ADS 468x60

09 April 2024

எதை நாம் புத்தாண்டில் விட்டுவிடுகின்றோம்?

தமிழ்ப் புத்தாண்டு சம்பிரதாயங்கள் எந்தவொரு அரசாங்கத்தாலும் விதிக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் ஒன்று அல்ல, மாறாக அந்த சமூகத்தால் பேணப்படும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

சுற்றுச்சூழலை விட்டும், சடங்குகளை விட்டும், உறவுகளை விட்டும் விலகி வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் உச்ச நிலைக்கு நம் சமூகம் இன்று வந்துவிட்டது. இன்று நெருக்கடி பொருளாதாரத்தில் மாத்திரம் இல்லை நமது சிந்தனையில் உள்ளது.

கடந்துவந்த நமது வாழ்க்கையின் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களைத் திரும்பிப் பார்ப்பது, கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றிவிட்டதா என்று சிந்திப்பது, அதுபோல இன்னும் முன்னே உள்ள முந்நூற்று அறுபத்தைந்து நாட்களுக்குத் தயாராக ஆசிகளைப் பெறுவதையும்; புத்தாண்டின் சாராம்சம் என்று அழைக்கலாம். 

பாரம்பரிய சமுதாயத்தில், புதிய விவசாய அறுவடைகள் வீட்டிற்கு கொண்டு வரப்படும், வீடு துலக்கப்பப்பட்டு, கதவு யன்னல் பழுதுபார்க்கப்படுமு;, இனிப்புப் பண்ணடங்கள்; தயாரிக்கப்படும், புதிய ஆடைகள வாங்கி; அணியப்படும், நட்புகள் புதுப்பிக்கப்படும். ஆகவே இவைபோலவே ஆக்கப்பூர்வமாக உடலைப் புதுப்பித்தல் மற்றும் மனித மனதைப் புதுப்பித்தல் இங்கே நாம் செய்ய வேண்டியுள்ளது. உடலைச் சுத்தப்படுத்தி, வீட்டுக் கதவைச் சுத்தம் செய்வதனைப்போலவே மனதையும் புதிதாகச் சுத்தப்படுத்த இந்த சுப சகுனம் எமக்கு அவசியம்.

இந்த புதிய வருடப்பிறப்பு முன்மாதிரியாக மாற ஒரு வாய்ப்பு. அல்லது கடந்துவந்த நல்லவற்றைப் பின்தொடர்வதற்கும்; ஒரு நல்ல வாய்ப்பு. இயற்கையும் கூட ஒரு புதிய சகாப்தத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் தருணம் இது. இது இயற்கையை கூட புதுப்பிக்க அல்லது வரவிருக்கும் ஆண்டிற்கு தயார் செய்ய ஒரு வாய்ப்பு. இது ஒரு தத்துவ வெளிப்பாடு. அதாவது, நேரத்துக்கு வேலை செய்வது, நேரத்துக்கு எழுவது, எழுதுவது, சாப்பிடுவது போன்றவை நேரத்தையும் இடத்தையும் வெல்வதற்கான மனிதப் பழக்கவழக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பாகும் இல்லையா!

பொருளாதார நெருக்குதல்களாலும், பேரிடர்களாலும், நோய் பயத்தாலும், ஏழ்மையாலும் சோர்ந்துபோயிருக்கும் இன்றைய காலகட்டத்தில் புத்தாண்டுச் சடங்குகளில் பிரதிபலிக்கும் அந்தத் தத்துவக் கருத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும். 

வருடாந்தர சடங்குகளின் தொடர் முழுவதும், இயற்கையோடு இயைந்து வாழ்வதும், இயற்கையின் ஆற்றலை வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதும்தான். இந்நாட்டில் இராவணன் காலத்திலிருந்தே சூரிய உற்சவம் கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு கூறுகிறது. 

சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து ஆற்றல்களும் சூரியனிடமிருந்து வந்தவை. பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவது சூரியனின் சக்தியை வீட்டிற்குள் இழுப்பதாகும். 

இயற்கைக்கு ஏற்ப அறுவடை செய்வது விவசாய சமுதாயத்தின் வேலை. மறுபுறம், பொருளாதார வளர்ச்சிக்கான உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்கிறது. இது ஒருவரின் தொழிலுக்கான பொறுப்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் விவசாயக் கருவிகளைக் கொண்டு உழைக்கும் சமுதாயமாக தன்னிறைவு பெறுகின்றோம். மற்றவர்களைச் சார்ந்து இல்லாததால், அந்தந்தப் பயிர்களின் விலை உயரும் போது அவர்களுக்குப் நன்மை கிடைக்கின்றது. இன்று நாம் மண்வெட்டியையும், கலப்பையினையும் அசிங்கமாக நினைத்து, மறந்த தேசமாகிவிட்டோம். அதனால்தான்நாம் தொடர்ந்து உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம்: அன்றாட வாழ்க்கை சரிந்து, எல்லாமே ஒரு சவாலாக உணரப்படுகின்றது இன்று.

சுபநேரத்தில் உண்பது என்பது பருவத்திற்கு ஏற்பவும், மருத்துவ குணத்திற்கு ஏற்பவும், ஆரோக்கியத்தைப் பேணவும். புத்தாண்டு மேஜையில் உணவுகளை வைத்து அந்த பருவத்துடன் தொடர்புடைய மருத்துவ குணங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் உணவுகளை உண்ணுதல். அந்த பருவத்தில் சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருந்தால், உடலுக்கு குளிர்ச்சியாக எள் அல்லது பச்சை பீன்ஸ் போன்ற தானியங்களை சோற்றுடன் கலந்து சாப்பிடலாம். உள்ளூர் கலாச்சாரத்தின் படி, சரியான நேரத்தில் சாப்பிடுவது பல நோய்களைக் குணப்படுத்தும். தற்காலத்தில் இதுபோன்ற சடங்குகளை மதிக்காமல் உடைப்பதால் ஆஸ்துமா, இரைப்பை அழற்சி, புற்றுநோய், சர்க்கரை நோய் என பல நோய்கள் வருகின்றன என்று நினைக்கலாம். 

இந்த மங்களகரமான காரியங்களுக்குத் தயாராகும் போது, மற்ற அனைத்து கலாச்சார பரிசுகளும் இயற்கையாகவே அடுத்த தலைமுறையினருக்;கு கடத்தப்படுகின்றன. இளம் பெண்கள் இனிப்புப் பண்டங்களைத் தயாரித்தல், சமையல் மற்றும் கைவினைப் பொருட்களைக் கற்றுக்கொள்கிறார்கள், அதுபோல வயதான பெண்கள் இனிப்புகளைத் தயாரிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் எப்படி அமைதியாக வேலை செய்வது என்று பயிற்சி செய்கிறார்கள். நல்லிணக்கத்தை உணர வைக்கின்றனர். 

ஆண்டு முழுவதும் நாட்டுப்புற விளையாட்டுகள் போன்ற திறன்களும் வளர்க்கப்படுகின்றன, அதே போல் அமைதியான பழக்கவழக்கங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சுப காரியங்களைக் கையாள்வது, பரஸ்பர மரியாதை மற்றும் நன்றியுணர்வினைத் தெரிவித்தல், இவை சகவாழ்வின் அடிப்படையாகும். இவ்வாறாக, புதிய ஆண்டுப் பருவம் சமுதாயத்தின் ஒழுக்கத்தைப் பின்பற்றும் ஒரு பாடமாகும்.

சுற்றுச்சூழலை ரசிக்கும் போது இவை அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எளிமையான வாழ்க்கை இருப்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும், அதில் அர்த்தமுள்ளது. ஆனால் பல-நுகர்வோர் சமூக அமைப்பு, நகரமயமாக்கல் மற்றும் வெளிநாட்டு நாகரிக மோகம்; இவை அனைத்து முக்கிய அமைப்புகளையும் கைப்பற்றியுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்பது ஊடக நிறுவனங்களின் விருப்பப்படி வெறும் வர்த்தக நிகழ்ச்சிகள் அல்ல. எனவே, உண்மையான சடங்குகள் மற்றும் நல்லிணக்கத்தின் செயல்திறன் இன்று மிகவும் தேவையான திறமை என்று சொல்ல வேண்டும். பொருளாதாரப் பிரச்சினைகளும் பொதுவாக சகவாழ்வில் தீர்க்கப்படுகின்றன என்பதை உணர்ந்து இந்த புதுவருடத்தினைக் கொண்டாடுவோம்.


0 comments:

Post a Comment