ADS 468x60

30 August 2016

தோழில் சாய நீ இருந்தால் போதுமே!

என் இனிய தமிழ் நெஞ்சங்களே! எனது பிரதேசத்தின் வயல் காட்டிலும் கடற்கரை வாடிகளுக்குள்ளும் மலை ஓரங்களிலும் கட்டுண்டு கிடந்த கிராமத்து காதலை சிறைப்பிடித்து வந்து உங்கள் சாளரங்களின் ஓரம் வலைப்பூக்களின் வாசம் உரசி எண்ணி உருசிக்க கொண்டுவந்து தந்துள்ளேன். நீங்கள் ஒரு கணத்தை செலவிட்டு இந்த மாசற்ற காதலை மனதில் காணுங்கள்.

29 August 2016

உலகில் தமிழ் அழியக்கூடிய சாத்தியம் விழித்தெழுவோம்!

  கொழும்பு தமிழ் சங்கத்தில் இன்று நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டுக்கு நானும் ஒரு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தேன். நன்றி கௌசி அக்கா.
ஒரு நூல் என்னைப் பொறுத்த அளவில் அனுபவத்தில் இருந்தும், கற்றவை அல்லது பெற்றவையிலிருந்தும் மூன்றாவது இரண்டும் கலந்துமான மூன்று வகையில் பிரசிவிக்கப்படுகின்றன.

28 August 2016

கல்வியியல் கல்லூரிகளின் மாற்றத்தின் தேவைப்பாடு!!

கௌரவ ரணில் விக்ரமசிங்க கல்வி மந்திரியாக இருந்தபோது பாடசாலைகளில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் தேவையை உணர்ந்த அவர் கல்வியியல் கல்லூரிகளை நிறுவி அதை அமுல்படுத்தி வைத்தார். தற்போது இலங்கையில் மொத்தம் 19 கல்வியியல் கல்லூரிகள் நிறுவப்பட்டு 4000 ஆசிாியா்கள் அதன் மூலம் வெளியேற்றப்படுகின்றமை ஒரு சிறப்பாகும். இந்த கல்வியியல் கல்லூரிகள் மூலம் நல்ல திறமையுள்ள பயிற்றப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி அவர்கள் மூலம் பிரகாசமான எதிர்காலத்தினை மாணவர்கழூடாக தோற்றுவிப்பதனையே இது இலக்காக கொண்டிருந்தது. இந்த கல்லூரிகளுக்கு உ.த சித்தி பெற்ற மாணவர்கள் தெரிவாகி சுமார் மூன்று வருடங்கள் உள்ளேயும் வெளியேயும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இவர்கள் பல பாடத் துறைகளில் ஆசிரியர்களாக வெளியேற்றப்படுகின்றனர் முறையே கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சுகாதாரம், தொழில் நுட்பம், சமயப்பாடங்கள், விவசாயம், நடனம், மொழி போன்றவற்றை குறிப்பிடலாம். 

27 August 2016

காதலில் மாத்திரமே

காதலில் மாத்திரமே
நாயே எனத் திட்டுவதற்கும்
செல்லமே எனக் கட்டுவதற்கும்
கண்டங்கள் கடந்து நேசிப்பதற்கும்
கண்களில் நீர்சொட்ட யாசிப்பதற்கும் ஒண்ணுகிறது

25 August 2016

நம்ம பா.ம.உறுப்பினர்கள் எங்கே!!

"காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்"
கௌரவ பா.உறுப்பினர் திருமதி சாந்தினியை முந்தநாள் பாராளமன்றத்திற்கு ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்த போது மீண்டும் இரு வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது மகிழ்சி.இவர் போன்ற அனுபவமும் விடய அறிவும் படித்தவர்களும் பா.ம செல்வதை நான் மிகவும் வரவேற்கிறேன். இவர் அன்பானவர் அதேபோல் நுனி நாக்கில் புள்ளிவிவரங்களை வைத்து தொனி உயர்த்தி பேசும் பல்மொழி ஆற்றல் கொண்ட ஒரு திறமைசாலி. அவரை மீண்டும் கண்டு பேசியதில் மகிழ்சி. இவ்வாறானவ்களைத்தான் கௌரவ என அழைக்க தோணுகிறது.

24 August 2016

மட்டக்களப்பில் சுகாதாரமும் இடை குறைந்த பிள்ளைகளின் அதிகரிப்பும்.

 பொருளாதார, அரசியல், இனம், பிரதேசம் மற்றும் சமுக அபிலாசைகள் கடந்து சுகாதாரம் சுகாதாரம் அனைத்து உயிர்களுக்குமான ஒரு அடிப்படை உரிமையாகும். ஒரு சமுகத்தின் துடிப்பானஇ உற்பத்தித்திறனுடைய மனிதர்களை கட்டியெழுப்புவதில் ஒரு மனிதனின் உடல் மற்றும் உள சுகாதாரம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் இன்றய உலகில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வறுமை குறைப்பு ஆகியவற்றில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் இது நடுநாயகமாக இருந்து வருகின்றதுஇ WHO கூறுவதற்கமைய ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல் உளம் என்பனதான் அவனது பாடசாலைக் கல்வி மற்றும் அவனது அதிகளவான உற்பத்தி திறன் உன்பனவற்றுக்கு ஊற்றுக்கண் என தெரிவித்திருப்பது எமது நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்துவதில் சுகாதாரத்தின் மேலான கவனம் அதிகரிக்கப்படனும் எனக் கூறுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் ஆண்களைவிட பெண்கள் சுகாதாரமான வாழ்க்கை வாழ்கின்றனர் என UN அறிக்கை கூறுகின்றது

மட்டக்களப்பின் சுகாதாரமும் இடை குறைந்த பிள்ளைகளின் அதிகரிப்பும்.

 பொருளாதார, அரசியல், இனம், பிரதேசம் மற்றும் சமுக அபிலாசைகள் இவைகளைக்  கடந்து சுகாதாரம் என்பது அனைத்து உயிர்களுக்குமான ஒரு அடிப்படை உரிமையாகும். ஒரு சமுகத்தின் துடிப்பான, உற்பத்தித்திறனுடைய மனிதர்களை கட்டியெழுப்புவதில் அந்த சமுக அங்கிகளின் உடல் மற்றும் உள சுகாதார ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் இன்றய உலகில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வறுமை குறைப்பு ஆகியவற்றில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் சுகாதாரம் நடுநாயகமாக இருந்து வருகின்றது. "ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல் உளம் என்பனதான் அவனது பாடசாலைக் கல்வி மற்றும் அவனது அதிகளவான உற்பத்தி திறன் என்பனவற்றுக்கு ஊற்றுக்கண் என" WHO தெரிவித்திருப்பது எமது நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்துவதில் சுகாதாரத்தின் மேலான கவனம் அதிகரிக்கப்படனும் என்பதனை கோடிட்டுக் காட்டுகின்றது.  இலங்கையைப் பொறுத்தவரையில் ஆண்களைவிட பெண்கள் சுகாதாரமான வாழ்க்கை வாழ்கின்றனர் என UN அறிக்கை கூறுகின்றது

இருந்தாலும் சிரிக்கின்றேன்

துளித் துளியாய்
துகள் துகளாய் ஒடஞ்சேனே
வெயில் வெயிலாய்
தினம் கலங்கி வறண்டேனே
இருந்தாலும் சிரிக்கின்றேன் -நீ
மறந்தாலும் மரிக்கின்றேன்
உன் நினைவால்