ADS 468x60

05 November 2018

நாம் தட்டிக்கேட்கும் ஆழுமைப்பண்பு இல்லாத சமுகத்தை படைத்துள்ளோம்!

நாம் சிறுவயது முதலே மாணவர்களிடையே எமது சூழலை பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்களை விதைக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு அவற்றை பிரயோகப்படுத்த கற்றுக்கொடுக்கவும் வேண்டும். எமது பாரதூரமான சூழல் பிரச்சினை நமக்கு சேய்மையில் இல்லை, அவை மிக மிக அண்மையிலேயே உள்ளது. நாம் இன்று விதைப்பவைதான் நாளை முளைத்து பயன்தரும். அதனை அடிப்படையாகக்கொண்டு மரம் நடும் நல்லெண்ணத் திட்டத்தினை பாடசாலை, கிராம மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து மண்டூர் 40ம் கொலணி கிராம பாடசாலை வளாகத்துள் நடைமுறைப்படுத்தி வைத்த வேளை!


பலர் மாணவர்களிடையே, தொலைநோக்கான பாடவிதானத்துக்கு அப்பால மாணவர்களின் தொண்டாண்மை, இயற்கையை நேசித்தல், அடுத்தவர்க்கு உதவுதல் போன்ற திறன்களை வளர்க்க தவறிவிடுகின்றனர். அதனால்தான் எம்மத்தியில் சிறியவர் தொடக்கம் வளர்ந்தவர் வரை தொண்டாண்மை அற்றவராக தனக்கு முன் கெட்டது நடக்கின்ற பொழுதிலும் பாராமுகமாகச் செல்லும் பிழையான சந்ததியினை பிரசவித்து உள்ளோம். இவை எதிர்கால சந்ததிக்கு கடத்தப்படதமல் அவை மாணவர்களிடையே நன்கு உணர்த்தப்பட்டு புதிய எமது சூழலை எமது குடும்பம்போல நேசிக்கும் நல்ல மனநிலையை கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் மாத்திரமல்லாமல் சமுகத்தில் உள்ள நலன் விரும்பிகளும். ஆர்வலர்களும் முன்வரவேண்டும். இதற்கான ஒரு விழிப்புணர்வு செயற்பாடாகத்தான் ஸ்லா அமைப்பினருடன் இணைந்து இந்த செயற்பாடு ஒழுங்கு செய்யப்பட்டது.

நெஞ்சைப் பிளக்கும் ஓர் உண்மை நிகழ்வு. வட இந்தியாவில் ஜோத்பூர் மாவட்டத்தில் கேஜர்லி என்ற இடத்தில் கி.பி. 1730 ஆம் ஆண்டில் 363 பெண்கள் அம்ரிதாதேவி என்ற பெண்ணின் தலைமையில், பச்சைக் குத்தி இருந்த கேஜ்ரி மரங்களைக் காப்பாற்ற ஒன்று கூடினர்.
அந்த நாட்டு அரசனின் உத்தரவின்படி, கேஜ்ரி மரங்களை வெட்ட வந்தவர்களை 363 பெண்களும் தடுத்தனர். அவர்களை எல்லாம் மீறி வெட்ட முற்படும்போது, மரங்களைக் கட்டிப்பிடித்து 363 பெண்களும் தங்களின் உயிரை விட்டனர். மனிதக் கோடாலிகள் இரக்கம் இல்லாமல் 363 உயிர்களையும் பறித்து மரங்களை வெட்டினர். அந்த நிகழ்வுதான் சிப்கோ இயக்கம் உருவாக அடித்தளம் ஆனது. பூமித் தாய்க்கு பச்சை ஆடை பூண தவறி விட்டோம்.






0 comments:

Post a Comment