முன்னேற்றப் பாதையிலே மனசு வச்சி முழுமூச்சா அதற்காக தினம் உழசை;சி பாடுபடுற விவசாயிகளுக்கு 'காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்' என்ற நிலையில் கிழக்கு விவசாயிகள் நாதியற்றுக்கிடப்பதனை ஜீரணிக்க முடியவில்லை. யாரங்கே யாரங்கே இதற்கொல்லாம் வரமாட்டார்கள். நாம் இன்று பிரயோசனமற்றுக்கிடக்கும் முற்றுப்பெற்ற களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் பற்றிப்பார்க்கப்போகின்றோம்.
தலைவர்களாக..... கணேசமூர்தி வந்தாரு! காதர்மஸ்தான் வந்தாரு!, அமல்சேர் வந்தாரு! அமீர்அலி வந்தாரு! அதிகாரிகளாக... கருணாகரன் வந்தாரு! கலாவதி வந்தாரு! ஒண்ணும் திறக்க முடியல
சாராய வார் திறக்கிறண்டா வேணாம்னடாலும் ஓடி ஓடி திறக்கறாணுகள் ஆனா வாழ்வழிக்கும் ஒரு பொருளாதார மத்திய நிலையத்த பரிபூரணமா முடிச்சிம் இத்தன அக்கப்போர் எதற்கு? ஏதோ உள்ளே இருக்குப்போல வாங்க பார்க்கலாம்!
நமது நாட்டில், தம்புள்ள விஷேட பொருளாதார மத்திய நிலையம், பேலியகொட மெனிங் சந்தை, தம்புத்தேகம விஷேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் வெயாங்கொட போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய பொருளாதார மத்திய நிலையங்களுக்கு மத்தியில் இவற்றுக்கு சமமாக 2017ஆம் ஆண்டு சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் 50 வர்த்தக நிலையங்களை உள்ளடக்கியதாக சகல வசதிகளையும் கொண்ட களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.
நோக்கம்
விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கம். இவைதவிர கிராமங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், உணவுப்பாதுகாப்பு, கிராமங்களின் உட்கட்டமைப்பை விருத்தி செய்தல், என பல காரணங்களை மையமாகக் கொண்டு இது ஆரம்பிக்கப்பட்டது.
இப்பிரதேச விவசாயிகள், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவு, காய்கறிகள், பழங்கள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு, விதை உற்பத்தி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப வேளாண்மை மிளகாய், பயற்றை, வெண்டி, கத்தரி, பீர்க்கு, நாடை, பாகல், பீற்றூட், உள்ளிட்ட பல பொருட்களை நாளாந்தம் அதிகளவு உற்பத்தி செய்து வருகின்றார்கள். இவற்றை மொத்தமாக இங்கிருந்து ஏனைய பிராநடதியங்களுக்கு விநியோக சேவை செய்வதனை நோக்கமாகக் கொண்டு இவை ஆரம்பிக்கப்பட்டது.
இதனால் பட்டிருப்புத்தொகுதி உட்பட மாவட்டம், மாகாணம், முழுமையான அபிவிருத்தியடையவுள்ளது என கருத்தாடப்பட்டது. இதனால் பிரதேச வறுமை ஒழிக்கப்பட்டு, பொருளாதாரம் மேன்மையடையும், உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தியடைந்து மக்களின் மனதில் சமாதானம், சுபீட்சம் நிறைந்து காணப்படும். ஏன்கின்ற ஒரு பெரிய நோக்கம் கனவாகிப்போயுள்ளது இன்று.
இவற்றுக்கு மேலாக, கிழக்கு மாகாணத்ததில் களுதாவளை தேத்தாத்தீப் ப்பிரதேசம் அதிகளவான விவசாய உற்பத்தியாளர்களைக் கொண்ட பிரதேசமாக உள்ள காரணத்தினால், இந்த பொருளாதார மத்திய நிலையத்தினால் அப்பிரதேச விவசாய உற்பத்தியாளர்களுக்கும் பெரும் சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதுடன் அவர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கும் நிலையமாக செயற்படவுள்ளது என பல நோக்கங்கள் கொண்டமைக்கப்பட்டது.
இங்கு குறிப்பாக பொருளாதார மையத்தில் விற்பனை நிலையங்கள் நேரடியாக விவசாய அமைப்புகளுக்கு வழங்கப்பட இருப்பதனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் நேரடியாக பொருளாதார மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
அமைச்சரவை தீர்மானங்கள் 06.06.2017
09. கிழக்கு மாகாணத்தில் விசேட பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணித்தலும் மதியுரை சேவையை பெற்றுக் கொள்ளலும் (விடய இல. 22)
கிழக்கு மாகாணத்தில் விசேட பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு 2017 வரவு செலவுதிட்ட முன்மொழிவுகளுக்கு அமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக பொருத்தமான இடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி மண்முனை தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் களுதாவளை 02 கிராம அலுவலர் பிரிவில் அரசிற்கு சொந்தமான நிலப்பகுதி ஒன்று தெரிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், களுவாஞ்சிக்குடி மண்முனை தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் களுதாவளை பிரிவிற்குட்பட்ட 02 ஏக்கர், 03 ரூட், காணியின் பொருளாதார மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்கும், இவ்விடத்தை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு கையளிப்பதற்கும், இப்பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்மாணிப்பணிகளை விரைவாக மேற்கொள்ளும் பொருட்டு, இத்துறையில் அனுபவம் கொண்ட பொறியியல் செயற்பாடுகள் பற்றிய மத்திய மதியுரை பணியகத்தின் ஊடாக மதியுரை சேவையை பெற்றுக் கொள்வதற்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பீ. ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நடவடிக்கையில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும அதிகாரிகள்
1. ஈடுபட்டுத் முடியாமல்போன அரசியல் தலைவர்கள்!
1. கணேசமூர்தி ஐதேக இணைப்பாளர் 2017
2. ஹாபீஸ் நஸீர் அகமட் கிழக்கு மாகாண முதலமைச்சர
3. அமிர் அலி- இராஜாங்க அமைச்சர் 2018
4. ச.வியாளேந்திரன் -இராஜாங்க அமைச்சர் 2021
5. காதர் மஸ்தான் -இராஜாங்க அமைச்சர் 2023
2. ஈடுபட்டு வெற்றிபெறாத அரச அதிகாரிகள்
1. கே.கருனாகரன் மாவட்டச் செயலாளர்
2. கலாவதி மாவட்டச் செயலாளர்
3. வி.சிவப்பிரியா பிரதேச செயலாளர்
4. என்.விமல்ராஜ் காணி சீர்திருத்த ஆணைக்குழு
5. எம்.எஸ்.ஏ. கலீல்- மாவட்ட விவசாயப் பணிப்பாளர்
வழங்கப்பட்ட வாக்குறுதிகள்.
குறித்த செயற்பாடு ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி, பிரதியமைச்சர் அமீர்அலி ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.
இந்த நிலையத்தினை களுதாவளை பிரதேத்தில் அமைப்பதன் மூலம் அப்பிரதேசத்தை அண்டிய பலகிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் விவசாய மற்றும் ஏனைய பொருட்களை உத்தரவழிக்கப்பட்ட அரச நிர்ணய விலைகளுக்கு விற்பனை செய்வதற்கு இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைவதாகவும். இல்லாவிட்டால் எமது மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வேறு மாவட்டங்களுக்கு அவர்கள் பல கஷ்ரங்களுக்கு மத்தில் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டியுள்ளதாகவும். இப்படியான மத்திய நிலையங்களை எமது மாவட்டங்களில் அமையவருவதை சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வாதிகள் தடைபோட்டு வருவது எமது பிரதேச அபிவிருத்திக்கு நல்லதாக இருக்காது என்றார்' இணைப்பாளர் கணேசமூர்தி அவர்கள். இந்த பொருளாதார மத்திய நிலையத்தினை களுதாவளை பிரதேசத்தில் அமைப்பதற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களும் தனது முயறசியினாலும் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.... களுதாவளையில் அமையவிருக்கும் பொருளாதார மத்திய நிலையமானது தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம்போன்று பாரியதொரு பொருளாதார மத்திய நிலையமாக மாற்றமடைய வேண்டும். களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாங்கள் அடிக்கல் நாட்டி வைத்திருக்கின்றோம். இதற்கு வரும் பாதையானது மோசமாகவுள்ளது. இதனை குறுகிய காலத்திற்குள் புனரமைக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார உற்பத்தி நிலையம் விரைவாக கட்டி முடிக்கப்படும்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து அதன் மூலம் வியாபாரிகள் நன்மையடைவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இப்பிரதேச மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு இந்த பொருளாதார மத்தியநிலையம் பெரிதும் உதவும் என்று பிரதி அமைச்சர் எம்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.
களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைப்பது தொடர்பான விசேட கூட்டம் இன்று (18) மாவட்ட செயலகத்தில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் இடம்பெ
கொரோணா காலங்களில் மாத்திரம் செயற்பட்ட பொ.ம.நிலையம்.
இந்நிலையில் களுதாவளையில் நிருமாணிக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் இதுவரையில் திறக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட விவசாயிகளின் விளைபொருட்களை தகுந்த முறையில் தற்போதைய காலகட்டத்தில் சந்தைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் தலைமையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், மற்றும் விவசாய அமைப்புக்கள், விவசாயிகளின் ஒத்துழைப்புடன் செவ்வாய்கிழமை (14) காலை 07.00 மணியளவில் திறந்து வைக்ககப்பட்டு அப்பகுதி விவசாயிகளின் விளைபொருட்களை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.
ஏற்பட இருக்குக்கும் நன்மைகள்.
விவசாயிகள் அல்லும் பகலும் பாடுபட்டாலும் ஒரு பொருள் 100 ரூபாய்க்கு வாடிக்கையாளர் கையில் சேரும்போது, உற்பத்தி செய்யும் விவசாயியிடம் வெறும் 30 ரூபாய்க்களைக்கொடுத்தே கொள்வனவு செய்வார்கள். இடைத்தரகர்கள் 70 வீதமான இலாபத்தினை ஒரு நாளில் சுருட்டிவிடுகின்றனர். ஆனால் இந்த மத்திய நிலையம் திறக்கப்படுமானால் எந்த இடைத்தரகருக்கும் வேலை இராது பாடுபட்ட விவசாயிகள் உற்பத்திகளை நேரில் கொடுத்து பலனை பெறலாம் இது 70 வீத பெறுமானமாக இருக்கும்.
வடக்கிலும் இந்த மத்திய நிலையம் இல்லாததால் கிழக்கு நோக்கிவரும் எமது சொந்தங்களின் உற்பத்திகள் இங்கு வந்து பிரிவதாக ஏற்பாடு செய்யலாம். வுpயாபார நடவடிக்கைகளை இங்கே கட்டுப்படுத்தலாம்.
இந்தியாவுடனான நேரடி ஏற்றுமதி இறக்குமதிகளை இங்கு ஆரம்பிக்கலாம். குறிப்பாக வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு போன்ற இன்னோரன்ன வர்தக நடவடிக்கைகளின் மையமாக மாற்றலாம் அதற்கு நான் உதவ முன்வருவேன் வேண்டுமென்றால்.
பழுதடையும் வீணாகும் உற்பத்திகளின் அளவினைக்; கணிசமாகக் குறைக்கலாம். நல்ல பாதுகாப்பான சேமிப்பறைகளை நிறுவ தனியார்களை ஊகக்குவிக்கலாம். இந்த வீண்விரயத்துக்காக கழிக்கும் உற்பத்தியின் அளவினை வருமானமாக ஈட்டலாம்.
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத வியாபாரிகளிடம் உற்பத்திகளைக் கொடுத்து அவர் சொல்லும் விலையினையே பெறும் துர்பார்க்கிய நிலை மாறும். இதனை விரும்பாத சக்திதான் இந்த செயற்பாட்டை நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
தருசு நிலங்களும் பாழ்பட்ட நிலங்களும் மீண்டும் பண்பட ஆரம்பிக்கும், விரக்தியில் இருக்கும் இளைஞர்கள் வேலைக்கு சேர்க்கப்படுவர், வெளிறாட்டு உள்நாட்டு வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். ஏற்மதிசார் எண்ணங்கள் எழும், தரமான உற்பத்திகளை செய்ய ஊக்கம் பிறக்கும் வறுமை பறக்கும்.
வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு ஏற்படும், மத்திய நிலையம் சிறப்பாக இயங்குவதன் மூலம், போக்குவரத்து, சேமிப்பு, விற்பனை உள்ளிட்ட துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால், பிரதேசத்தின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை குறையும்.
வாழ்க்கைத் தரம் உயர்வடையும். விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதால், வாழ்க்கைத் தரம் உயரும். அதனால் விருப்பதுடன் தொழில்ற்படை பெருகும். கிராமப்புறங்களில் வறுமை குறைந்து, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
இவற்றை வாங்கி விற்க நம்பகமாக முதலீட்டாளர்கள் ஈடுபடலாம். குறிப்பாக வெற்றிலை, மரக்கறி, நெல் இவற்றை முன்வந்து இங்கு மொத்த விற்பனையினை செய்யத் துவங்கவேண்டும்.
எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்கான தீர்வுகள்
களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அரசாங்கம் சார்ந்த நடவடிக்கைகள்:
நிதி ஒதுக்கீடு: திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டும். கட்டுமானப் பணிகள், உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிப்பு செலவுகள் போன்றவற்றுக்கு போதுமான நிதி ஒதுக்குவது அவசியம்.
திறமையான நிர்வாகம்: திட்டத்தை திறமையாகவும், விரைவாகவும் செயல்படுத்துவதற்கு அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகளை தடுத்து, திட்டத்தை வெளிப்படையாக செயல்படுத்த வேண்டும்.
கண்காணிப்பு: திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழு திட்டத்தின் முன்னேற்றம், நிதி ஒதுக்கீடு, செயல்பாட்டு திறன் போன்றவற்றை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
உட்கட்டமைப்பு முன்னேற்றம்:
போக்குவரத்து: மத்திய நிலையத்திற்கு செல்ல போதுமான வீதி வசதிகளை மேம்படுத்த வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு வசதியாக இருக்கும்.
சேமிப்பு கிடங்குகள்: விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கு தரமான சேமிப்பு அறைகள் அல்லது கிடங்குகளை கட்ட வேண்டும். இதன் மூலம் விளைபொருட்கள் பாதுகாக்கப்பட்டு, விலை ஏற்ற இறக்கத்தை சமாளிக்க முடியும்.
விற்பனை நிலையங்கள்: விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டும். நுகர்வோருக்கு மலிவான விலையில் விளைபொருட்கள் கிடைக்கும்.
பிற நடவடிக்கைகள்:
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு: விவசாயிகளுக்கு மத்திய நிலையத்தின் நன்மைகள், இயங்குமுறை, விற்பனை நடைமுறை போன்ற விடயங்கள் குறித்து விழிப்புணர்வு நடத்த வேண்டும்.
தனியார் துறை பங்களிப்பு: தனியார் துறையினரின் முதலீட்டை ஈர்த்து, மத்திய நிலையத்தை மேம்படுத்தலாம். குளிர்சாதன வசதிகள், தரப்படுத்தல் நிலையங்கள், பெறுமதிசேர் முறைமைகள், போக்குவரத்து சேவை போன்றவற்றை அமைக்க தனியார் துறையினருடன் இணைந்து செயல்படலாம்.
வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு:
மத்திய நிலையம் சிறப்பாக இயங்குவதன் மூலம், போக்குவரத்து, சேமிப்பு, விற்பனை உள்ளிட்ட துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
இதனால், பிரதேசத்தின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை குறையும்.
வாழ்க்கைத் தரம் உயர்வு:
விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதால், வாழ்க்கைத் தரம் உயரும்.
கிராமப்புறங்களில் வறுமை குறைந்து, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
விவசாயிகளின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு தேவையான விதைகளை வழங்குதல், மண் பரிசோதனை செய்து உரமிடுதல், விவசாய தொழில்நுட்ப பயிற்சி வழங்குதல் போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியம்.
இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தை வெற்றிகரமாக திறந்து, விவசாயிகள் மற்றும் பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.
முடிவுரை
களுதாவளை பொருளாதார மத்திய நிலையம், கிழக்கு மாகாணத்தின் விவசாய துறைக்கும், பிரதேச பொருளாதாரத்திற்கும் மிக முக்கியமானது. சவால்களை திறமையாக எதிர்கொண்டு, தீர்வுகளை செயல்படுத்தினால், இந்த மத்திய நிலையம் வெற்றிகரமாக இயங்கி, பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். ஆனால் இங்கு அரசியல் சதி நடைபெறுகின்றது என்பதே நம் கண்களுக்குத் தெரிகின்றது. ஏன்டா இதே மையம் ஒரு முஸ்லிம் அல்லது சிங்களப் பிரதேசத்தில் அமைந்திருந்தால் அதன் முன்னேற்றம் வேறுமாதிரி அமைந்திருக்கும். எத்தனை தழிழ் அதிகாரிகள் அரசியல்தலைவர்கள் இருந்தும் இவற்றை நடைமுறைப்படுத்தமுடியவில்லை என்றால் சிந்திககவேண்டும். அதுவும் வர்தக அமைச்சராக கௌரவ வியாளேந்திரன் இருந்தும் வர்தகத்துக்கு ஒரு சோதனை என்றால் வேறுயாரிடம் தான் போய்ச்சொல்லுவது. செயல்வீரர்களை தலைவராக்குங்கள். முடியுமானால் இவர்கள் யாரும் இல்லாமல் செயல்படுத்திக்காட்ட என்னால் முடியும். பொறுத்திருப்போம். தேர்தல்கள் வரிசையாய் வருகின்றன அவதானமாக இருங்கள். விவசாயிகள் ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும். வடக்கில்கூட இல்லாத ஒரு வாய்ப்பு வந்தும் தவறவிடுவதா?
Reference
- https://www.trade.gov/country-commercial-guides/sri-lanka-distribution-and-sales-channels
- https://tamil.dgi.gov.lk/cabinet-decisions/803-06-06-2017
- https://centraltv.lk/read.php?post=4507
- https://tamil.news.lk/news/business/item/14445-300 https://www.battinews.com/2017/01/blog-post_903.html
- https://eelanadu.lk/%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/
- https://www.eluvannews.com/2017/07/blog-post_81.html8. https://www.hirunews.lk/tamil/337943/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
- 9https://www.eluvannews.com/2017/07/blog-post_93.html
0 comments:
Post a Comment