ADS 468x60

22 November 2018

ஏறுமுகமான வாழ்க்கைச் சுமை, இறங்கு முகமான இலங்கையின் பணப் பெறுமதி

Sri Lankan Rupee depreciates further
இன்று இலங்கையின் மிகப்பிரதான பிரச்சினைகளாக ரூபாவின் விலைக்குறைவு மற்றும் எண்ணை விலையின் அதிகரிப்பு என்பன விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. அதில் இந்த ரூபாவின் மதிப்பு குறைந்திருப்பது பாரிய குழப்படியினை மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது இவை பற்றி நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.. எமது நாட்டின் வரலாற்றில் 1948ம் ஆண்டில் ரூபாயினுடைய நாணய மாற்று விகிதமானது 4.76 ஆகக் காணப்பட்டது. ஆயினும் அந்த நாணய மாற்று விகிதத்தை நீண்ட நாட்களிற்கு காப்பாற்ற முடியவில்லை. 1977ம் ஆண்டிற்கு முன்னர் ரூபாய் மதிப்பினை அவ்வப்போது மாற்றுவதன் மூலம் வெளிநாட்டு நாணய ஒதுக்குகளின் வெளிப்பாய்ச்சலை கட்டுப்படுத்தி அதனூடாக இறக்குமதி மற்றும் பரிமாற்றத்தை கட்டுப்படுத்தினர். 


உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணி உரிமச்சான்றிதழ் முறைமை எனப்படும் முறை மூலம் அந்த விகிதத்தில் 65மூ ஆகிய பாரிய அளவை மதிப்பீடு செய்யப்பட்டது. பரிமாற்று விகிதம் படிப்படியாக சரி செய்யப்பட்ட நிலையில் 1976ம் ஆண்டின் இறுதியில் ரூபாயின் மதிப்பு ஏறத்தாழ 86மூ குறைந்து 8.83 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் உத்தியோகபூர்வ அந்நியச்செலாவணி உரிமச்சான்றிதழ் முறைமை மூலம் 65மூ இல் செயற்படுத்தியதன் ஊடாக அத்தியாவசிய இறக்குமதிகளிற்கான பரிமாற்று விகிதம் டொலருக்கு 14.57 ஆக உயர்த்தப்பட்டது.

1977ம் ஆண்டிற்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரூபாயினுடைய வெளி மதிப்பானது சந்தையில் குறைவடைந்ததுடன் அதன் பின்னரான காலப்பகுதியில் நாட்டினால் மக்கள, மற்றும் அரசினது வெளிநாட்டு நாணயத்திற்கான தேவையை பூர்த்தி செய்யுமளவு வெளிநாட்டு நாணயத்தை சம்பாதிக்க முடியவில்லை. ஆயினும் அக்கால அரசு இவ்விடைவெளியை வெளிநாட்டு கடன்கள் மூலம் பூர்த்தி செய்ய முயன்றமையானது நாட்டிற்கு பின்னடைவயே ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இத்தகய கடன்களிற்கு முதிர்வுக்காலம் வரையிலும் அதிக வட்டி செலுத்த வேண்டியதுடன், இக்கடன்களை கொடுத்துத்தீர்க்க மேலும் அதிக கடன்களை பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலும் நாடு உள்ளது. 

கடந்த காலத்தில் காணப்பட்ட அந்நியசெலாவணி நெருக்கடிகள். 

இத்தகைய இக்கட்டான சூள்நிலைகள் நாட்டிற்கு புதிய விடயம் இல்லை. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதிகளிலிருந்து இதே சூழ்நிலையிலேயே நாடு பயணிப்பதுடன் இதற்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களை பெற்றுக்கொண்டிருக்கின்றது. 1988 மற்றும் 89ம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பி இனால் இடம்பெற்ற கிளர்ச்சிகள் காரணமாக, நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்குகள் குறிப்பாக மத்தியவங்கியிடம் காணப்பட்ட ஒதுக்குகள் 291 மில்லியன் டொலர்களாக குறைவடைந்தது. விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதிகள் மூலம் இலங்கை இப்பிரச்சினையிலிருந்து விடுவிக்கப்பட்டது. ஆயினும் ரூபாயானது 1990 இலிருந்து 1992ம் ஆண்டு காலப்பகுதிக்குள் 15மூ அளவு தேய்வடைந்து டொலரிற்கு 46 ஆக வீழ்ச்சியடைந்தது. 

அதன்பின் 2000ம் ஆண்டில் மீண்டும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கானது 1049 டொலராக குறைவடைந்தது. மேலும் 2008ம் ஆண்டில் நாட்டில் போர் முடிவடையும் தறுவாயில் வெளிநாட்டு ஒதுக்குகள் அதிகம் சரிவடைந்து 2560 டொலராக இருந்த போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இந்நிலை சீர்படுத்தப்பட்டது. மீண்டும் 2015ம் ஆண்டில் நாடு உத்தியோகபூ10ர்வ வெளிநாட்டு ஒதுக்குகளில் சரிவை சந்தித்தது. மேலும் நாட்டின் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் தொகையும் அதிகரித்துக் காணப்பட்டது. இது நாட்டின் இறக்குமதிகளின் மீது மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது என்பது வருத்தத்திற்குரியது. மேலும் இப்பிரச்சினையை தீர்க்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறப்பட்டாலும் அந்தக்காலத்தில் நாணயமாற்று விகிதமானது 149.80 ஆக உச்சத்திலிருந்தது. 

நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள்.  

முன்னய அரசு உறுதியளித்த மிக முக்கியமான சீர்திருத்தமாக 2020ம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காணப்படும் அனைத்து நிதிப் பற்றாக்குறையும் 3.5மூ ஆல் குறைப்பதுவே தங்கள் முதற்கடமை என்றும், மேலும் வரிக்கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கன் மூலம் வரி வருமானத்தை அதிகரிப்பதாகவும் கூறினர். 

மேலும் நாட்டின் தற்போதைய நிதி பிரச்சினைகளிற்கு காரணம் கடந்த காலங்களில் பொரளாதார மேம்பாட்டை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட அனாவசியமான செலவீனங்களே ஆகும் என கூறியிருந்தமை நினைவுபடுத்தவேண்டியதே.

அரசாங்கத்தின் புதிய வருமானத்தை பொறுத்த வரையில் ஆண்டிற்கு ஆண்டு குறிப்பிடத்தக்க அளவு வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையில் இயங்குவதன் மூலம் நாட்டில் தொடர்ந்து இறக்குமதிகளை அதிகரிப்பது கண்கூடான உண்மை. இது நாட்டிற்கு பாதகமான செயல் என்பதுவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 1954 மற்றும் 1955 ஆகிய இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் வரலாற்றிலேயே வருமானமிக்க ஒரு வரவு செலவு திட்டம் காணப்பட்டது. ஏனைய ஆண்டுகளில் அரசின் வரவுசெலவு திட்டமானது மத்திய வங்கியின் பணம் அச்சிடும் முறை மூலமும் கடன்கள் மூலமும் நிர்வகிக்கப்பட்டது. ஆயினும் இத்திட்டமானது நாட்டின் பொதுக்கடன்களை அதிகரிப்பதுடன் அந்த நாட்டின் பணவீக்கத்தையும் அதிகரிகிகும் செயற்பாடாகும். 

எவ்வாறாயினும் இலங்கையின் இறக்குமதிக் கட்டமைப்பானது பெரிதும், நுகர்வு பொருட்கள் பால் அல்லாது இடைநிலை மற்றும் மூலதனப்பொருட்கள் மீதே அதிக கவனம் செலுத்துகிறது. மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 55 விகிதமான இடைநிலை பொருள் உள்ளீடுகளிற்காக தேவைப்படும். அதே போல மூலதனப் பொருட்கள் 23 விகிதம் தேவைப்படும். எனவே இவற்றின் நுகர்வை குறைப்பது நாட்டின் உற்பத்தியை பெருமளவு குறைவடையசிசெய்யும், இது நாட்டிற்கு உகந்ததல்ல. 

வாகனங்களை பொறுத்த வரையில் மத்திய வங்கியானது முன்னர் வணிக நடவடிக்கை தவிர்த்து அனைத்து வாகனங்கள் மீதும் 100மூ அளவு வரிகளை விதித்திருந்தது. ஏவ்வாறாயினும் இன்று நாட்டிற்குள் வரும் பெருமளவு வாகனங்கள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படட வரிவிலக்கு உரிமங்கள் மூலமாகவே இறக்குமதி செய்யப்படுகிறது. இத்தகைய முறைகேடான செயற்பாடுகளால் நாட்டின் வரி வருமானங்கள் பாதிக்கப்படுவதால் கடந்த சென்ற அரசாங்கத்தில் பாராளுமன்றில் இது தொடர்பாக கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது. ஆயினும் அமைச்சர்கள் மற்றும் பாராழுமன்ற உறுப்பினர்களை பொறுத்த வரையில் அவர்கள் இச்சலுகைகளை ஏற்கனவே பயன்னடுத்தி முடித்து விடட நிலையில் அரசின் இம்முடிவு வெள்ளம் வந்த பின் அணை கடடுவது போன்றதாகும்.

அரசின் இவ்வாறான தாமதங்கள், நாடடில் காணப்படும் ஸ்த்திரமற்ற அரசியல் நிலமை நாட்டை பின்னோக்கி நகர்த்தக்கூடிய செயலாக விமர்சிக்கப்படுகின்றது. ஆதனால் இன்று ரூபாயின் மதிப்பு அதள பாதழத்தில் வீழ்ந்திருப்பது அதன் வரலாற்றில் நிலைத்திருக்கும் ஒரு கரம்புள்ளியாகவே பார்க்கப்படுகின்றது. ரூபாய் மதிப்பை பொறுத்த வரையில் மத்திய வங்கி தனித்து எதுவும் செய்ய முடியாது. வங்கியின் முடிவுகளை வலுப்படுத்த அரசாங்கம் உறுதுணையாக இருப்பதன் மூலமே பொருளாதார ரீதியான வெற்றியினை சுலபமாக அடைய முடியும். 

தணிகசீலன்

0 comments:

Post a Comment