"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்" உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும். ஆனால் இன்று எங்களது சில தலைவர்கள் சொல்லும் சொற்களை நம்பி வெம்பி வீணாகும் அளவுக்கு மக்களை ஏமாற்றுகின்றவர்களை, துன்புறுத்துபவர்களை பொய்யன் என நான் சொல்லவில்லை வள்ளுவர் சொல்றார்.
பௌத்த மதத்தின் முக்கிய பஞ்சசீலக் கொள்கையில் பொய்சொல்லாமை, பொய் கூறுவதனைத் தவிர்ப்பது மிக முக்கியமானதாக சொல்லப்படுகின்றது. உலகில் எந்த மதமும் பொய்யை அங்கீகரிக்கவில்லை. அதுமாத்திரமல்ல, நீதிமன்றத்தில் பொய்யான சாட்சியங்களை முன்வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். மறுபுறத்தில், பொய்யனால் செய்ய முடியாத குற்றமே இல்லை என்பது கதை. இன்று இந்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடிக்கும் அடிப்படைக் காரணம் பொய்யும் புரட்டும்தான்.