ADS 468x60

03 June 2021

இலங்கை பங்களாதேசிடமே 200 மில்லியன் கடன் வாங்கிச் சாதனை.

வங்கியில் நாம் கடன் வாங்கச் சென்றால், அங்கு நமது சொத்து மதிப்பு, வேறு கடன் ஏதும் பெற்று செலுத்திய வரலாறுகள், திருப்பிச்செலுத்தும் தன்மை என்பனவற்றை ஆராய்தே கடன் வழங்குவதுண்டு. ஆனால் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் எமது நாடு உள்ளதா என்பதே அனைவரதும் கேள்வி. குறிப்பாக இலங்கையின் வரலாறு பரந்த இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மகாவன்சா, தீபவன்சா, மற்றும் சூலவன்ச போன்ற பாலி இலக்கியங்களின் அடிப்படையில் வரலாற்று காலம் சுமார் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. அனுராதபுர இராச்சியத்தின் முதல் இலங்கை ஆட்சியாளர் பாண்டுகபயா கிமு 4 ஆம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

02 June 2021

இலங்கையில் நாம் பணக்காரர்களாகமுன் வயதாகிவிடுகின்றோம்.

நாம் ஏன் உலகின் முன்னேறிய நாடுகளுக்கு விரும்பி இடம்பெயர்கின்றோம்? நமது வாழ்க்கையில் இளமைப்பருவத்திலே மகிழ்சியாகவும் எமது அடுத்த சந்ததியினரின் வாழ்க்கைத் தரம் எம்மைவிட ஒரு படி நன்றாக இருக்கவும் வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் அந்த முடிவிற்கு வருகின்றோம். இலங்கையில் நாம் வயதாகுவதற்கு முன்னர் வசதி வாய்ப்புக்களுடன் வாழ முடியாது என்ற அடிப்படையிலே பலர் இந்த முடிவினை எடுக்கின்றனர். 

நமது வாழ்க்கை பெரும்பாலும் நேரம், பணம் மற்றும் ஆற்றலுக்கும் இடையிலான தொடர்ச்சியான போர் என்று கூறப்படுகிறது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, எங்களுக்கு நேரமும் சக்தியும் அல்லது ஆற்றலும் இருந்தன, ஆனால் எங்களுக்கு பணம் கிடைக்காததால் மட்டுப்படுத்தப்பட்டோம். நாங்கள் வேலை செய்து பணம் சம்பாதிக்கத் தொடங்கியபோது, நேரத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. நாம் வாழ்க்கைப் பயணத்தை துவங்கும்போது, நமக்கு நேரமும் பணமும் இருக்கக் கூடிய ஒரு காலத்திற்கு வருவோம், ஆனால் ஆற்றல் குறைந்து காணப்படும்.

29 May 2021

உரவகைகளை இறக்குமதித் தடைசெய்வது ஆரோக்கியமான திட்டமா?

அறிமுகம்.

சிறிது நாட்களுக்கு முன்னர் எமது நாட்டில் பெரிதாகப் பேசப்பட்ட ஒரு பிரச்சினை. நாட்டில் இரசாயன உரவகைகளுக்கு (பசளை) மற்றும் கிருமிநாசினிகளுக்கு அல்லது பூச்சிநாசினிகளுக்குப் பதிலாக சேதன அல்லது கரிம அல்லது இரசாயனமற்ற உர மற்றும் கிருமிநாசினிகளையே இனி வரும் காலங்களில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். அவர் வெளிப்படையாக தனது பொருளாதார ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில், நாட்டிற்கு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டமை ஒரு பாரிய பேசுபொருளாக இருந்தது. அது மக்களிடையே சாதகமாகவும் மறுபுறம் பாதகமாகவும் பரிந்துரைத்துப் பட்டி தொட்டியெல்லாம் பரவி ஒரு குழப்பத்தையே ஏற்படுத்தியது. அதைத்தான் நான் தலைப்பில் நச்சுத்தன்மையான உரங்களையும் கிருமிநாசினிகளையும் பாவிப்பது உண்மையில் ஆரோக்கியம் கிடையாது. இருப்பினும் அவற்றை உடன் நிறுத்துவது விவசாயத்துறைக்கு ஆரோக்கியம் இல்லை என்பதனையே இக்கட்டுரை ஆராய்கின்றது.

23 May 2021

கொரோணாவால் கொடுமைப்பட்டு சாகலாமா!

முகத்தோடு மாஸ்க் இன்றிச் செல்லலாமா- நாட்டை

மூடியபின் ஒன்றுகூடிக் கொள்ளலாமா!
கொண்டாட்டம் கும்மாளம் போகலாமா!
கொரோணாவால் கொடுமைப்பட்டு சாகலாமா!
சொல்லுப்போச்சுக் கேட்டுக்கொண்டு
நாட்டில் இருப்போமா!
இன்னும் இன்னும் பரவாமல்
வீட்டில் இருப்போமா!
இல்லை என்று சொல்லும் வரை இணைந்திருப்போமா!
இன்னும் ஒரு அலையின்றி ஒன்றுபடுவோமா!

17 May 2021

வழிமறந்துபோகும் வலிகள்!



அன்று
காலங்கள் கரைந்தன -என் 
கோலங்கள் மறைந்தன
வீட்டைக் காணோம்- என்
வீட்டாரைக் காணோம்- வளர்த்த 
ஆட்டைக் காணோம்
என ஒவ்வொன்றாய்,
சோகங்கள் நிறைந்தன!

ஆலயங்களிலும்
ஆற்றங்கரைகளிலும்
கூடராத்துக்குள்ளும் 
கூடாத சூழலிலும்
ஆநாதையாய் அலைந்து!

07 May 2021

கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நாம் முன்னேற வேண்டும்.

அன்பார்ந்த மக்களே!

ஒரு சமூகத்தின் முன்னேற்றம் எதைச் சார்ந்துள்ளது என்று கேட்டால், நான் தயங்காமல் சொல்வேன்: கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் உள்கட்டமைப்பு. இந்த மூன்று தூண்களும் வலுவாக இருந்தால் மட்டுமே, நாம் ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கி நகர முடியும்.

முதலில் கல்வியைப் பற்றிப் பார்ப்போம். கல்விதான் ஒரு தனிநபரின் அறிவுக் கதவுகளைத் திறக்கிறது. தரமான கல்வியை நாம் அனைவருக்கும் வழங்கும்போது, திறமையான ஒரு தலைமுறையை உருவாக்குகிறோம். அவர்கள் புதிய சிந்தனைகளை கொண்டு வருவார்கள், புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவார்கள், நம் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள்.

02 May 2021

கொரோனாவை வெற்றிகொள்ளும் சிறுவர்களுக்கான கல்வி முறை

எல்லாத்துக்கும் மாற்றுவழி இருக்குது
எதுக்கு நாம மாறுபட்டு நடக்கணும்
பொல்லாத இந்த கொவிடடோட போராடு
பொருத்தமான கல்விக் குளத்தில் நீராடு

நாம் இன்று வித்தியாசமான வாழ்க்கை முறைக்குள் எமது குழந்தைகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. பல மாணவர்கள் தமது முதல் ஆண்டு பாடசாலை அனுபவத்தினை முற்றாக இழந்துவிட்டதனையும காணலாம். இருப்பினும், பொதுவாகவே விடுமுறைகளுக்கு, ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும் இயல்பு உண்டு. குறிப்பாக மாணவர்களுக்கு. விடுமுறை என்ற உடன் கற்றல் தரும் இறுக்கம் தளர்ந்து, உவகையும் உற்சாகமும் மாணவர்களிடம் குடியேறிவிடும். ஆனால், கொரோனா பரவும் அச்சத்தால் விடப்பட்டிருக்கும் இந்த அசாதாரண விடுமுறையை அப்படிக் கருத முடியாது.

கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கல்வி கூடங்கள்; மட்டுமல்லாமல்; திரையரங்குகளும் பெரும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. குழந்தைகள் கூடி விளையாடும் பூங்காக்களில்கூட தற்போது பூட்டுகள் அறியப்படுத்தப்பட்டுள்ளன.

22 April 2021

இன்று பூமி தினமாகும்!


ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஒட்சிசனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும். ஒரு கணக்கீட்டின்படி ஐம்பது வருடங்கள் வாழும் “ஒரு மரம்” உற்பத்தி செய்யும் ஒட்சிசனை மதிப்பு  30,000 டொலர், சுத்திகரிக்கும் நீரின் மதிப்பு  35,000 டொலர், மற்றும் கார்பன் வடிகட்டுவதற்கான செலவில் 1,25,000 டொலர், அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல பில்லியன் டொலர்களைச் செலவிடுகின்றன! இவை அனைத்தையும் மரங்கள் இலவசமாகவே செய்து வருகின்றன.

நாம் மரம் நடுதலை ஊக்குவிக்க வேண்டும். மரம் நடுவதற்கு சிறுவர்கள் மற்றும் இளைஞ்ஞர்கள் முன்வரவேண்டும் அப்போதுதான் குளிர்சியான எதிர்காலத்தினை நாம் உருவாக்க முடியும்.