மாற்றவும் பெரும் தடையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழிலில் நிரந்தரமாக வளர்சிபெற அவர்களின் திறனை அபிவிருத்திசெய்ய டிஜிட்டல் மாற்றம் இன்றியமையாததாக இருந்தாலும், பெண்களுக்கு இது விருப்பமானதாக இல்லைதான். பெண்களுக்குச் சொந்தமான தொழில் முயற்சியாண்மைகள் இந்தச் சமுகம் மற்றும்; நாடு முழுவதிலும் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களாகவும் மற்றும் முதுகெலும்பாகவும் இருக்கின்றது. அதுபோல் மேலும் இந்த மாற்றம் ஏற்படுமானால் வாய்ப்புகள் இலங்கை எல்லைகளுக்கு அப்பால் விரிவடைய வாய்ப்புள்ளது. இணைய வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அதிகரிப்பது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையானது உலகளாவிய சந்தையுடன் இணைவதற்கான வழிகளைத் திறந்துவைக்கும். எனவே இதன் மூலமான அவர்களின் வெற்றி மற்றும் தேவையான டிஜிட்டல் மாற்றம் - இலங்கையின் நீண்ட கால பொருளாதார ஆரோக்கியத்திற்கு கைகொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

டிஜிட்டல் தொழில்துறையானது இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகவும், பெருகி வரும், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் இன்று உள்ளபோதும், இந்த முன்னேற்றங்கள் இன்னும் நினைத்த அளவில் பெண்களை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரவில்லை. இதனால்தான், உள்ளூர் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு மேலும் பெண்களி;ன் பங்குபற்றலை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் கொள்கை வகுப்பாளர்கள் ஈடுபடுவது அவசியம்.

2019 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய தேசிய முன்முயற்சியாக அரசாங்கத்தின் 'தொழில்நுட்ப அடிப்படையிலான சமூகத்தை கட்டியெழுப்புதல்;' ஆனது நாடு தழுவிய டிஜிட்டல் மாற்றத்திற்குத் தேவையான சூழலை உருவாக்கத் தொடங்கியதால் அது சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்டிருந்தது. இன்னும் உள்கட்டமைப்பு, சந்தைகளுக்கான அணுகுமுறை, நிதி வசதிகளுக்கான அணுகுமுறை மற்றும் திறன் அபிவிருத்தி ஆகியவற்றில் நிலவும் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதன் மூலம் பெண் தொழில் உரிமையாளர்கள் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம். 

இந்த இடைவெளிகளில் ஒன்று, அனைத்து நிறுவனங்களையும், குறிப்பாக பெண்களுக்குச் சொந்தமான சிறு மற்றும் நடுத்தர தொழில்களை சென்றடைய, கிராமப்புறங்களுக்கு விரிவடையும் அதிவேக இணையவசதியின் பரந்த ஊடுருவல் தேவையாக உள்ளது. இலங்கை மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, 25 வீத சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மை கிராமப்புறங்களில் இயங்கும் இந்த நிறுவனங்களில் அதிக சதவீதத்தைக் கொண்ட பெண்களால் நடத்தப்படுகின்றன. மற்ற தெற்காசிய வளரும் நாடுகளைப் போலவே, ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெருநகர மையங்களிலும் கிராமங்களிலும் உள்ள பெண்களுக்கு இடையே ஒரு பெரிய டிஜிட்டல் திறன் மற்றும் அறிவு ஆற்றல் வேறுபாடு உள்ளது.

ஆனால் டிஜிட்டல் உள்கட்டமைப்பு என்பது அதற்கான முதல் படிதான். பெண்களுக்குச் சொந்தமான சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வருவாயைப் பெற புதிய சந்தைகளுக்கான அணுகுமுறை தேவை. அதற்காக அவர்களின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், டிஜிட்டல் சொத்துகள் உட்பட அறிவாற்றலை உருவாக்குவதற்கும் வெளிப்புறத்திலிருந்தான நிதிக்கான இலகு அணுகுமுறை தேவைப்படலாம்.

இதற்காக அவர்களிடையே காணப்படும் திறன் இடைவெளியையும் நிவர்த்தி செய்ய வேண்டும். இலங்கை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, 2020 இலங்கையின் டிஜிட்டல் கல்வியறிவு வீதம் ஆண்களுக்கு 53 வீதமாகவும், பெண்களுக்கு 46.2% வீதமாகவும் அதுபோல் கணினி கல்வியறிவு வீதம் ஆண்களுக்கு 33.9% வீதமாகவும்; பெண்களுக்கு அது 30.4% வீதமாகவும்; வேறுபட்டிருப்பதனைக் காட்டுகின்றது.  [http://www.statistics.gov.lk/PressReleases/ComputerLiteracystatistics-2020-Firtsixmonths]

டிஜிட்டல் கல்வியறிவு என்பது இன்று தொழிற்சந்தையை மாற்றியமைத்த தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக பெண் தொழில் உரிமையாளர்களுக்கு ஒரு தொடக்கத் தளமாகும். இத்தகைய கல்வியறிவு திறன் ஆகியன புவியியல் எல்லைகள் இல்லாமல் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் உடனடியாக பொருட்களை, உற்பத்திகளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களுடன் தொடர்பு கொள்ள இணையத்தைப் பயன்படுத்த அவர்களுக்கு உதவும். டிஜிட்டல் மயமாக்கல் இந்த வர்த்தக வாடிக்கையாளர்கள், பொருட்கள் மற்றும் செயல்முறைகள் பற்றிய புதிய நுண்ணறிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதுடன் அவர்களின் தொழிலை வளரவும் விரிவுபடுத்தவும் பயன்படுத்துகிறது.

இன்று குறிப்பாக அரச மற்றும் தனியார் கூட்டாண்மை மூலம் பெண் தொழில் உரிமையாளர்களுக்கு தொடர்புடைய தொழிற்; கல்வி, பயிற்சி மற்றும் திறன்களை வழங்குவதன் மூலம் இந்த திறன் இடைவெளியை குறைக்கமுடியும். இணைய பாதுகாப்பு மற்றும் தொழில் முயற்சி மேம்பாட்டிற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் விராண்ட் உருவாக்கம் போன்ற தலைப்புகள், வெற்றிக்கான புதிய கருவிகளை பெண் வணிக உரிமையாளர்களுக்கு வழங்குகின்றன.

டிஜிட்டல் மயமாக்கல் இந்த பெண் தொழில் உரிமையாளர்களுக்கு மிகவும் முக்கியமான வேறு ஒன்றை வழங்குகிறது: அவர்களின் தொழில்களை நெறிப்படுத்துவதற்கான வாய்ப்பு, நிதிக்கையாழ்கை, சந்தைப்படுத்தல் மற்றும் அவர்களின் குடும்பத்தினை கவனிப்பதற்கான திறன்களை உருவாக்குதல்-ஆகியன உண்மையில் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் என்பதனில் சந்தேகமில்லை.

இதனால், இலங்கையில் இப்போதுள்ள வாய்ப்புகள் குறித்து நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கைப் பெண் வணிக உரிமையாளர்கள் தங்கள் வியாபாரத்தை வளரவும் விரிவுபடுத்தவும், அதன் மூலம் நாடு முழுவதிலும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் வகையில் டிஜிட்டல் மயமாக்கலை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நான் எதிர்நோக்குகிறேன். அதிகமான பெண்கள் கணணி; மற்றும் டிஜிட்டல் திறன்களைக் கற்றுக் கொள்ளும் நாளுக்காக இவர்களின் முன்னேற்றத்தினை நான் எதிர்பார்கின்றேன், அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் வருவாயை மேம்படுத்த முடியும்.  இந்தப் புதிய திறன்களைக் கொண்டு, இந்தப் பெண்களில் சிலர் தங்கள் சொந்தத் தொழில்களை ஆரம்பித்து வளர்த்து, புதுமையான தீர்வுகளை வழங்குவார்கள், தரமான வேலைகளை உருவாக்குவார்கள் மற்றும் அவர்களின் லாபத்தை தங்கள் வணிகங்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் முதலீடு செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

உலகெங்கிலும் உள்ள பெண் வணிக உரிமையாளர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தம்மையும் தமது வியாபாரங்களையும் சமூகங்களையும் முன்னெடுத்துச் செல்வதற்கு இத்தகைய செயற்பாட்டை பலர் ஆரம்பிப்பதனை நான் கண்டுள்ளதால், எமது நாட்டில் இதசிறப்பாக நிகழும் என்று நான் நம்புகிறேன்.

பெண்கள் தங்களுடைய வியாபாரத்தை கட்டியெழுப்புவதற்கும் மற்றவற்றில் மீள்முதலீடு செய்வதற்கும் தனித்துவமான இவ்வழியின் மூலமாக, பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி, அளவிடக்கூடிய தாக்கத்திற்கான சக்திவாய்ந்த ஊடகமாக, நாடு முழுவதிலும் சென்றடையும் வேகமான மற்றும் நியாயமான டிஜிட்டல் மாற்றத்தை செயல்படுத்துவதில் இருந்து நாட்டுக்கு நிறைய நன்மைகள் உள்ளன என்பதனை நினைவில் கொள்வோம்.


0 comments:

Post a Comment