ADS 468x60

14 November 2018

இன்று இலங்கையில் நடக்கப் போவது என்ன?

இன்று மகிந்த அணிக்கு இருக்கும் பலம் மக்கள் செல்வாக்கு, ரணில் அணிக்கு இருக்கும் பலம் பாராளுமன்ற செல்வாக்கு.

மகிந்த பாராளுமன்றம் சென்றால் வெல்ல முடியாத நிலையும் ரணில் மக்களிடம் சென்றால் தோற்றுப் போகும் நிலையும் காணப்படுகின்றது.

எல்லாவற்றுக்கும மேலாக ரணில் அவர்கள் நாடாளுமன்றம் சென்றால் அலறிமாளிகை பறிபோகும் நிலையுள்ளதாகவும் ஒரு கதை அரசல் புரசலாக பேசுகின்றனர்.

இன்று பாராளுமன்றம் கூடுகின்றது, இங்கு பெரும்பாண்மையை ரணில் நிரூபித்தால் அவரே பிரதமராகலாம். ஆனால் அவர் மறுபடியும் பிரதமரானால் தான் ஒரு மணிநேரத்துள் பதிவி துறப்பேன் என்று சொல்லி இருக்கிறார் தற்போதைய ஜனாதிபதி. இதில் எது நடக்கும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்?

இன்று பாராளுமன்றத்தில் பெரும்பாண்மையை நிரூபித்து பிரதமராக ரணிலே வருவாரானால், ஜனாதிபதியினையே மாற்றும் வகையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியும். இவை உயர் நீதி மன்றில் சமர்ப்பித்து அவற்றினூடு நீதி மன்றம் கேட்டுக்கொள்ளுமானால், திரும்பவும் அவை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிரூபித்தால் ஜனாதிபதி தூக்கி வீசப்படலாம்.

அவ்வாறு அவர் தூக்கி வீசப்பட்டதும், தற்போது யார் பிரதமராக இருக்கின்றாரோ அவரே ஜனாதிபதியாக வருவார், அப்படி நடந்தால் ரணில் ஜனாதிபதியாகவும் மற்றொருவர் பிரதமராகவும் வரும் வாய்ப்பு உள்ளது.

அதே நேரம் இவ்வாறு அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்தால் அந்த காலத்தில் அவர் நாடாளுமன்றத்தினை கலைக்கும் அதிகாரமற்றவராகவே இருப்பார் எனச் சொல்லப்படுவதனால், இந்த நொடியிலும் பாராளுமன்றை கலைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சரி வேறு எந்த வகையில் பாராளுமன்றத்தினைக் கலைக்கலாம்? கலைக்கலாமாம், அதாவது நாட்டில் அமைதியின்மை, கலவரம் ஏற்படும் போது அவற்றினைக் காரணங்காட்டியும் நாடாளுமன்றைக் கலைக்க முடியும் எனக்கூறுகின்றனர்.
ஆனால் இவர்கள் ஒருவரும் இல்லாமல் நல்லாத்தான் ஓடுகின்றது என மக்கள் பேசிக்கொள்ளுகின்றனர்.

இருந்தும் இந்த சூழலில் பல இழப்புக்களையும் நாடு சந்தித்து வருகின்றது என அறியக்கிடக்கின்றது. நாட்டில் பல சுற்றுலாப் பயணிகளின் வருகையினை குறைத்துள்ளமை எமது நாட்டுக்கு பல வருமான இழப்பினை ஏற்படுத்தியுள்ளது என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இன்னொரு சாரார் இந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் பாராளுமன்றை அலங்கரிப்பவர்கள் எல்லாம் மக்கள் சேவையாலும், கல்வியாலும் தமது மனதை அலங்கரிக்காதவர்கள். இவர்கள் அவரவர் பதவிக்காக மாத்திரம் சண்டைபோட மட்டும் லாயக்கானவர்கள். மக்களின் குறைகளை நினைத்து அவற்றுக்கெதிராக நீதிமன்றம் சென்றார்களா? உரிமைகளை கேட்க இத்தனை கரிசனை காட்டினார்களா? பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக தமது நேரத்தை இந்தளவு உபயோகித்தார்களா? என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

0 comments:

Post a Comment