ADS 468x60

25 November 2018

இலங்கை அரசியலில் உருவெடுக்கும் மூன்றாவது சக்தி!

Related imageஇன்று தொடர்ந்து நடந்தேறிவரும் அபகீர்த்தியான மக்கள் மன்றச் செயற்பாட்டில் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கியுள்ளமையை நாட்டில் ஆரம்பித்திருக்கும் எதிர்பு அலை சுட்டிக்காட்டுகின்றது.

நாட்டின் யு.என்.பி மற்றும் எஸ்.எல்.எப்.பி ஆகிய இரு பெரும்பாண்மை கட்சிகளுக்கும் இருந்து வந்த மதரீதிhன மற்றும் இனரீதியான ஆதிக்க வாக்கு வங்கியில் அவர்களது நேர்மையின்மை, உண்மைத்தன்மை இழப்பு காரணமாக மக்களிடத்திருந்து எதிர்மறையான அபிப்பிராயத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலமை இப்பொழுது ஜனத்தா விமுத்தி பெரமுனைக்கு பெரும்பாண்மை மக்களிடையே தோன்றியுள்ள இடைவெளியை நிரப்பவதற்கு சாதகமாக அமைந்துள்ளது என்பது வெள்ளிடைமலை.

ஆக சிறுபாண்மையாக உள்ள கட்சிகளுக்கு இன்று மக்களிடையே இன்றைய குழப்ப நிலையை மேவுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. ஆனால் இவைகள் ஒவ்வொன்றும் வேறு வேறு கோணத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. இருந்தும் இவ்வாறு சிறிய கட்சிகளாக உள்ளவர்களை ஒன்றிணைத்து அழுத்தத்தினை அரசிக்கு பிரயோகிக்க பொதுவான உடன்பாடுகளோ கொள்கைகளோ இவர்களுக்கிடையே கிடையாது. ஆனால் அவ்வாறு ஒன்றிணைய வேண்டிய தேவைப்பாடு இன்று ஜனநாயக நம்பிக்கை கொண்டோரால் மறைமுகமாகக் கோரப்படுவது புலனாகின்றது.

இது போல் மறுபுறத்தில், பொருளாதாரத்திலும் இன்றய நெருக்கடியை தீர்பதற்கு ஒருங்கிணைந்த உற்பத்தி நடவடிக்கை தேவையான ஒன்றாக கருதப்படுகின்றது. குறிப்பாக வடகிழக்கில் உள்ள விவசாய மற்றும் சிறு வியாபார தொழிலாளர்களையும் தெற்கில் அதிகம் உள்ள விவசாய மற்றும் முயற்சியாண்மையாளர்களையும் நாம் ஆரம்பத்தில் கடைப்பிடித்து வந்த கூட்டுறவு முறையினை பயன்படுத்தி ஒருங்கிணைப்பதன் மூலமான பொருளாதாரத்தினை சிந்திக்க வேண்டும்.

அது தவிர மொழி ரீதியாக தமிழ் பேசுகின்ற தமிழரும் முஸ்லிம்களும் மொழியால் ஒன்றிணைய வேண்டிய தேவை இன்று வலுப்பெற்றிருக்கின்றது. வெளிநாடுகளின் செல்வாக்குகள் காரணமாக இந்து இஸ்லாம் மதச் சாயல் செருகப்பட்டுக்கொண்டிருக்கும் நிலை பிரிவினையினை தோற்றுவிக்கும் ஒன்றாக இருந்து வருகின்றது. இவற்றில் இருந்து வெளியேற நிச்சயம் இரு சமுகமும் அவற்றுக்காக கடினமாக உழகை;க வேண்டும், விஷேசமாக முஸ்லிம் சமுகத்தினர். இவ்வாறு ஒரு பொது வெளியில் இரு சமுகமும் ஒன்றாக இணையும்பொழுது அரசியல் ரீதியான புரட்சிகள், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆய்வாளர்கள் கருத்து வெளியிடுகின்றனர். அதுவே மூன்றாவத பலம் கொண்ட அமைப்பை தீர்மானிக்கும் முதன்மை சக்தியாக அமையும்.

ஜே.வி.பியினை நோக்கினால், அது 1970 களில் இருந்த ஒரு அரசியல் கட்சியல்ல இன்று இருப்பது. ஒரு இறமையான நாட்டில் ஜனநாயகத்தினை மதிக்கும் பண்புடைய ஒரு கட்சியாகவும், படித்த இளைஞர்களிடையே செல்வாக்கினை இன மத பிரதேச வேறுபாடு கடந்து அனைவரினதும் ஆதரவினை கட்டியெழுப்பி வரும் ஒரு கட்சியாக வலுப்பெற்றுள்ளது. ஆனால் இவர்களது வாக்கு வங்கி சிங்கள மக்களின் மத்தியில் தான் அதிகம் உள்ள நிலையில் இவர்கள் அதை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள கடினமாக உழகை;க வேண்டிவரும். அதற்கு அவர்களது தேர்தல் விஞ்ஞாபகத்தில் இந்த இரு இனங்களுக்குமான தீர்வுகள், அவர்களது சாதகமான திட்டங்கள் தேர்தல் காலங்களில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வெற்றிகொள்ள முடியும்.

இது இவ்வாறு இருக்க, இன்றய குழப்ப சூழலில் தமிழ் கூட்டமைப்புக்குள் இருந்த முன்னாள் வடமாகாண முதல்வர் சி.விக்கினேஸ்வரன் அவர்கள் புதிய கட்சியினை ஆரம்பித்து பிரிந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்று கொடுப்பேன் என சவால் விடுத்திரு;பது இந்த மூன்றாம் சக்திகளை தீர்மானிப்பதில் குண்டைத் தூக்கி போட்டுள்ளது. அவர் ஒரு ஜதார்த்த நிலையினை உணர்ந்துகொள்ள வேண்டும். அதாவது இவ்வாறான ஒரு சாதனையினை செய்ய வேண்டுமெனில் அவர், இரண்டு பெரிய கட்சிகளின் ஆசிர்வாதத்துடன் சிங்கள மக்களின் மத்தியில் முரண்பாடில்லாத கருத்துக்களை தெழிவுபடுத்தும் உபாயத்துடன், முஸ்லிம் மக்களின் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள வேண்டும், அப்போததான் அவரினால் இவற்றை சாதிக்கமுடியும். வெறுமனே வெளிநாட்டு ஆதரவினை நம்பி எதையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது. குறிப்பாக இந்தியாவினை கூட முழுதாக நம்ப முடியாது ஏனெனில் அது பல நெருக்கடி நிலைமைகளில் களுத்தறுத்த அனுபவங்கள் எமக்குண்டு.

இதே நிலைதான் எமது நாட்டில் இன்று இருக்கின்ற இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகளுக்கும் இருக்கின்றது. உண்மையில் தேசிய நோக்கங்களை விடுத்து தேசிய பிரச்சினை சார்ந்து கட்சி நோக்கங்களை நிறைவேற்றும் வகையில்  செயற்பட்டுக்கொண்டு வருவதான விமர்சனங்கள் இவ்விரு கட்சிகள் மீதும் சொல்லப்படுகின்றது. அதிக பட்சம் தாங்கள் சார்ந்த தனிப்பட்ட நலனை ஈட்டிக்கொள்ளும் வகையில்  இவர்களது நிகழ்ச்சி நிரல்கள் அமைந்துள்ளது என விமர்சிக்கப்பட்டு வருகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனரீதியான வன்முறைகளின் போது அவற்றை பாதுகாக்க அந்த அரசு தவறிளைத்து விட்டது. 

இருந்தும் அந்த அரசாங்கத்தில் அவர்கள் வெளியேறாமல் ஒட்டிக்கொண்டு இருந்த இருக்கின்ற ஒரு நிலமை அவர்களது கடசி சார்ந்த நலனக்கான முடிவாகவே மக்கள்; அதை விமர்சனம் செய்து வந்தமை ஞாபகப்படுத்த வேண்டியதே. 

இன்று சிங்கள மக்களின் குறிப்பிட்ட தொகையினர் சிறுபான்மை மக்களுக்காக சாதி, மதம், மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகள் களைந்த நிலையில் குரல் உயர்த்தும் நிலை தேவையாக உள்ளது. இங்கு உள்ள பிரதான கட்சிகளின் பேச்சாளர்கள் சிங்கள தமிழ் மக்களிடையே இருவேறுபட்ட கருத்துக்களை சந்தர்ப்ப சூழலுக்கு அமைவாக கொண்டு செல்லும் கலைத்திறன் கொண்டவர்களாக உள்ளமை அவதானிக்கக் கூடியதே. எதை சிங்கள மக்களிடைம் கூறுகின்றார்களோ அதை அப்படியே ஒருபோதும் தமிழ் மக்களிடம் கூறுவதை நாம் கண்டதில்லை. இதற்குத்தான் சிறுபாண்மை மக்களிடம் சொல்லப்படும் அதே கருத்தை பெரும்பாண்மை மக்களிடம் கொண்டுசெல்லும் நடுநிலையான குரல்கள் அவர்களிடமே இருந்து கிழம்பவேண்டும்.

இவ்வாறான ஒரு செயற்பாடு பெரும்பாண்மை இடதுசாரிகளால் 1950 மற்றும் 1960களில் முன்னெடுக்கப்பட்டபொழுது அதற்கு அன்றய தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களால் உதவிசெய்யப்படவில்லை. இவர்கள் இலங்கையில் இரு கட்சிகளின் மூலமாக தீர்த்துக்கொள்ள நினைத்த பிரச்சினை கடைசியில் ஒரு பாரிய மனித அவலத்தில் வந்து முடிந்துவிட்டது தெரிந்த கதை. இன்று அவற்றை மீள்சிந்தனை செய்யும் நேரம் கனிந்துள்ளது.

இன்று இலங்கையில் யு.என்.பி மற்றும் எஸ்.எல்.எப்.பி ஆகிய கட்சிகளின் வாக்குகள் இனரீதியான மதரீதியான ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிவிட்டது, அதற்கு அவர்களது நேர்மையீனம், நம்பகமின்மை ஆகியவை காரணமாகச் சொல்லப்படுகின்றன. அதுபோக அவர்கள் இந்த நாட்டின் எல்லா மக்களையும் சமமாக கவனிக்க தவறிவிட்டனர். இது ஜே.வி.பியினருக்கு அந்த பெருந்தொகையினை நிரம்பல் செய்ய நல்ல சகுனமாகவே நோக்கப்படுகின்றது.

நேற்றய இடதுசாரிகள் இன்றய ஜே.வி.பியினர் கிராமிய பௌத்த மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்கள். வெறுமனே நகர்புறச் சூழலில் இருந்து வரும் ஒருவரைவிட இதே கிராமத்து சூழலில் இருந்து வரும் ஒருவரிடம் எல்லா மக்களுக்குமான ஒரு குரலாக இவர்களது வேலைகள் அமையுமெனின் நிச்சயமாக அது எல்லா மக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. இது இவ்வாறு மக்களிடையே சென்று வெற்றிநடை போடுவார்கள் எனில் நிச்சயம் இவர்கள் இன்றய இரு பிரதான கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவர் என்பதனில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை

0 comments:

Post a Comment