ADS 468x60

20 August 2022

இன்று ஒரு துண்டு மீன்சாப்பிடுவது முடியாதுபோயுள்ளது.

காலி முகத்திடல்; உட்பட நிரந்தரப் போராட்டத் தளங்கள் இருந்த இடங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இன்று நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கங்கள் மீண்டும் உருவாகி வருகின்றன. வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டங்களுக்கு காரணம் எரிபொருளும் மண்ணெண்ணையும்தான்.

இன்று பல மீனவ அமைப்புகள் ஒன்றிணைந்து மீன்பிடி போராட்டம் நடத்தப்பட்டதாக பல பத்திரிகைகள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தில் மண்ணெண்ணெய்க்கு மானிய விலை வழங்க வேண்டும், மீனவர்களுக்கு தட்டுப்பாடின்றி மண்ணெண்ணெய் கிடைக்க வேண்டும், எரிபொருள் நெருக்கடியால் கடந்த 3 மாதங்களாக வேலை இழந்த மீனவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 

14 August 2022

எம்மை ஆக்கிரமித்துள்ள சமுக நெருக்கடிகளும் ஆபத்துக்களும்.

இன்று நாம் கவனம் செலுத்தாத பல சமுக நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் வேர்விடத் துவங்கியுள்ளன. அதிகரித்துவரும் களவு, பாலியல் துஸ்பிரயோகம், கறுப்புச்சந்தைகள், ஏமாற்று வித்தைகள், இலஞ்சம், பதுக்கல்கள், போலிகளின் அனுமதி, போதைவஸ்த்து என பல சமுக நெருக்கடி முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சமூக விரோத நடத்தை மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அதிக ஆபத்தில் உள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதுவரை பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் போதைப்பொருளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இருப்பினும் இளம் தலைமுறையினரை போதைப்பொருளில் இருந்து காப்பாற்ற அரசு கடுமையாக உழைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தகாலத்தில் கூட நாம் கல்வியைக் கட்டிக்காத்தோம்!

இன்று பல மாற்றங்கள் நிகழத் துவங்கியுள்ளன. எரிபொருள் நெருக்கடி மோசமடைந்ததால், இலங்கையின் வாழ்க்கை மாறியது. பேற்றோல் நிலையங்களில் வாகனங்கள் வரிசையாக நீண்டு செல்லத் தொடங்கியவுடன், அரசாங்கம் ஒரு முடிவை எடுத்தது. வாரத்துக்கு ஐந்து நாள் பாடசாலை வாரம் 2 அல்லது 3 நாட்கள் ஆனது, ஐந்து நாள் அலுவலக வேலை வாரம் 3 நாட்கள் ஆகச் சுருங்கியது.
வேலை இல்லாத நாட்களில் வீட்டில் இருந்தே விவசாயம் செய்யும்படி அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 

அந்த கோரிக்கை காற்றில் மிதந்து அங்கு யாரும் விவசாயம் செய்யவில்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நகர்ப்புற மக்களில் பெரும்பாலோர் எந்த அறுபடையினையும்; பற்றி அறியாத, விடுமுறை நாட்களில் மகிழ்வாக இருந்து டிவி பார்ப்பதை மட்டுமே விரும்பும் குழுவாக இருந்தனர். விளைச்சலுக்குத் தேவையான விதைகளோ உரங்களோ மக்களிடம் இல்லை என்பது அடுத்த பிரச்சினை. 

11 August 2022

பொருளாதார சிந்தனை இல்லாமல் அரசியல் பேசி நாட்டை காப்பாற்ற முடியாது

நாட்டின் பொருளாதாரம் குறித்து புதிய சிந்தனைகளை சிந்தித்து செயல்படுத்த வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். அரசியல் வெற்றுக் கோஷங்களினால் தாம் அனுபவிக்கும் இன்னல்களைப் பற்றி இப்போது நாட்டுப் பொது மக்கள் ஓரளவு புரிந்துகொண்டிருப்பதை அங்கீகரிக்க முடியும். இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக வங்கி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இரண்டு இன்றியமையாத நிறுவனங்களாக மாறிவிட்டதால், அந்த நிறுவனங்கள் வெளிப்படுத்தும் கருத்துகளுக்கு அதிக மதிப்பு உள்ளது. அந்த யோசனைகளை நிராகரிக்க முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என்பது தயக்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாகும்.

10 August 2022

ஓடி மறைந்த எந்த வீரருக்கும் தேசத்தின் மரியாதை கிடைப்பதில்லை.

 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் இலங்கைக்கு பல விடயங்களில்; நற்பெயரைக் கொடுத்துள்ளன. மல்யுத்தம் மற்றும் பளு தூக்குதல் போன்ற விளையாட்டு நிகழ்வுகளில் விருதுகளையும் சாதனைகளையும் பெறுவது அரிது. அந்த இரண்டு பிரிவுகளிலும் எங்களால் பதக்கம் வெல்ல முடிந்தது. குருநாகல் நெத்மி அஹிம்சா 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை எமக்கு வழங்கினார். 55 கிலோ பளு தூக்குதல் பிரிவில் திலங்க இசுரு குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். யுபுன் அபேகோன் மற்றும் பாலித பண்டார ஆகியோர் தடகளப் போட்டிகளில் அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்தினர். தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுநலவாயத்தில் இலங்கை ஒரு சாதனையினை நிலைநாட்டியிருக்கின்றது.  

06 August 2022

நாம் உணவினை உற்பத்தி செய்தே ஆகணும்: நாலில் ஒருவர் ஒரு நேர உணவினை இழந்துள்ளோம்!

நாம் இந்தநாட்டில் இப்போது பன்முக நெருக்கடியினை எதிர்கொண்டு இருக்கிறோம். இது பார்ப்பதற்கு ஒரு பொருளாதார நெருக்கடி போல் தெரிகிறது, ஆனால் அதனுடன் தொடர்புடைய அரசியல் நெருக்கடி உள்ளது. தொற்றுநோயுடன், பல ஆண்டுகளாக நடந்து வரும் சுகாதார நெருக்கடியும், அதிகம் விவாதிக்கப்படாத சுற்றுச்சூழல் நெருக்கடியும் உள்ளது. சமூக கட்டமைப்புகளிலும் ஒரு நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, சமூகத்தின் கீழ்மட்டத்தில் சில உடைவுகள் நடக்கின்றன. இந்த விவகாரங்களைப் போலவே, கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முக்கியமான பகுதி, நம் நாட்டின் வெளிநாட்டு உறவுகள் துறையில் உருவாக்கப்பட்ட நெருக்கடியாகும். ஸ்லாவோய் ஷிசெக் தனது 'எபிடெமிக்' புத்தகத்தில் இந்த நிலைமையை 'முழுமையான புயல்' என்று விவரித்துள்ளார். பல சிறிய புயல்களால் உருவான ஒரு பெரிய புயல் என்று பொருள். இலங்கையில் நாமும் இப்போது அத்தகைய முழுமையான புயலை எதிர்கொண்டுள்ளோம்.

01 August 2022

பொருளாதார நெருக்கடி சிரேஸ்ட மாணவர்களின் இடைவிலகலை அதிகரித்து வருகின்றது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியானது நீண்டகாலத்தில் நாட்டைப் பாதிக்கும் பாரிய அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதும், இந்தப் பாதிப்புகளைத் தணிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மக்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கைத்தரத்தை குறுகிய காலத்தில் மீண்டும் எதிர்பார்க்க முடியாது என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருவதற்கு கணிசமான நேரம் கடக்கும் வரை இவற்றை நாம் அனுபவிக்க நேரும்.

இன்று நாட்டிற்கு தேவையான புதிய பொருளாதார மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக, ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடியிலிருந்தான மீட்சி இருந்தபோதிலும், விஷேசமாக சில துறைகள் தொடர்சியாக இயங்குவதை எந்த வகையிலும் உறுதி செய்ய வேண்டும். நாம் எதிர்காலத்தில் எவ்வாறான பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல், நாடு விட்டுக்கொடுக்க முடியாத தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டிய ஒரு துறை கல்வியாகும்.

அரசியல் அமைப்பில் இருக்கும் இரண்டு சாத்தியமான தீர்வுகள்.

தலைக்குமேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன! ஆகவே இருந்த ஒரே ஒரு நம்பிக்கையும் மெதுமெதுவாகக் குறையத் துவங்கியுள்ளது. அதே நேரம் நம் நாடு பல நெருக்கடிக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகியுள்ளது. ஆகவே இந்த நாட்டிற்கு இந்தத் தருணத்தில் தேவைப்படுவது, கட்சிகள், தனிநபர்கள் என வேறு வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்காமல் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். இந்த நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பிரதிநிதிகளால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தினேஷ் குணவர்தன பிரதமரானார். பொது மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்போது அமைச்சரவை உருவாகி வருகின்றது. இந்த நிலையில், இப்போது செய்ய வேண்டியது, நாடு விழுந்துள்ள பொருளாதாரப் படுகுழியில் இருந்து விரைவாக மீள்வதற்கு உடனடியாக வழிவகை செய்வதுதான். இது தொடர்பில் சர்வகட்சி அரசாங்கத்திற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.