2025 ஜனவரி 3
அன்று, SPM Foundation உடன் இணைந்து,
எதுவும் அவர்களின் எதிர்காலத்தை தடை செய்ய முடியாது என்பதற்கான ஒரு உறுதியான
செய்தியுடன் BT/BW/Katchenai
Vishnu Vidyalayam பாடசாலையின் 101 மாணவர்களை சென்றடைந்தோம். 1 முதல் 5ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு புத்தம் புதிய பாடசாலை பைகள் மற்றும் 6 முதல் 11ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு கல்விச் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த தொலைதூர கிராமங்களை அடைய வேண்டிய பாதை சிரமமானதுதான். ஆனால் அணியின் உறுதியும், ஆதரவளித்த கொடையாளர்களின் கருணையும் இந்த முயற்சியை வெற்றியாக மாற்றின. பாடசாலைகுழந்தைகளின் மகிழ்ச்சியையும், அவர்கள் எதிர்காலத்தை நம்பும் தன்னம்பிக்கையையும், ஆசிரியர்களின் நன்றி உணர்வினையும் பார்க்கும் போது கல்வியே வாழ்க்கையை மாற்றும் மிக சக்திவாய்ந்த கருவி என்ற என் நம்பிக்கை மேலும் வலுவடைந்தது.
நான் கல்விக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கின்றேன்,
ஏனெனில் கல்வியே வறுமையை
முடிவுக்குக் கொண்டு செல்லும் ஒரே ஆயுதம். இப்போது வளர்ந்து
வரும் SPM
Foundation கல்வியை உறுதிப்படுத்தி, குழந்தைகளின்
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, அவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
📢 நீங்களும் இந்த பயணத்தில் பங்கு கொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெற வேண்டும், அவர்களின் கனவுகளை
நிஜமாக்க நாம் அனைவரும் ஒன்றாக செயல்படலாம்.
#EducationForAll #SPMFoundation
#BreakingBarriers #EmpoweringChildren #FutureLeaders #NoChildLeftBehind
0 comments:
Post a Comment