ADS 468x60

09 November 2018

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.

இந்தா வந்துவிடும் இந்தா வந்துவிடும் என போய்க்கொண்டே இருந்தோம் காடுகள், மேடுகள், களணிகள் என கடந்தபோதும் வீடுகளைக் கண்ட பாடில்லை. ஆம் சிங்கபுரத்தினூடான ஒரு பாதையில் பொலன்னறுவையின் எல்லையில் பயணிக்கத் துவங்கி பின் நீண்ட நேரத்தின் பின் இடத்தினை அடைந்தோம். அதன் பெயர் குடா பொக்குண என்பதாகும். இந்த இடம் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை போன்ற மாவட்டங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கின்ற இடமாக இருந்தது. இங்கு வாழுகின்ற அனேக குடும்பங்கள் விவசாயத்தினையே நம்பி வாழுகின்றதனை அவதானித்தோம். இங்குள்ள மக்கள் கல்வியில் முன்னேறி தம்மை பீடித்துள்ள துன்பங்களில் இருந்து விடுபட அவர்களுக்கான வசதி வாய்ப்புக்கள் ஏனைய இடங்களுடன் ஒப்பிடும் பொழுது மிக மிக குறைவாகக் காணப்பட்டதகாலேயே, அங்கு 'நுண்ணறிவை வழங்கும் நூலகத்திட்டம்' இங்கு அமுலாக்கப்பட்டது.


இங்கு திருகொணாமடு முஸ்லிம் கணிஸ்ட்ட வித்தியாலயம் அமைந்துள்ளது. இங்கு மிகவும் கஸ்ட்டத்தின் மத்தியில் கல்வி பயின்று வருகின்ற மாணவச் செல்வங்களின் வேண்டுகோளைச் செவிமடுத்த இலங்கை மற்றும் அவஸ்த்திரேலிய விருதுபெற்ற மாணவர் சங்கத்தினால் (ஸ்லா) ஒரு தொகை புத்தகங்களையும் மற்றும் வாசிகசாலைக்கான தளபாடங்களையும் கொடுத்து உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் இந்த அமைப்பின் தலைவர், செயலாளர் உட்பட அதன் உயர்மட்ட உறுப்பினர்களும் கலந்து 04.11.2018 அன்று இந்த புதிய வாசிகசாலையை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் உத்தியோக பூர்வமாகக் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வழி கற்றல் என்ற நிலையில் வீட்டுக்கொரு நூலகம் என்பதையோ, புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு வாசிக்கவேண்டும் என்பதையோ, இன்றைய தலைமுறையினரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. இதனால் மிகவும் பின்தங்கிய இடங்களில் இவற்றையெல்லாம அடையமுடியாத ஒன்றாக எண்ணி ஏங்கும் மாணவச் செல்வங்களின் கல்வியினை முன்னேற்றவும் அவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும் இந்த திட்டம் இவர்களால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

'மாணவர்களிடையே நூல் வாசிக்கும் பழக்கம் அதிகரித்தால் நாட்டுக்கு கெடுதல் செய்து சிறைக்குச் செல்லுவோரின் தொகை கணிஷமாகக் குறைவடையும் என சுவாமி விவேகானந்தர் சொல்லிற்கு அமைவாக எமது குழந்தைகளிடையே நல்ல மனப்பாங்கினை வளர்த்தெடுக்க நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினை அவர்களிடையே ஏற்படுத்த வேண்டும். ஒரு  கோடி ஷரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்திஇ புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – என்றார் மாவீரன் லெனின். எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். என்றார் போராளி – சேகுவாரா. எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது...எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்,  இவை எதை எமக்கு எடுத்துச் சொல்லுகின்றதெனில் உலகில் பல தலைவர்கள்இ அறிஞ்ஞர்கள் எல்லாம் வாசிப்பினால்தான் உயரத்தினை அடைந்தார்கள் என எனது உரையின் போது மாணவர்களிடையே கூறினேன் 

இதன் தலைவர் அணுஸா குறிப்பிடுகையில் இவைபோன்ற திட்டங்களை பாகுபாடு இல்லாமல் எல்ல மக்கள் மத்தியிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். உண்மையில் எமது திட்டம் சரியான தேவையான இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதனை இட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என தனைது உரையில் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இங்குள்ளவர்கள் அனைவரும் கல்விகற்றதனாலேயே நல்ல நிலையில் இருக்கின்றனர், இல்லாவிடின் நாங்கள் உங்கள் முன் தோன்ற முடியாது, ஆகவே நீங்களும் எம்மைப்போன்று நல்ல நல்ல உத்தியோகத்தில் பதவியில் வருவதற்கு கல்வி ஒன்றே துணையாகும் எனவும் கூறினார்.

இந்த அமைப்பின் உறுப்பினரில் ஒருவரான றிபா அவர்கள் உரையாற்றுகையில் ' இந்தப் திட்டத்தின் மூலம் கல்வியில் பின்னிற்கும் இந்த மக்களிகளுக்கு கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பு இதனை நாம் பயன்படுத்தி நற்பிரஜைகளாவதுடன், எதிர்காலத்தில் நாட்டுக்கும் இந்த சமுகத்துக்கும் பயன்மிக்கவர்களாக மாறவேண்டும் எனக் கூறினார்.

இவ்வாறான திட்டங்களை இங்கு மாத்திரமல்ல தேவைப்படுகின்ற அனைத்து இடங்களிலும் செயற்படுத்த பொறுப்புள்ள எமது சமுக அங்கத்தவர்கள் முன்வர வேண்டும், எனவும் இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் நல்ல பிரஜைகளை கட்டியெழுப்பி எம்மைப் பீடித்துள்ள ஏழ்மை, வருமானமின்மை, தொழிலின்மை, குற்றச் செயல்கள் ஆகியவற்றை அடியோடு இல்லாதொழிக்கும் நிலை உருவாகவேண்டும் என இந்த அமைப்பின் செயலாளர் கலாநிதி பிரதீபா அவர்கள் கூறினார். 






0 comments:

Post a Comment