
31 December 2017
எல்லைக் கிராமங்களில் சிறுவர்களின் கவலைக்கிடமான போஷாக்கு மட்டம்.

26 December 2017
மறக்கவில்லை உன் வஞ்சக்குணத்தை!!

கடல் நான் அறிந்த மட்டில்
நீதான் உலகின் முக்கால்
அறியாதவற்கு நீயே சிக்கல்
உன்னில் பயனித்தே நாடுகளைக் கண்டான்
உன்னை நம்பியே உணவுகளை உண்டான்
பவளமும், முத்தும் பரிசளித்தாய்
பசுபிக்கடலில் தீவுகள் தந்தாய்
25 December 2017
"உங்களை ஆதரிப்பதில் வேலை இல்லை" இவை இல்லாவிடின்!
02 December 2017
மண்ணின் கனவுகளைச் சுமந்துவரும் 'ஊர்க்குருவியின் உலா'
நடைபெற்று முடிந்த புத்தக வௌியீட்டு நிகழ்வினை மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தினர், அதன் செயலாளா் ஓய்வு பெற்ற அதிபர், சமாதான நீதவான் வே.தவராசா அவர்கள் தலைமையில், இனிதே நடாத்தி முடித்து வைத்தனா்.
தமிழ் சங்கத்தினரின் தட்டிக்கொடுப்பினையும், பாராட்டினையும் முழு உதவியினையும் நான் மனதில் இருத்தி நன்றி கூற விரும்புகின்றேன்.
தொடர்ந்து மழை பொழிந்து கொண்டிருந்தது, ஆனால் எமது நிகழ்வில் மாத்திரம் காலையில் இருந்து மாலை வரை வெறும் இதமான கோடையாக வெயில் எறித்தது. வர்ணபகவானின் ஆசிதான் எம்மை அன்று வடிவாக நடாத்த உதவியது. நன்றி இயற்கையே! மனிதர்களை விட உன் உணர்வு பெரியதுவோ!
27 November 2017
எனது ஊர்க்குருவியின் உலா கவிதை நூல் மற்றும் கவிதைகளடங்கிய இறு வட்டு வெளியீடு.

இந்த நூலின் முதற்பிரதிகள் 25.11.2017 அன்று கௌரவ எதிர்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சட்டத்தரணி கௌரவ இரா. சம்மந்தன் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அடுத்த பிரதி தமிழ் அரசிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மாவை சேனாதிராசா அவர்களிடமும், அடுத்த பிரதி ஜனாதிபதி சட்டத்தரணியும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சுமேந்திரன் அவர்களிடமும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
20 November 2017
ஏழ்மையைக் காரணம் காட்டிப் படிக்க முடியவில்லையென்பது சமுதாயக் குற்றமாகும்!
இன்றய சிறந்த மாணவர்கள் நாளைய நற்பிரஜைகள், நாம் அனைவருக்கும் கல்வி என்னும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் அதுபோல் நாம் கல்வியின் மகத்துவத்தினை நன்கு அறிந்துள்ளோம்.
மொட்டுக்கள் மலர்ந்து விரியும் பொழுது மணம் பரப்பும், அதே போலவே மாணவர்களும் சிறந்த கல்வியை பெற்று திகழும்பொழுது அச்சிறப்பு நாட்டையே மேன்மையுறச் செய்யும். மாணவர்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வினை ஏற்ப்படுத்தவும், பாடசாலையின் அவசியத்தினை எடுத்துக்கூறவும் சர்வதேச மாணவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது ஆண்டுதோறும் நவம்பர் 17இல் அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றது. இன்று சர்வதேச மாணவர் தினமாகும். எமது தமிழ் பிரதேசங்களிலும் மாணவர்கள் கல்வியில் ஈடுபடுவதனை அதிகரிக்க அனைவரும் ஒன்றாகுவோம். சுரவணையூற்று பாடசாலைச் சிறார்களை சந்தித்தபோது
16 November 2017
பெண்களின் அரசியல் மற்றும் தொழில்படையில் அதிகரிப்பின் அவசியம்.
வெறும் 10% விகிதம் தான் அரசியலில் பெண்களின் பங்களிப்பு இலங்கையில் இருந்து வருகின்றது. அத்துடன் மொத்த ஊழியப்படையில் 32% விகிதமாக மாத்திரம் இவர்களது பங்களிப்பு கணிக்கப்பட்டுள்ளது. இதனை குறைந்தது 40% விகிதத்துக்கு 2020 ஆண்டளவில் உயர்த்த வேண்டும் என்பதே பிரதமரின் குறிக்கோளாகும். என கௌரவ பா.உறுப்பினர் #ரோசி #சேனநாயக்க அவர்கள் பெண்களின் முயற்சியாண்மை பற்றி #BMICH இல் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
13 November 2017
கிழக்கிலங்கையின் அடையாளத்தினை உறுதிப்படுத்திய தமிழ் இந்து எழிச்சி விழா 2017.
இருமருங்கும் குளங்கள் எங்கு சென்றாலும் வளங்கள் வருவிருந்து பார்த்து வாழவைக்கும் அருமருந்த மக்கள் வாழும் படுவானில் எமது பிரதேசங்களில் விழிப்பிழந்து போகும் எமது பாரம்பரிய அடையாளத்தினை செழிப்புறவைக்கும் நிகழ்வு, நல்ல மனிதர்கள் வாழ்ந்து நாட்டுக்கு தொண்டு செய்த வெல்லாவெளியில் இனிதே எழுச்சியுடன் நடந்தேறியது.
06 November 2017
சொந்த மண்ணில் சொந்த மரங்களை விதைப்போம்!

எமது மண்ணுக்கு அதிக மழைவீழ்ச்சி தரும் மாதம் கார்த்திகை.
05 November 2017
மேலைத்தேய நாடுகளில் கல்வி செயற்பாட்டு ரீதியானது.

எல்லோருக்கும் ஒரு சமுகப்பொறுப்புண்டு; மறந்துவிடுகின்றனர்
தேத்தாத்தீவு, களுதாவளை செட்டிபாளையம், களுவாஞ்சிக்குடி, எருவில், குறுமண்வெளி போன்ற கரையோர நடுத்தர கிராமங்களுக்கு அழகு சேர்ப்பவை, நிலக்கீழ் நீரை ஏந்தி வைத்திருப்பவை அங்குள்ள நீண்டு நிலைத்திருக்கும் மரங்களே!.
அவை ஒரு சில மனிதர்களின் கீழ்த்தரமான தந்திரங்களாலும், கோயில்களின் பெயர்களினாலும் கொன்றழிக்கப்டும் அளவுக்கு அவற்றை மீள்நடுகை செய்கின்ற, பாதுகாக்கின்ற மனப்பாங்கு உள்ளவர்கள் மிக அரிதானதாகவே காணப்படுகின்றனர்.
04 November 2017
ஒரு பச்சை சமிக்சையாக பார்க்கப்படும் பெரும்பான்மை இன அமைச்சர்களின் உரை.
'ஓற்றை நாடு என்ற கொள்கைக்குள் பௌத்த மதத்தினை முன்னுரிமை அளித்துக்கொண்டு விட்டுக்கொடுப்போடு ஒரு தீர்வுத்திட்டத்துக்கு ஒத்துவரும் ஒரு தமிழ் மக்களின் தலைவரான திரு சம்பந்தன் அவர்களது காலத்துக்குள் நாம் ஒரு தீர்வினை வளங்காவிடின், ஒரு போதும் அது சாத்தியமாகாது' என அமைச்சர் டிலான் மன்றில் நின்று உரத்துரைத்தது சிங்கள மக்களிடையே சம்பந்தரை இன்று ஒரு கீரோவாக தூக்கி நிறுத்தியுள்ளது எனச்சொல்லாம்.
30 October 2017
கிராமப்புறங்களில் துளிர்விடும் மட்டக்களப்பு மாண்மீகம்.
தமிழும் சமயமும் இரு கண்கள் என்பதை என்பதை நாவலர் சொன்னதன் பின் நேரில் அதிகம் கண்டுகொள்ளும் பாக்கியத்தினை கடந்துவந்த தடம்பிரண்ட பாதைகளில் அனுபவிக்கும் சந்தர்ப்பங்கள் வலு இழக்கச் செய்யப்பட்டோம். இருந்தும் ஸ்த்தாபிக்கப்பட்ட பெயரளவான நிறுவனங்களின் இயங்கு நிலை 'முருங்கையில் வேதாளமாய்' பெயரளவில்; மட்டும் இருந்து துரும்புக்கும் உதவாமல் இருப்பது மட்டக்களப்பின் நிலை. இவ்வாறான பாதைகளில் இந்த தேவைகளிளை நிரப்பிக்கொண்டு தமிழ், அதன் செல்வாக்கு, எமது பாரம்பரியம், நடைமுறை, வாழ்வியல் போன்றவற்றை பறைசாற்றும் பல படிநிலைகளை வெற்றிகரமாக கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்தி சபையினர் எடுத்தேத்தி வருகின்றனர்.
22 October 2017
நீ பூத்தூவும் மேகம்!!
கூத்து .

மகிழ்சியிலும் வரும்
இரண்டும் கூத்துத்தான்!
மகிழ்சியில் வரும் கூத்து
மருவிப்போனதும்
மதுவில் வரும் கூத்து
பெருகிப்போனது.
மனித மயமாக்கப்பட்ட தொழில், இன்று இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது
கிட்டத்தட்ட 58000 ஏக்கர் வயல் நிலங்களை தன்னகத்தே கொண்டு அன்னமளிக்கும் எமது தமிழ் மண்ணின் மட்டு நிலம் நெல்லை மட்டும் விளைவிக்கவில்லை கூடவே அங்கு ஈடுபடும் குழந்தைகள் இருந்து முதியோர் வரைக்கும் சந்தோசத்தினையும் விளைவித்து இருந்தது. ஆட்டம் பாட்டு, கொண்டாட்டம் எல்லாம் உழவில் ஆரைம்பித்து நெல்லை அறுவடை செய்து வீடுவரை கொண்டு சேர்க்குமட்டும் மகிழ்சியாகவே இருந்தது. அன்று மனித மயமாக்கப்பட்ட தொழில், இன்று இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது. அதனால் அவன் அனுபவித்துவந்த அகத்தூண்டும் இன்பம் அழிந்தே விட்டது.
21 October 2017
20 October 2017
18 October 2017
தீபாவளியில் ஒரு பொய்யான கருத்தை நாம் வைத்திருக்கிறோம்.
இந்து மதத்தில் கூறப்படுகின்ற ஒவ்வொரு பண்டிகைகளும் மக்களிடையே பண்பாடுகளை நெறிப்படுத்துகின்றன. நாம் வாழ்வாங்கு வாழ்வதனை வெளிப்படுத்துவதோடு ஓர் இனத்தின், மதத்தின், சமுகத்தின் கலாசார விழுமியங்களை அடுத்த சந்ததியினருக்கு செம்மைப்படுத்தி அதன் உட்கருத்துக்களும் பாரம்பரியங்களும் வரலாறுகளும் கடத்தப்பட வேண்டிய பொறுப்பு இப்பண்டிகைகளுக்கு உண்டு.
16 October 2017
சிருஷ்டிக்கும் பெண்!

நீ காசிகள் சேர்க்க
கருவாடுகள் விற்கும் பணம்
தேசிய வருமானத்தில்
வருகிறதா தெரியாது!
நானும் உன்ட உழைப்பில்தான்
சம்பளம் எடுக்கிறேன்!
நீ மட்டும்தான்
பெற்றதனால் மக்களையும்
விற்றதனால் மனிதர்களையும்
சிருஷ்சிக்கிறாய்...
சம்பளம் எடுக்கிறேன்!
நீ மட்டும்தான்
பெற்றதனால் மக்களையும்
விற்றதனால் மனிதர்களையும்
சிருஷ்சிக்கிறாய்...
10 October 2017
பழையன கழிதலும் புதியன புகுதலும்.
"பழையன கழிதலும் புதியன புகுதலும்' இயற்கையின் நியதி. இருப்பினும் பலருக்கு இதனை ஒத்துக்ெகாள்ளும் மனப்பக்குவம் ஏற்படுவதில்லை. நிகழ்காலம் தொடர்பாக கருகனை காட்டுவதிலும் பார்க்க கடந்த காலம் தொடர்பான சிந்தனைகளில் அவர்கள் நிறைந்திருப்பாா்கள். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையென்பதைத் தெரிந்திருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள்.
நாம் பழையன என்ற வார்த்தையால் அதிக காலமாக பழக்கத்தில் இருந்தவை என்று பொருள் கொள்வோம். அப்படி நீண்ட காலமாக பழக்கத்தில் இருந்து அவைகள், இதற்கு மேலும் உபயோகிக்கத்தக்கவை அல்ல என்று ஆனபின் அவைகளை நீக்குதலும், அதன் இடத்தில் புதிய உபகரணங்களைக் கொணர்வதும் அவசியமாகிறது.
09 October 2017
பணத்தினை தகுந்த முறையில் கையாழும் திறனுள்ளவா்களா பெண்கள்!!
பெண்கள் நிதியை மாத்திரமல்ல அவா்களது மதியால் உலகத்தை ஆழுபவா்களையும் அவா்களே ஆழுகின்றனா். அவா்கள் பல விடயங்களுக்கு எமக்கு எல்லாம் எடுத்துக் காட்டாக இருக்கின்றனா். இருப்பினும், மாற்றங்கள் தினம் நடந்துகொண்டிருப்பினும், மனம் கசக்கிற வேளைகளில் ‘பொம்பளையா மட்டும் பொறக்கவே கூடாது’ என்ற வருத்தம் மட்டும் இன்னும் மாறவில்லை. பெரிய பதவி, சுய சம்பாத்தியம் என சமூகத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் பெண்களிடமும், இந்த வார்த்தைகளை அவ்வப்போது கேட்க முடிகிறது. ‘உண்மையில், ஆண்களைவிட பெண்கள் பல விதங்களிலும் பல விஷயங்களிலும் பெஸ்ட்’ என்கிறார் வாழ்வியல் மேம்பாட்டுத் துறை நிபுணர் அசோக் தாமோதரன்.
08 October 2017
விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி; மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயின்று வெளியேறிய ஒரு தொகை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழவு 09.10.2017 இன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சி.சி.ரி.வி கமறா பொருத்துதல் சம்மந்தமான தொழில்நுட்ப பாடநெறியை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
07 October 2017
மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில்
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மூக்குக்கண்ணாடி ஸ்தாபனத்தினால் இலவச கண்சிகிச்சை முகாம் 07.10.2017 அன்று, மண்டூர் கோட்டமுனை பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் பயனாளிகள் சிலருக்கான மூக்குக் கண்ணாடிகள் கி.இ.ச.ச.அ.சபையினால் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
02 October 2017
மட்டக்களப்பில் 10,000 பனை முளைகளை விதைத்தல்: கட்டம் இரண்டு.
'வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்' என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்றி கெட்டவர்கள் ஆகிவிட மாட்டோமா? வேண்டாம், நாம் நமக்காக மட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு உலக நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த திட்டம் மூலம் பலர் விழிப்படைந்து இது போன்ற பனை மர நடுகைகளை ஏனையவா்களும் பின் தொடர முன்வரவேண்டும் என்கின்ற நோக்கம் வெற்றியடைந்து வருவது பெருமைக்குரியது.
முதியோர்கள் எமது சொத்துக்கள் சிறுவர்கள் நாளைய வித்துக்கள்
ஒரு முழுமையான தேகாரோக்கியமான மனிதசமூகத்துக்கே வாழ்க்கை ஒரு சவாலாக இருக்கும் போது; யுத்தம், இயற்கை போன்ற இன்னோரன்ன அனர்த்தங்கள் காரணமாக விசேட தேவையுடையவர்களாக ஆக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களின் நிலையினை சற்று சிந்திக்கவேண்டும்!. எமது மாவட்டத்தின் 2015ம் ஆண்டின் ஆண்டறிக்கை படி எல்லாவகையிலும் விசேட தேவையுடையவர்களென சுமார் 6879 பேர்வரை அடையாளங்காணப்பட்டுள்ளனர். பலர் பாடசாலை செல்லும் வயதில் உள்ளவர்கள், சிலர் வயோதிப நிலையை அடைந்தவர்கள். இந்த இரு வகுதியினரும் சமூகத்தில் முன்னிலைப்படுத்த வேண்டியவர்கள். இவர்களில் சிலர் வறுமையின் உச்சகட்டத்தில் இருந்தாலும் எப்படியோ தாங்களும் சமூகத்தில் வாழவேண்டும் என ஆசை கொண்டவர்கள்.
29 September 2017
எமது சிறுவர்களே எதிர்கால சமுகத்தின் முண்டுகோல்!

19 September 2017
கிராமப்புற சமுகத்தினிடையே விழிப்பேற்படுத்தும் மாணவர் எழுச்சி நிகழ்வு
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் எல்லைப்புறக் கிராமமான காக்காச்சிவட்டையில் உள்ள, பலாச்சோலை அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (17.09.2017) ஒரு தொகை இசைக்கருவிகள், போஷாக்கு உணவு, மற்றும் அப்பியாசப் புத்தகங்கள் அத்துடன் சான்றிதழ்களும் என்பன வழங்கி பாராட்டி ஊக்குவிக்கப்பட்டனர்.
கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருணைமலைப்பிள்ளையார் ஆலய பிரதம குரு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின், மனிதவள அபிவிருத்தி சபையின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன், திரு.செ.ரமேஸ்வரன் சூழலியலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், ஆலயத்தலைவர், மற்றும் நலன்விரும்பிகள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
18 September 2017
மட்டக்களப்பில் பத்தாயிரம் பனைமரம் விதைப்பு
யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கையில் மனித உயிர்கள் மாத்திரமல்லாமல் வடகிழக்கின் தாயகப் பிரதேசத்தில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னமாகக் கருதப்படும் பல மில்லியன் பனைமரங்கள் (கற்பக விருட்சம்) அழிக்கப்பட்டுள்ளன.
பனைமரம் தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக மாத்திரமல்லாமல் இயற்கையின் அழகாகவும், அனர்த்தப் பராமரிப்பு அரணாகவும் விளங்கியது என்றே சொல்லலாம். தாயகப் பகுதிகளில் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு பனை மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனால், இயற்கை அனர்த்தம் தவிர்ந்து கடந்தகால யுத்தம் காரணமாக மட்டும் வடகிழக்குப் பகுதிகளில் சுமார் 4 மில்லியன் பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன என தரவுகள் கூறுகின்றன.
11 September 2017
சமுகத்துக்கு பயன்படும் திறன்களை மாணவர்களிடையே வளர்க்கவேண்டும்.

06 September 2017
மட்டக்களப்பு கிராமப் புறங்களில் அறநெறி பாடசாலைகள் ஆரம்பித்து வைப்பு.
பல தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களிடையே, குறிப்பாக தமிழ் இந்துக்களின் அறநெறிப் பண்பாடு பல வழிகளிலும் சிதைவடைந்து வந்துள்ளது. இலங்கையில் கிழக்குப் பகுதியில் பல புராதன பெருமைமிக்க இந்து நாகரிகத்துக்கு சொந்தக்காரரான தமிழர்கள் அசைக்கமுடியாத நல்ல விழிமியங்களை அவர்களது மரபுகளில், பண்பாட்டில், ஏட்டில் புதைத்து அதற்கொழுகவே வாழ்க்கை முறையினை அமைத்து மற்றவரும் பெருமைகொள்ளும் வகையில் வாழ்ந்து வந்தனர் என்பது எனது கருத்து.
பொருளாதார விருத்திக்கான திறன்கள் மற்றும் போட்டித்தன்மையை கட்டியெழுப்புதல்.
இன்று ஒரு நண்பருடன் மிக நீண்ட சேரம் உரையாடக் கிடைத்தது. அருமை எமது பிரதேசம் எப்படிடா முன்னேறும் என்று கேட்டார். ஏன் அதற்கு என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் பாருங்க, 'வைத்தியருக்கு படித்தவரை மேசன் வேலை பார்க்க வைக்கலாமா!' புரியலவே என்றேன்.
எமது மாவட்டத்தில் வேலைத்தளங்களில் பல்கலைக்கழகங்களில் உதாரணத்திற்கு நாடகம் பாடத்தில் பட்டத்தை முடித்தவர்கள் மொழி பெயர்பாளர்களாகவும், நுகர்வோர் உற்பத்தி அதிகாரிகளாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் இருக்க, விவசாயப்பட்டதாரிகள் ஆரம்ப பாடசாலை ஆசிரியராகவும், வங்கி கணக்காளராகவும், நிருவாக உத்தியோகத்தராகவும் அமர்த்தப்பட்டுள்ள கொடுமை எங்குமே பார்க்க முடியாதுங்க. இங்கு மட்டும்தான்..
28 August 2017
மதுவில் மயங்கும் மட்டக்களப்பார்
ஒரு பிரதேசத்தின் முதுகெலும்பு அந்த பிரதேசத்தின் மனித வளங்கள்தான். அவற்றை ஆரோக்கியமாக பேணுவதனிலேயே அந்த சமுகத்தின் வளர்சி தங்கியுள்ளது. ஆனால் இந்த மனிதர்களை இயக்கத்தில் வைக்கவேண்டிய அதிகாரிகள் மயக்கத்தில் அல்லோ வைத்திருக்கின்றனர் எப்படி ஐயா மட்டக்களப்பு உருப்படும்? தவறான விடயங்களில் எல்லாம் மறவாமல் முன்னிற்கும் மட்டக்களப்பு வருடா வருடம் அதிகம் மது நுகர்வோர் மூலம் புதுவித சாதனையாக அதிக பணத்தை செலவிடும் பட்டியலில் இலங்கையில் முதன்மை வகிக்கிறது. இங்கு அட்டவணையின் தகவல்படி 63 உத்தரவாதமளிக்கப்பட்ட மதுசாலைகள் இயங்கிவருவது ஒரு ஆபத்தான விடயமே. அது இப்போது 66 ஆக உயா்ந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதில் மன்முனை வடக்கில் மாத்திரம் 33 மதுசாலைகள் இயங்கிவருகின்றன.
26 August 2017
எங்கதம்பி மட்டக்களப்பு
இன்று சிங்கள நண்பி ஒருவர், பத்திாிகையில் வௌிவந்த எனது மாலையிட்டு பொட்டுவைத்த படத்துடன் கூடய ஆக்கம் ஒன்றினைப் பார்த்துவிட்டுக் கேட்டார் 'சீலன் எங்க #யாழ்பாணத்திற்கு #போய் #ஏதும் #புரோக்கிறாம் #செய்த#நீங்களா?' என. எனக்கு அப்போது தான் மிகத்தெழிவாகத் விளங்கத்தொடங்கியது மட்டக்களப்பை, அவர்களது கலாசாரத்தினை, தமிழ்ப் பண்பாட்டை யாருக்கும் தெரியாதவாறு அறவே குழிதோண்டிப் புதைத்து அதை ஏனைய சமுகத்தினரின் மனங்களில் இருந்து யாழ்ப்பாணத்தினர் அடங்கலாக அகற்றி விட்டனர் என்பதை நினைத்து மிகவும் வேதனையடைந்தேன். அவர்களுக்கு மட்டக்களப்பார், தமிழ்ர் என்பது காட்டப்படவில்லை, அவர்களது கலாசாரம் பூர்வீகம்வாய்ந்தது என எடுத்துச் செல்லப்படவில்லை.
மீன்மகள் பாடுகின்றாள் கேளுங்கள்!
நீண்ட நாட்களின் பின் ஒரு மட்டக்களப்பு கலை சார் பதிவினை ஏற்றலாம் என நினைத்தேன். இங்கு எப்படி நம்ம மட்டக்களப்பு மீன்கள் பாடுகின்றன எனச் சற்றுக் கேட்டுப்பாருங்களேன்.
கல்லடிப் பாலத்திலிருந்து (லேடி மன்னிங் பாலம்) சப்தமற்ற இரவு நேர முழுமதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசையென நம்பப்படுகின்றது. இதனை இலக்கியங்களில் 'நீரரமகளீர் இசைக்கும் இசை' என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' எனப் பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.
11 August 2017
பட்டிருப்பு தொகுதியில் ஒருங்கிணைப்பின் தேவைப்பாடு
ஒவ்வொரு நாடும், பிரதேசங்களும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் மூலமே பல வெற்றிகளையும் சாதனைகளையும் இலக்கினையும் அடைந்துள்ளன. ஆனால் இந்த ஒருங்கிணைப்பு இல்லாத அனைத்துச் செயற்பாடுகளும் பல பின்னடைவுகளையும், தோல்விகளையுமே சாதித்துள்ளன.
இங்கு தலைமைத்துவங்களே அவர்களைச் சார்ந்துள்ளவர்ளை இணைத்துக்கொண்டு இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். மாறாக மக்களை பிழையாக வழிநடத்தக்கூடாது. அதற்காக தொடர்புகளைப் பேணுவதுடன் ஒவ்வொரு செயற்பாட்டுடனும் ஏனையோரையும் இணைத்துக்கொண்டு பெறும் ஒரு அபிவிருத்தியே நிலையானதாக இருக்கும். இன்று பிராந்தியங்கள் கூட போட்டித்தன்மையான நன்மைகளுக்கு அப்பால் ஒருங்கிணைந்த நன்மைகளையே வரவேற்க்கின்றன. ஆனால் நாம் இன்னும் போட்டித்தன்மையால் பல இழப்புகளையே சந்தித்து வருகின்றோம். அது பொருளியல், அரசியல், கல்வி எதுவாகவும் இருக்கலாம்.
05 August 2017
வாய்ப்பேச்சில் வீரனாய் இருப்பவர்களை நாங்கள் சிரித்துக்கொண்டுதான் பார்க்கிறோம்!
எல்லா பெரியவர்களும் உட்காந்து இருக்கும் மகா சபையில் வீஸ்மர், துரோணாச்சாரியார் உட்பட எல்லாம் கொதிச்சுப்போய் பெண் பாலியல் துஸ்ப்பிரயோகம் கண்முன் நடக்கும் போது அதற்கு எதிராக அந்த மகா சபையில் என்ன செய்தார்கள்? சும்மா பாா்த்துக்கொண்டு இருந்தாா்கள். வீஸ்மர் அல்லது துரோணர் போன்ற மாமேதைகளுக்கு யாரும் சொல்லிக்கொடுக்கணுமா! படித்த மேதாவிகள்தானே! இல்லப்பா இல்லை, அவர்கள் எல்லாரும் (fair weather good people) தட்பவெட்ப சூழ்நிலைகள் நன்னறாக இருக்கும் பொழுது கண்ணுக்கு முன் அபாயம் இல்லாது இருக்கும் பொழுது மாத்திரம் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள். இவ்வாறு எல்லாராலயும் நல்லவனா இருக்கமுடியும் அது ஒன்றும் பொியவிடயமல்ல தானே.
04 August 2017
வேரையறுத்தல்லோ காடை அழித்தோம்!
வேரையறுத்தல்லோ
காடை அழித்தோம்
காடையழித்தல்லோ
வீடை அமைத்தோம்
வீடையமைத்தல்லோ
பீடை வளர்த்தோம்
பீடைவளர்த்தல்லோ
கோடை ஆக்கினோம்
கோடைவந்தல்லோ
மழையை இழந்தோம்
மழையை இழந்தல்லோ
குழைகள் தொலைத்தோம்
குழைகள்வரண்டல்லோ
உணவை இழந்தோம்
உணவை இழந்தல்லோ
உண்டி வரண்டோம்
உண்டிவரண்டும்
உருவாக்கினானா காட்டை
இல்லை
உப்பூறல் கிராமத்தை பாா்த்து உடைந்துபோனோம்.

எங்கும் ஒலி எங்கே ஒளிப்பது?
எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?
மனிதன் இயந்திரமாக்கப்பட்டுள்ளான்
அதனால் பல முறை
மனிதத்தை துலைத்துவிடுகிறோம்..
எங்கே ஒளிப்பது?
மனிதன் இயந்திரமாக்கப்பட்டுள்ளான்
அதனால் பல முறை
மனிதத்தை துலைத்துவிடுகிறோம்..
எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?
உண்ணும் வேளை
உறங்கும் வேளை
களிவறைக்குள்
குளியலறைக்குள்
குழந்தையுடன் இருக்கும் வேளை
குதூகலத்தில் இருக்கும் வேளை
எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?
எங்கே ஒளிப்பது?
உண்ணும் வேளை
உறங்கும் வேளை
களிவறைக்குள்
குளியலறைக்குள்
குழந்தையுடன் இருக்கும் வேளை
குதூகலத்தில் இருக்கும் வேளை
எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?
03 August 2017
மட்டக்களப்பு மண் புகழ்ப் பாடல்!
நீரோடும் நாட்டில் மீன்பாடக் கேட்டு நெல்லாடும் பூமியிது.
மட்டக்களப்பு தமிழகத்தின் தமிழர்களை தமிழால் தமிழில் தமிழ்போற்றி அன்றய எமுத்தாளர்கள் பனையோலை, செப்புத்தகடு, ஆணி இவற்றின் துணைகொண்டு எமது மட்டக்களப்பு தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு, பூர்வீகம் கொண்ட வரலாற்றுப்பதிவுகளை காலத்துக்கு காலம் எழுதிவைத்துள்ளனர். இவற்றையெல்லாம் மகாவித்துவான் அவர்கள் தேடி பொறுக்கி மான்மியத்தை எழுதி பறைசாற்றியது அந்தக்காலம்.
24 July 2017
வக்கியெல்லை கிராமத்து மக்களுக்கு அமெரிக்க பேராசிரியர்களின் விழிப்பூட்டல்.

இந்தக் கிராமத்தினைப் பொறுத்தமட்டில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்தினை முன்னிறுத்தி இங்கு இருந்த மக்களுடன் இன்னும் சில குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தனா். அதனால் தற்போது இக்தகிராமம் தமிழ்மக்களின் பூர்வீகக் கிராமமாக இருந்து வருகின்றது. இங்குள்ள மக்கள் பலர் விவசாயத்தினை மேற்கொண்டு வருவதுடன், யுத்தகாலத்திற்கு முன்னர் கிட்டத்தட்ட 550 குடும்பங்கள் இங்கு குடியிருந்ததாகவும் அவர்களில் வெறும் 150 குடும்பங்கள்தான் இந்த இடத்தில் தற்போது இருப்பதாகவும், அதிலும் யானைகளின் அட்காசம் காரணமாக இன்னும் பலா் இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர் என்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இந்த ஊர் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
எமது திட்டமிடலாளர்களின் கிராமியப் பொருளாதார அக்கறை!
எமது மாவட்டத்தினைப் பொறுத்தளவில் கிராமிய அபிவிருத்தி சார்ந்த அணுகுமுறைகள் ஒரு தெழிவு இல்லாமல் இருப்பதனை அவதானிக்கலாம். வளர்ந்து விட்ட நாடுகளைப்போல் கைத்தொழில் அபிவிருத்திக்கு மாறாக எமது கிராமப்புறங்களின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்து காணப்படுகின்றது. அதற்கேற்ப வளமார்ந்து காணப்படுவதுடன் அவற்றில் பரம்பரை ரீதியான பரீட்சயமும் அவர்களுக்கு இருப்பது முக்கியமானது.
எமது நாட்டின் அபிவிருத்தி வரலாற்றுப்பாதையில் கிராமிய பொருளாதார முன்னேற்றத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச நிதியியலாளர்கள் பல முதலீடுகளை செய்துள்ளனர், ஆனால் மாவட்ட, கிராம மட்ட செயற்பாட்டாளர்களின் வினைத்திறனற்ற அமுலாக்கல் செயற்பாட்டினால் கொண்ட குறிக்கோளினை அடைந்துகொள்ளாத வரலாறுகள்தான் அதிகம். அவர்கள் அதிகமாக இந்த கிராமப் புற மக்களிடையே நிவாரணம், நஸ்ட்டஈடு கொடுப்பதில் பாதீட்டில் அதிகம் செலவிடப்படுவதனால் மக்கள் தங்கிவாழும் ஒரு மனநிலையில் தள்ளப்படும் ஒரு நோய்க்கு அளாக்கப்படுகின்றனர். இதன் பலனால், பல வறியவர்கள் தன்னம்பிக்கையினை அதுபோல் முன்வருவருகின்ற எண்ணத்தினை மற்றும் முயற்சியாண்மையை இழந்துள்ளனர். அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற பல ரூபாய்க்கள், உள்ளீடுகள்; என்பவை வீட்டுரிமையாளர்களின் நுகர்வு தேவையை நோக்கி திசைதிரும்புவதனையும் காணலாம்.
23 July 2017
மட்டக்களப்பில் டெங்கு இடர் அதிகரிப்பதில்; செல்வாக்குச் செலுத்தும் சமுககாரணிகள் மீதான ஆய்வு.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள நோயாளர்களின் தொகையானது கடந்த வருடம் முழுவதிலும் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் தொகையை காட்டிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
19 July 2017
மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களின் கல்வி நிலைதான் என்ன??
ஆசை கொள்ளவைக்கும் தேத்தாத்தீவு பாமுருகன் ஆலயம்.

கச்சக்கொடிஸ்வாமி மலை தமிழர்களின் பூர்வீக கிராமமா?

17 July 2017
இப்படியும் வாழும் ஒரு சமுகம் இன்னும் மட்டக்களப்பில் இருப்பதைக் கண்டு வியந்துபோனோம்.
இருட்டிக்கிடந்த மழை கால்களின் இடைவெளிகளுக்குள், காற்றின் கனத்த சத்தத்திற்க்கு மத்தியில் வேற்றுவாசிகளைப் போல் வியந்து பார்த்த அந்த மக்கள் கூட்டத்துக்குள் நானும் எனது நண்பனும் சிரித்துக்கொண்டு நுழைகிறோம்.
அவர்கள் இன்முகத்துடன் அந்த வந்தோரை வாழவைக்கும் குணம் மாறாமல் வரவேற்றனர். அந்த இடம்தான் 'கற்ப்பக்கேணி'. இந்த கிராமம் பல தடவைகள் யுத்தத்தினால் இடப்பெயர்ச்சிக்குள் சிக்கிய ஒரு தனி காட்டுப்பகுதியில் அமைந்துள்ள நலிவுற்ற பிரதேசமாகும். இது மட்டக்களப்பு நகருக்கு மேற்க்கே வவுணதீவுப் பிரதேச எல்லைக்குள் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
யாருக்கு தெரியும் இன்னும் தமிழர்கள் இருட்டுக்குள் கிடப்பது
கால்கள் நகர மறுத்தன ஓங்கிக் குலை(ர)க்கும் நாய்களின் சத்தம், ஓரங்களில் நிற்க்கும் பற்றைக்காடுகள், தேங்கிக் கிடக்கும் மழை தண்ணீர், இவற்றுக்கு இடையே மின்னிக் ஒளிரும் குப்பி விளக்குகளின் அடியில் மண்டியிட்டுக் கிடக்கும் குழந்தைகளை போகும் இடம் எல்லாம் கண்டோம்.
எமது நாடு எங்கோ சென்று கொண்டிருக்கிறது, இருந்தும் இன்னும் இருளில் மண்டிக் கிடக்கும் எம் தமிழ் குழந்தைகளின் கல்வியும், இருள் மயமாய் போய்விட்டது. அது ஒரு கசப்பான அனுபவம். சென்ற பரம்பரை அந்த கல்விச் செல்வத்துக்கு உரித்தற்றவர்களாக நடந்த கொடிய யுத்தம் அவர்களை நிர்க்கதியாக்கியுள்ளது.
உன்னை வரவேற்று வாழ்த்துகிறேன்..
ஓ போகிறாயா ஆண்டே!
மீட்டிப்பார்க்க துடிக்கும் தந்திவழியே,
நீ தொலைந்து போனாலும்
கருப்புப் பெட்டிபோல்
என் நெஞ்சம்
கொஞ்சமாய் திரும்பிப் பார்க்கிறது.
மீட்டிப்பார்க்க துடிக்கும் தந்திவழியே,
நீ தொலைந்து போனாலும்
கருப்புப் பெட்டிபோல்
என் நெஞ்சம்
கொஞ்சமாய் திரும்பிப் பார்க்கிறது.
16 July 2017
மீன் பாடும் நாட்டில் கொட்டிக்கிடக்கும் அழகு!

ஐக்கிய நாடுகள் சபையின் இப்போதய அறிக்கையின்படி, உலக சனத்தொகை 7 வீதத்தில் இருந்து இது 2050 இல் 9.1 பில்லியனாக உயரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதிசயமும் ஆபத்தான விடயமும் என்னவெனில் இதில் 90 வீதமான மக்கள் தொகை ஆசியா போன்ற வளர்முக நாடுகளிலேயே காணப்படும் எனக்கூறப் பட்டுள்ளது, அப்படியானால் இவர்களுடைய எதிர்கால வாழ்கை, வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் வளப்பகிர்வுகள் எவ்வாறு இருக்கும் என சிந்தித்துகூட பார்க்க முடியாமல் இருக்கின்றது.
15 July 2017
மீனவர் சங்கங்கள் வலுப்பெறவேண்டும்.
நமது கிராம மக்களை முன்னேற்றுவது எமது மாவட்ட ஒருமைப்பாட்டுக்குப் பக்கபலமாக நிற்கும் என்கிற புனிதக் குறிக்கோள்களை நோக்கி நமது லட்சியப் பயணம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இந்தக் குறிக்கோள்களுக்கு கூடத் தடைகள் ஏற்படலாம் என்பதை வரலாறு காட்டுகிறது.
14 July 2017
தொழில் துறை மீதான தவறான பார்வையினை களையவேண்டும்.
நாங்கள் இன்னும், எங்கள் சமுகம் மற்றும் மாணவர்கள் இடையே இருக்கின்ற தொழில் துறை மீதான தவறான பார்வையினை களையவேண்டும். அவர்களை தொழில் துறைக்குள் கவர்ந்திழுக்கும் மார்க்கத்தினை கிராம மட்டத்தில் இருந்து மாவட்ட மட்டம் வரை விாிவாக்கம் செய்ய வேண்டும்.
இன்று எமது நாட்டில் அதிக தொழிலாளர்கள் வேலைபார்க்கின்ற, அதிக வருமானத்தினை ஈட்டித்தரும் துறைகளாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு (பணிப்பெண்கள்), தேயிலை தொழில் சாலை மற்றும் ஆடைக் கைத்தொழில் துறைகள் காணப்படுகின்றன. இவற்றில் வேலைசெய்வோர் அதிகம் திறனற்ற தொழிலாளிகளாகவே இருக்கின்றனர். ஆனால் ஊழியர்கள் ஆகக்குறைவாக அதே நேரம் தொடர்பான திறனுடன் உள்ள தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ளவர்கள் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது பன்மடங்கு வருமானத்தினை ஈட்டித்தருகின்றமை குறிப்பிடதடதக்கது.
06 July 2017
ஒரு நாட்டின் திறனுள்ள இளைஞர்களே அதன் வளர்ச்சியின் முதுகொலும்பு
அறிமுகம்.
இலங்கை சமுகரீதியான நல்ல கொள்கைகளை அழுல்படுத்தும் பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்ற ஒரு மாதிரி நாடாகும். இருப்பினும் தசாப்த காலமாக இளைஞர்களிடையே வேலைவாய்பை உருவாக்குவதிலும் அவர்களது ஏனைய தேவைகளை நிறைவுசெய்வதிலும் பாரிய சவால்களை அரசு எதிர்நோக்கி வருகின்றது. எவ்வாறாயினும், இளைஞர்களே ஒரு நாட்டின் எதிர்காலத்தின் பிரதிநிகள். அவர்கள் அந்த நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பங்கினை வகிப்பது அவர்களது கடமை. ஒரு நாட்டினுடைய உற்பத்தி அந்த அரசாங்கத்தின் உதவியைவிட அந்த நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களின் பங்களிப்பில் இருந்து வருகின்ற ஒன்றாகும். ஆக ஒரு நாட்டினுடைய அபிவிருத்தி இளைஞர்களின் தோழ்களிலேயே தங்கி இருக்கிறது.
05 July 2017
ஏமாற்றப்படும் மட்டக்களப்பு வாழ் மக்கள்.
நாம் எப்படியெல்லாம் ஏமாறுகின்றோம் என்பது தெரியுமா? கட்டாயமாக வரும் ஏமாற்றம், அறியாமையினால் வரும் ஏமாற்றம், கவனக் குறைவினால் வரும் ஏமாற்றம், பேராசையினால வரும் ஏமாற்றம். இதில் முதல் மூன்று வகையிலும் தோ்தல் காலங்களில் எமது மக்கள் செமயா ஏமாந்து விடுகின்றார்கள் என்பதற்கு அப்பால் ஏமாற்றப்படுகின்றனர் என்பதுதான் உன்மை.
01 July 2017
அதிசயமாய் அமைந்த ஸ்ரீ பால முருகன்...
