ADS 468x60

27 November 2020

உறங்கியும் உறங்காத அற்புத வரலாறு!

 உறங்கியும் உறங்காத அற்புத வரலாறு 

உலகத்தில் நினைக்காட்டா தமிழனா நீ கூறு


வாய்ப்பேச்சில் வீரர்களாய் வாய்தவர்கள் கண்டேன்

வாய்பேசா மிருகங்களை வதைத்தவர்கள் கண்டேன்

அரசியலில் அராஜகங்கள் புரிந்தவர்கள் கண்டேன்

ஆள்வைத்து அடித்தவீர ஆம்பளைகள் கண்டேன்

கட்டிய மனைவியுடன் கர்ஜிக்கும் கோழை கண்டேன்

வெட்டியாய் சத்தம்போடும் வீரர்களைக் கண்டேன்

முதுகில் ஒளிந்து குத்தும் முடியாதவர்கள் கண்டேன்

முன்னுக்குமுன் மோதாத பொன்னையர்கள் கண்டேன்!


ஆனால்! கண்டீர்களா?

கல்லும் முள்ளும் கடலும் காடும்

மழையும் மலையும் மடுவும் மணலும்

உயிரும் உடலும் உறவும் உணவும்

துச்சமாய்!


தலைவன் சொல்லும் தலையில் செல்லும்

மண்ணைக் காக்கும் மறவ நெஞ்சும்

பகைவர் கொல்லும் வெற்றிச் சொல்லும்

மிச்சமாய்!


கொடுமை கண்டு கொடுமை கண்டு

அடிமை விலங்கை அறவே உடைத்து- நம்

உயிரைக் காக்க உயிரை ஈந்த 

முத்துக்களாய்!


நேருக்கு நேர் நின்று நெஞ்சணையைக் கொண்டு

போருக்குள் போராடி மடிந்து முடிந்தாலும்

தமிழ் மனங்களில் மாவீர மறவர்கள் 

வித்துக்களாய்!


விருட்சமாகிப் பயன்தருவர் என நினைவேந்துகின்றோம்!


0 comments:

Post a Comment