ADS 468x60

23 February 2011

தேடுகிறேன்...












இறுக்கங்களுக்குள்
இடைவெளியை தேடுகிறேன்!
இளமை தொலைத்த
இன்பம் தேடுகிறேன்!

பலவீனத்தில்
பலம் தேடுகிறேன்!
பரோபகாரத்தில்
பாசத்தை தேடுகிறேன்!

உழைப்பிற்குள்
ஊக்கத்தை தேடுகிறேன்!
உலகத்தில்
நிம்மதி தேடுகிறேன்!

அராஜகத்தில்
அமைதி தேடுகிறேன்!
அரசியலில்
உரிமை தேடுகிறேன்!

கண்களில்
கருணை தேடுகிறேன்!
புன்னகைத்து
புண்ணியம் தேடுகிறேன்!

மதுவில்
மயக்கம் தேடுகிறேன்!
மாதில்
மனதை தேடுகிறேன்!

நாட்டிலே
வேலை தேடுகிறேன்!
நல்நெறியில்
பணம் தேடுகிறேன்!

காதலிற்குள்
நிஜத்தை தேடுகிறேன்!
கல்லிற்குள்
கடவுளைத் தேடுகிறேன்!

தேடுகிறேன்! தேடுகிறேன்!
உனக்குள்
உன்மை தேடுகிறேன்!
எனக்குள்
என்னைத் தேடுகிறேன்!

3 comments:

Unknown said...

உன் அழகே
அழகான உன்
சிந்தனைதான்
தெரியுமா?

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி முகுந்தா...என் அழகை கண்டு பிடித்தமைக்கு...

Niroo said...

தேடி கண்டுப்பிடிச்சா மறக்காம மெயில் பண்ணுங்க

Post a Comment