ADS 468x60

17 April 2025

புத்தாண்டுக்கு முன்பே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

 புத்தாண்டுக்கு முன்பே அரசு ஊழியர்களுக்கு சம்பள உ ர்வு கிடைத்ததாக அறியப்படுகிறது. இது 2025 பட்ஜெட்டில் செய்யப்பட்ட ஒரு திட்டத்தின் நிறைவேற்றமாகும். அதிகரிப்பில் திருப்தி அடைபவர்களும் இருக்கிறார்கள், திருப்தி அடையாதவர்களும் இருக்கிறார்கள். மற்றொரு பிரச்சனை என்னவென்றால், சம்பளம் பல மடங்கு அதிகரித்தாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் சவாலை சமாளிப்பது கடினம். அரசு ஊழியர்களின் சம்பளம் அந்த அளவுக்கு அதிகரித்தாலும், தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலானோருக்கு வருடாந்திர கொடுப்பனவுகள் அல்லது வருடாந்திர வோணஸ்களை எதிர்பார்த்தபடி அந்த தொழிலாளிகள் பெறவில்லை என்பதும் ஒரு பிரச்சனையாகும்.

ஓடிப்பாருங்களேன் -அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் அறிமுகம்!

பொலிஸார் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வேகக் கேமராக்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த அதிநவீன சாதனங்களில் இரட்டை கேமராக்கள் மற்றும் இரவு நேரத்திலும் தெளிவான காட்சிகளைப் பதிவு செய்யும் திறன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளும் இலங்கையின் பொருளாதாரப் பாதையில் ஒரு திருப்புமுனையும்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையின் பொருட்கள் மீது 44% வரி விதித்தது, இலங்கை அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 88% வரி மற்றும் வர்த்தகத் தடைகளுக்குப் பதிலடி என்று காரணம் காட்டினார். இருப்பினும், பின்னர் அமெரிக்க ஜனாதிபதி அந்த 'பதிலடி' வரிகளை இலங்கை மற்றும் சில நாடுகள் மீது நிறுத்தி வைத்தார். பல ஆண்டுகளாக அமெரிக்கா இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக ஆடை ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ள இலங்கை, இந்த 44% வரி விதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

16 April 2025

உஷ்ண அலையின் தாக்கம்: தாகம் இல்லையென்றாலும், குடிநீர் அருந்த வேண்டும்.

"கால நிலை மாறிப்போச்சு என்கிறானுங்கோ 

அதற்கு காரணமே நம்மதானே விளங்கவில்லையா”  

இன்று காலம் பொச்சுப்போச்சு என பல முதுமையானவாகள் பேசிக்கொள்கின்றனர். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையானது நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அதிக உஷ்ணநிலை நிலவுவதாக எச்சரித்துள்ளது. இந்த உஷ்ணநிலையானது மனித உடலில் நீரிழப்பு, தசைச் சிதைவு, அதிகப்படியான சோர்வு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிக்கை ஒருபுறம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டாலும், மறுபுறம் இலங்கையின் தற்போதைய சமூக-பொருளாதார மற்றும் சுகாதார கட்டமைப்பில் இந்த உஷ்ண அலையின் தாக்கம் எத்தகைய சவால்களை உருவாக்கும் என்பதை ஆழமாகப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

14 April 2025

வாறாயோ சித்திரை வாறாயோ!

 


வாறாயோ சித்திரை வாறாயோ

மலர் புத்து வசந்தம் தாராயோ
நோய் நொடிகள் தொலைந்து உயிரே வாழ
நிலையான மகிழ்சி தாராயோ!
புதுப்பானை பொங்கி வழியும் அதில்
புது ஆசை கோடி விழையும்
புது ஆடை வேண்டி அணிந்து-அன்று
பொழுதெல்லாம் புழுதி கிழம்பும்
குயில் பாட்டு பாடி இசை கேட்கும்
குலம் கூடி மகிழ்ந்து உறவாடும்
வாறாயோ சித்திரை வாறாயோ
மலர் புத்து வசந்தம் தாராயோ!

13 April 2025

காலம் பொன்னானது: உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களா என்று சோதித்துப் பாருங்கள்!

 ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?

பொதுவாக, நாம் செய்யும் செயல்கள் பயனற்றவை என்று நமக்குத் தோன்றும் வரை, ஒவ்வொரு செயலுக்கும் தனிப்பட்ட காரணங்களை நம்மால் நியாயப்படுத்த முடியும். ஆனால், அதன் விளைவுகளை உணர்ந்து, சற்று முயற்சி செய்தால் இந்த நிலையை மாற்றிக்கொள்ள முடியும். ஒருவர் தனது வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான சில முக்கிய அறிகுறிகள் இங்கே:

'விசுவாசுவ' வருடப்பிறப்பு சுப நேரங்கள்- 2025


தமிழர்களின் முக்கியமான பாரம்பரிய பண்டிகைகளில் தமிழ் புத்தாண்டு முதன்மையானது. இந்த இனிய திருநாள் பொதுவாக ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கும் இந்த நன்னாள், "சித்திரை திருநாள்" என்றும் போற்றப்படுகிறது. சூரியப் பொங்கல் காலத்துக்குப் பின் வரும் இந்த நாள், தமிழ் நாட்காட்டியின் சித்திரை மாதத்தின் முதல் நாள் என்பதால், தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

சித்திரையின் புது வருடம்: பாரம்பரியம் காக்கும் இலங்கைத் தமிழரின் புத்தாண்டு

2025ஆம் ஆண்டு சித்திரை மாதம் பிறக்கவிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்த மாதம் வரும்போது, என் மனமெங்கும் ஒருவித வாஞ்சையும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஒரு இலங்கைத் தமிழனாக, இந்த வருடப்பிறப்பு எனக்கு வெறும் காலமாற்றம் மட்டுமல்ல; அது நமது வாழ்வின் சுழற்சியையும், இயற்கையின் புதுப்பித்தலையும், போர் மற்றும் அனர்த்தங்களின் ஊடாக நாம் கடந்து வந்த பாதையையும் நினைவூட்டும் ஒரு புனிதமான தருணம்.

2025ஆம் ஆண்டுக்கான ‘விசுவாசுவ’ புதுவருடம் ஏப்ரல் 14ஆம் திகதி அதிகாலை 2.29 மணிக்கு பிறக்கிறது என்ற செய்தி, பஞ்சாங்கக் கணிதத்தின் துல்லியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது. ஏப்ரல் 13ஆம் திகதி இரவு 10.29 மணி முதல் ஏப்ரல் 14ஆம் திகதி காலை 6.29 மணி வரையிலான புண்ணிய காலம், இந்த நாளின் ஆன்மீக முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. கைவிசேட நேரங்களான காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும், பெரியோர்களிடமிருந்து ஆசிகளைப் பெற்று, புதிய ஆண்டை நம்பிக்கையுடன் தொடங்குவதற்கான சிறந்த நேரங்களாகும்.