18 January 2025
தவறிழைக்காத அரசிக்கு இந்தியா, சீனாவின் வரவேற்ப்பு என்றுமில்லாதது. ஒரு அரசியல் ஆய்வு:
தீயில் எரிந்த அமெரிக்கா அதற்கு கொடுத்துள்ள விலை- எதுவும் நிரந்தரமில்லாதது
அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்கள் நுகர்வோர் அதிகமுள்ள மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. அந்த மாநிலங்களில் எந்த உற்பத்தியும் நடைபெறுவதில்லை என்பதையும், பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுவதையும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதையும் அங்குள்ளோர் உட்கொள்வதன் மூலம் அம்மக்கள் வாழ்கிறார்கள் என்பதையும் இது குறிக்கிறது.
17 January 2025
வீணான மின்சாரப் பாவனை நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு
14 January 2025
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்"
என் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த, மகிழினிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்! தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
நம் நாட்டில் எந்த நல்ல செயலையும் தை மாதத்தில் துவங்குவது என்பது மரபு. தை மாதத்தின் தொடக்கத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் சங்க காலத்தில் இருந்து கொண்டாடப்படும், திருநாள் ஆகும். இது சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் முறையில் கொண்டாடப்படுகின்றது. அறுவடையால் பெற்ற பலனுக்காக கடவுளர்க்கு நன்றி தெரிவிக்கும் முறையில் இம்மாதத்தில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
13 January 2025
அரிசியில்லாத பொங்கல் அமுழுமா அதுக்கு வழிசெய்யாத அரசு ஆழுமா?
தேவைப்பட்டால், மூன்று பருவங்களுக்குக் கூட விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய விவசாய அறிவை நம் நாட்டு விவசாயிகள் பெற்றுள்ளனர். இவற்றையெல்லாம் மீறி, தற்போது நடைபெற்று வரும் தைப் பொங்கல் பண்டிகையை வெற்றிகரமாக நடத்துவது, பால் சோற்றை சமைப்பது, தேவையான பச்சரிசியைக் கண்டுபிடித்து வாங்குவது ஆகியவை சாத்தியமில்லை என்று நாடு முழுவதிலுமிருந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் பல்வேறு உத்திகளை முயற்சித்ததாகத் தெரிகிறது, ஆனால் அவை வெற்றிபெறவில்லை.
10 January 2025
நாட்டை சுத்தப்படுத்த முன் மக்களின் மனங்களை சுத்தப்படுத்தனும்.
- 'என் குழந்தை பதினான்கு வயதிலிருந்தே தாங்க முடியாத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.'
- தனது மனைவி வெளிநாட்டிற்கு சென்று டிக்டோக்கிற்கு அடிமையாகி, தன்னையும் தனது நான்கு குழந்தைகளையும் மறந்து, சமூக ஊடகங்களில் அரை நிர்வாண நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக புகார் அளித்துள்ளார்.
- அரசாங்கமோ அல்லது குடிமக்களோ எதிர்பார்க்கும் மாற்றம், மக்களின் மனப்பான்மையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாமல் ஒருபோதும் நிறைவேறாது.