ADS 468x60

14 April 2025

வாறாயோ சித்திரை வாறாயோ!

 


வாறாயோ சித்திரை வாறாயோ

மலர் புத்து வசந்தம் தாராயோ
நோய் நொடிகள் தொலைந்து உயிரே வாழ
நிலையான மகிழ்சி தாராயோ!
புதுப்பானை பொங்கி வழியும் அதில்
புது ஆசை கோடி விழையும்
புது ஆடை வேண்டி அணிந்து-அன்று
பொழுதெல்லாம் புழுதி கிழம்பும்
குயில் பாட்டு பாடி இசை கேட்கும்
குலம் கூடி மகிழ்ந்து உறவாடும்
வாறாயோ சித்திரை வாறாயோ
மலர் புத்து வசந்தம் தாராயோ!
இளங்காதல் யோடி இணையும் அங்கு
இருகண்கள் சேர்ந்து பிணையும்
பழங்காலக் கதைகள் பேசி -முதியோர்
பால்போல மகிழ்ந்து சிரிப்பார்
வருங்காலம் புதிய ஒளி வீசி
வரவேற்க ஓடி வாராயோ!
வாறாயோ சித்திரை வாறாயோ
மலர் புத்து வசந்தம் தாராயோ
கலையாத கூந்தல் கலையும்- ஊஞ்சல்
மலைபோல ஆடி அலையும்
இனிப்பான உணவு சேரும்- அதில்
இன்பங்கள் வந்து ஊறும்
பெரியோரின் ஆசி தனைவேண்டி
சிறியோர்கள் வாழ்வு வழமாக
வாறாயோ சித்திரை வாறாயோ
மலர் புத்து வசந்தம் தாராயோ
வாறாயோ சித்திரை வாறாயோ
மலர் புத்து வசந்தம் தாராயோ
நோய் நொடிகள் தொலைந்து உயிரே வாழ
நிலையான மகிழ்சி தாராயோ

0 comments:

Post a Comment