ADS 468x60

29 November 2020

இளைஞர்கள் தொழில் முயற்சியாண்மையில் வெற்றிபெறுவது எப்படி?

இலங்கைப் பூர்வீக வரலாற்றின்படி எமது சமுகம் தமக்குத் தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்து தன்னிறைவானவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். அன்று அவரவர்கள் செய்த தொழில்களை இன்று 'முயற்சியாண்மை' என பிரத்தியேகமான துறையாக வளர்சி பெற்றுள்ளது. இந்த வியாபார முயற்சிகள் இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருந்துவருகின்றது. இருப்பினும் வேறு வளர்ந்துவரும் நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது மிகக் குறைந்தளவே இவர்கள் இருந்துவருவது குறைபாடாக உள்ளது. அதற்குக் காரணம் இளைஞர்கள் மத்தியில் இன்னும் இவைபற்றிய குறைந்தளவான ஈடுபாடும் மறுபுறத்தில் அவர்களுக்கு அரச துறையில் இணைந்து வேலைசெய்வதற்கான ஈர்புமே இவற்றின் வளர்சிக்கு தடையாக உள்ள காரணம். இவற்றை மேவி, இன்றைய இளைஞர்கள் மத்தியில் எவ்வாறு இவற்றை ஊக்கப்படுத்தி வெற்றிபெறும்படியாக வழிப்படுத்துவது என்பது பலரது வினாவாக உள்ளது. 

சுயமுயற்சியாண்மை
முதலில் நாம் முயற்சியாண்மை என்பது என்ன? என்று பார்ப்போமானால் அதனுடைய மொத்த உள்ளடக்கமும் ஒரு வியாபாரத்தினை ஆரம்பித்து, அபிவிருத்தி செய்து, பின்பு அதனை நேர்தியாக முகாமை செய்வதன் மூலம் இலாபத்தினைப் பெற்றுக்கொள்ளுவதனைக் குறிக்கும். அதாவது ஒருவர் தனது வியாபார நடவடிக்கையில் அனைத்து சவால்களையும் திட்டமிட்டு துணிவோடு எதிர்கொண்டு அதன் ஆபத்துக்களை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறாக முன்னெடுப்பதே முயற்சியாண்மை எனப்படும். 

முயற்சியாண்மையில் பேசப்படும் முதன்மையான பல கருவிகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமாக திறன்கள், அறிவு, புதிது புனைதல், சுயநம்பிக்கை, தனிப்பட்ட ஈடுபாடு, ஆகியவற்றினைக் குறிப்பிடலாம். வர்த்தக உலகில் ஒரு முயற்சியாளன் தன்னிச்சையாக, நம்பிக்கையுடன் அனைத்துச் சவால்களையுயம் வெற்றிகொண்டு முன்னேறுவானாக இருந்தால் அவன் சமுகத்தில் பாராட்டுக்களையும் பெறுவான்.

ஜனாதிபதியின் கொள்கையும் முயற்சியாண்மையும்

எமது நாட்டு ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின்படியும், மற்றும் தேர்தல் முன்மொழிவிலும் தொழில் முயற்சியாளர்களுக்கான முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதனை நினைவில் கொள்ளவேண்டும். அதனை பல சந்தர்பங்களில் நாட்டின் ஜனாதிபதியே எடுத்துக்காட்டியும் உள்ளார். ஆகவே எதிர்காலத்தில் முயற்சியாளர்களை அதிகரிப்பதில் அரசாங்கம் ஆர்வம் காட்டுவதனூடாக தனிமனித, சமுக மற்றும் எமது பொருளாதார முன்னேற்றத்தில் அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளதனை எத்தனை இளைஞர்கள் மற்றும் யுவதிகள் புரிந்துகொண்டு பயன்படுத்துவார்கள் என்பதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே ஜனாதிபதியின் விருப்பமும் எமது விருப்பமும் சுயமாகத் தொழில் புரியும் ஆற்றலுள்ள இளைஞர்களாக மாறவேண்டும் என்பதே. அப்போதுதான் சுதந்திரமான ஒரு தொழிலாளியாக நாட்டிற்கு நன்மைபயற்க்க முடியும். ஆனால் அரசாங்கத்தில் எமது இளைஞர் யுவதிகள் வேலைசெய்ய அதிகம் ஆசைப்படுவதனால் அவர்கள் எதனை அடைய விரும்புகின்றார்கள் என்பதுதான் புரியாத ஒன்றாக உள்ளது.

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன முன்மொழிவுகளில் இளைய தொழில் முயற்சியாளர்களுக்கு பல சலுகைகளையும் மற்றும் முன்னுரிமையினையும் குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது. ஆகவே எமது இளைஞர்கள் ஒரு வியாபாரத்தினை ஆரம்பிப்பதனால் அவர்கள் இந்த நாட்டிற்கும் வீட்டிற்கும் கொடுக்கும் முக்கிய பங்கினை உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் தங்களுக்கு இருக்கும் திறன்களையும் ஆற்றல்களையும் மற்றும் புத்தியினையும் வித்தியாசமாகப் பிரயோகித்து ஒரு தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதே எமது பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கும்.

சுயமுயற்சியாண்மையின் நன்மைகள்.

எனவே இளைஞர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதானது, சமுகத்துக்கும் அதுபோல் நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஒரு தலையிடியாகவே இருக்கும். ஆனால் மறுபுறத்தில் அவ்வாறான ஒரு தொழிலை இவர்கள் தொடங்குவார்களானால் ஏனையோருக்கும் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி இவர்களைச் சூழ உள்ளவர்களுக்கு பாரமாக இல்லாமல் சுதந்திரத்தினை வழங்குகின்றார்கள். ஆகவே தொழில் முயற்சியாண்மையென்பது அதனை மேற்கொள்ளுபவர்களிடம் எப்பொழுதும் நேர்மறையான பாதிப்பினையே எமது பொருளாதாரத்துக்கு உண்டுபண்ணும்.

சுயமுயற்சியாண்மையானது ஒரு சிறந்த வியாபார முயற்சியாகவே என்றும் கருதப்படுகின்றது. இது எந்த வயதானாலும் முழு சவால்களையும் மற்றும் ஆபத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் தைரியத்தினைக்கொடுக்கும். கடினமாகவும் மேலதிகமாகவும் தமது நேரத்தினைப் பயன்படுத்தி உழைப்பவர்களே அதிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதுபோல இங்குள்ளவர்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி நிதியைக் கையாளுதல், முடிவெடுக்கும் சக்தி, புதிய எண்ணங்களை பரிட்சிப்பதற்கான சுதந்திரம் இவை அனைத்துக்கும் மேலாக சுயதிருப்தி ஆகியன நாம் சுயமாகத் துவங்கும் வேலையில் அல்லது தொழிலில் கிடைக்கும் நன்மைகளாகும்.

இன்னொருவருக்கு கீழே வேலை பார்க்க விரும்பாத ஒருவருக்கு இந்த தொழில் முயற்சியாண்மை ஒரு இலகுவான விடயமாக இருக்கும். ஏனெனில் ஒரு வெற்றிகரமான முயற்சியாளன் தனக்கு விரும்பிய பல நடவடிக்கைகளை, மாற்றங்களை மற்றும் வளர்சியை செய்யக்கூடியவர்களாக இருப்பர்.
இன்னும் எமது கண்ணுக்கு தெரியாத பல காரணங்கள் தொழில் முயற்சியாண்மையின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்கின்றன.  அதில் முக்கியமானதொன்று ஒருவர் எந்தவித அச்சமும் இன்றி துணிவுடன் தோல்வியே இல்லாமல் திட்டமிடலுடன் எடுக்கப்படும் நடவடிக்கைகளாகும். அதேநேரம் தொழில் முயற்சியாளர் அவருடைய வியாபாரம் தொடர்பாக பரிபூரண விழிப்பும் மற்றும் தெழிவும் கொண்டிருத்தல் மிக முக்கியமாகும். 

சிறுவியாபாரத்தினை துவங்குவதாக இருந்தாலும் அந்த வியாபாரத்தின் சந்தைப்படுத்தல் வாய்ப்புக்கள், நிதித்தகவல் நிலவரங்கள் எம்மிடமுள்ள வரவுசெலவுத்திட்டம், நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆபத்துக்கள் போன்றவற்றுடன் இன்னும் தொடர்புடைய பல விடயங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது மிக அவசியமாகும்.

முக்கியமாக ஒரு தொழிலில் வெற்றிபெற ஒன்றை புதிதாக உருவாக்கும் திறன் மிக அவசியமானதாகும். இன்று பரவலாக எமது நாட்டைப் பொறுத்தவரையில் பலரால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட அதே தொழிலை துவங்கியே தொழில் சந்தைக்குள் நுழைவதனைக் காணலாம்;. ஆனால் சந்தைப்படுத்துதல் எனும் விடயத்தினை முன்னிறுத்த, அதைக்கவர புதிதுபுனைகின்ற சிந்தனையில் அங்கு காலடி எடுத்துவைத்தல் மிக முக்கியமானது. 

அத்தோடு ஒரு வியாபாரத்தினை ஆரம்பிக்கும் நாள் துவங்கி முகாமை செய்யக்கூடிய போதிய புத்திசாதுரியம் மிக அவசியம். அங்கு எதிர்பாராத மற்றும் எதிர்பார்த்த அனைத்து சவால்களையும் நாம் முன்னெடுக்கும் தொழில் முயற்சிப் பயணத்தில் பொறுமையுடன் கடந்து செல்லவேண்டும். அது வலியானதாக இருந்தாலும் நிச்சயம் பெரிய சந்தைவாய்பை உண்டுபண்ணித்தரும் ஒரு விடயமாகும். எனவே நாம் எடுக்கும் முடிவுகளைக் கணக்கிட்டே நடைமுறைப்படுத்த வேண்டும். 

நாம் கடந்துவந்த வியாபார உலகத்தில் அவதானித்திருப்போம்;: ஒன்றை விற்பனை செய்பவர்;, அதனை கொள்வனவு செய்பவர், அதனை உற்பத்தி செய்து வளங்குபவர் மற்றும் இவற்றுக்கான சேவை வளங்குனர் போன்ற ஒவ்வொரு கட்டத்திலும் அவரவருக்கு சுய நம்பிக்கை உயர்ந்திருப்பதனை அவதானித்து இருந்திருக்கின்றோம். இவர்களே இயற்கையான தலைவர்கள் ஆனால் இவர்கள் கற்றவர்களாகவோ இல்லாவிடின் பொதுவான அறிவுடையவர்களாகவோ இருப்பதனை கண்டிருப்போம். இதில் நாம் கண்டுகொள்ளும் மிக முக்கிய விடயம் 'சுயநம்பிக்கை' இதுதான் சுய முயற்சியாளனின் வெற்றியினைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாகும்.

இவை அனைத்துக்கும் நாம் ஒரு அளவிடக்கூடிய 'இலக்கினை' முதலில் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். ஆகவே நாம் வெற்றியடைவதற்கான முதற்படியாக இருக்கும். இந்த இலக்கினைச் சுற்றியே எமது தொழிலுக்கான திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் அமைந்திருக்க வேண்டும். இந்த இலக்கினை நோக்கி எமது ஒவ்வொரு செயற்பாடும் இருக்கின்றதா என்பதனை அடிக்கடி நெருக்கமாகவும் தவறாமலும் கண்காணித்து ஒப்பிட்டு நோக்கவேண்டும்.  

வியாபார கட்டமைப்பு ஒழுங்குபடுத்துதல்

நாம் ஒரு தொழில் முயற்சியினை ஆரம்பித்த உடனேயே அதற்கான 'கட்டமைப்பினை' உருவாக்குதல் இலகுவான விடயமல்ல. நாம் ஏற்கனவே ஸ்தாபித்துள்ள இலக்குக்கு அமைய வியாபார ஒழுங்குபடுத்துதல் கட்டமைப்பினை நாம் கற்பனையில் அமைத்துக்கொள்ள முடியும். ஆகவே நாம் நமது வியாபாரத்துக்கான வேலைகளை தெரிவு செய்வதற்கு நமது திட்டமிடல் கட்டமைப்புக்கு அமைவாக படிப்படியாகவே முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்காக எமது வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ள ஆகக் குறைந்த தொழிலாளர்களை தெரிவுசெய்தல் சிற்ப்பாக இருக்கும்.

ஆகவே மிகப்பொருத்தமான நன்கு தனிப்பட்ட ரீதியில் விஷேட திறனுள்ள, போட்டிமிக்க, சுறுசுறுப்பான நல்ல மனப்பாங்குமிக்க மற்றும் நற்குணம்படைத்தவர்களாக இருப்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

முன்னர் குறிப்பிட்டபடி, பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி, வெற்றிகரமான மற்றும் நிலையான வணிகத்தை உருவாக்குவது ஒரு மகத்தான தனிப்பட்ட முயற்சியாகும். எனவே, இந்த வியாபார முயற்சியில் பொறுமையுடன் படிப்படியாகச் செல்வது கட்டாயமாகும்.

ஒவ்வொரு செயல்பாட்டு அம்சத்தையும் சிறிய மற்றும் அளவிடக்கூடிய படிகளாக உடைப்பது மிக முக்கியம். குறிப்பிட்டுள்ளபடி, இலக்கை குறுகிய நேர கட்டமைப்புக்களுடன்; சிறிய இலக்குகளாகப் பிரித்து, அடைய உற்சாகமாக வேலை செய்ய வேண்டும்.

முக்கிய தொழில் இலக்கில் கவனம் செலுத்தாததால் வியாபார முயற்சியில் நுழைந்த பல இளைஞர்கள் தோல்வியடைகிறார்கள். ஒரு தொழில்முனைவோரின் வாழ்க்கை ஆரம்ப கட்டங்களில் அமைதியற்றதாகவும் சிதறக்கூடியதாகவும் இருக்கும். மேலும், இளம் தொழில்முனைவோர் தேவையற்ற திசைதிருப்பல்களில் கவனம் செலுத்த வைக்கும் பல தொடர்புடைய துணை இலக்குகளில் பணியாற்ற முனைகிறார்கள். எனவே, முதன்மையான வேலைக்கு சிறந்த கவனம் செலுத்துவது ஒரு முக்கியமான காரணியாகும். எனவே, இளைஞர்களுக்கான எனது அறிவுரை என்னவென்றால், பல பணிகளால் திசைதிருப்பப்படுவதைத் தவிர்க்கவும், ஒரு திடமான இலக்கில் கவனம் செலுத்தவும் அவர்கள் பழகிக்கொள்ள வேண்டும்.

வெற்றிக்கான உபாயங்கள்

வணிகத்தில் புதிதாக நுழைபவர்கள் உத்வேகம் பெற அதற்குரிய வழிகாட்டிகளைப் அவதானிக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு தொழில் தலைவர்களின் வெற்றிக் கதைகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வழிகாட்டிகளைக் கொண்டிருக்க, ஒருவர் அவர்களை தனிப்பட்ட முறையில் அறியாமல் இருப்பது சிறப்பானது. எழுச்சியூட்டும் கதைகள் மற்றும் சுயசரிதைகளைப் படிப்பது இவ்வர்த்தகத்தில் உண்மையான பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த முறைகளில் ஒன்றாகும். உண்மையில், ஒரு நபர் கல்வியில் இருந்து கற்றுக் கொள்ளும் அனைத்து கோட்பாடுகளையும் விட வெற்றிகரமான தலைவர்களைப் படிப்பதன் மூலம் அதிக தகவல்களைச் சேகரித்து அறிவைப் பெறலாம். குறிப்பாக, எந்த அனுபவமும் இல்லாமல் தொடங்குவோருக்கு, வழிகாட்டிகளின் பின்வரும் எடுத்துக்காட்டுகள் நடைமுறை அறிவைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும்.

நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவென்றால், வியாபாரத்தில் வெற்றி பெறுவது ஒரே இரவில் நடந்துவிடும் செயல் அல்ல. தொழில்முனைவோர் படிப்படியாக உத்திகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், தேவையான கால அளவு எதுவாக இருந்தாலும் அவர்களின் வழியை மேம்படுத்த வேண்டும். மேலும், வியாபாரத்தில் சாத்தியமான ஆபத்துகள், ஆபத்துகள் மற்றும் தோல்விகளின் வாய்ப்புகள் பற்றியும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.

தொழில்முனைவோரின் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வரையறையிலும் 'இடர்களை ஏற்றுக்கொள்ளுபவர்' என்ற சொல் வலியுறுத்தப்படுகிறது. தோல்விக்கு அஞ்சாமல் வாய்ப்புகளைப் பார்க்கக்கூடியவர்கள், உற்சாகமானவர்கள், தன்னம்பிக்கை உடையவர்கள் மற்றும் மனச்சோர்வடைந்த சூழ்நிலையில் கூட மற்றவர்களை ஊக்குவிக்கக்கூடிய நபர்களுக்கு வணிக வெற்றி ஒப்பீட்டளவில் எளிதான பணியாக இருக்கும்.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் இந்த தொழில் முயற்சியாண்மைக்கான வழிகாட்டல் சிறப்பாக போதிக்கப்படவேண்டும். அப்போது பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் இளைஞர்கள் தொழில் முயற்சியாண்மையில் இணைய முன்வரும் வாய்ப்பு அதிகரித்து எமது சமுகத்தில் உள்ள வேலையின்மை என்கின்ற சாபக்கேடு நீங்கிவிடும். குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் இவற்றுக்கான தொடர்புபடுத்தல்களை பாடசாலைகளிலோ பல்கலைக்கழக மட்டங்களிலோ ஏற்படுத்தும் திறன் அற்று இருப்பது அவதானிக்கத்தக்கது. பல திட்டங்கள் இவற்றுக்காக ஏற்படுத்தப்பட்டிருப்பினும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் உறங்கி பிரயோசனம் இல்லாமல் இருப்பதனை அவதானிக்கலாம். 

ஆகNவு இவை பொதுவான அதிகாரிகள் கொண்ட குழுக்கலாள் கண்காணிக்கப்பட்டு இவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்கும் போது பிராந்தியத்தின் பாதிப்பிரச்சினை தீர்ந்துவிடும் வாய்ப்புள்ளது. 
அதுபோல் ஒவ்வொரு திணைக்களங்களும், துறைவாரியான தலைமைச் செயலகங்களும் அவரவர் வளங்களை பயன்படுத்தி அதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் கலந்துரையாடல்களையும் தேடல்களையும் தொடர்சியான அறிக்கைகளாக வெளியிடும் போது இவை இளைஞர்களைச் சென்றடைந்து அவர்களின் தெரில் முயற்சிக்கு முலகாரணமாக அமையலாம்.

இதுபோல் மாவட்ட பிராந்திய ரீதியில் தொழில் முயற்சியாண்மையின் தேவை, வாய்ப்புக்கள் பற்றி மன்றங்கள், ஆய்வரங்கங்கள் மூலம் கண்டறியப்படலாம். அதனால் மக்கள் விழிப்படைந்து வியாபார சமுகத்தினை உருவாக்கும் ஒரு உன்னத நிலை உருவாகும். ஆகவே பேருக்கு இயங்காமல் பேரெடுக்க இயங்கும் அமைப்புக்களையே நாம் பார்க்க விரும்புகின்றோம்.

0 comments:

Post a Comment