ADS 468x60

08 November 2020

"வேலைத்தளங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாரியசவால்கள்- கொவிட்-19"

 'வீட்டிலிருந்து வேலை செய்வது' (Work from home) என்பது கொவிட்-19 ஆல் புதிதாகத் தூண்டப்பட்ட ஒரு முறையாக இருக்கின்றது.  ஆனால் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து அதிக உற்பத்தித்திறனை ஊக்குவிக்க விரும்பினால், அவர்கள் வீட்டிலிருந்து வேலையை ஒரு பாலின முன்னோக்குடன் (gendered perspective) வேறுபாடற்ற நிலையில் அணுக வேண்டும். மற்றும் புதிய கொள்கைகளை உருவாக்கும்போது தற்போதைய  நிலையைக் கருத்தில்கொண்டு உருவாக்க வேண்டும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. இந்த ஆய்வானது; உற்பத்தித்திறனுடைய பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கி குழுமத்தின் உறுப்பினரான ஐ.எஃப்.சி (IFC) மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பில்; 'தனியார் துறையில் வேலைவாய்ப்பு மீதான கொவிட்-19 இன் பாலின தாக்கங்கள்' என்ற அறிக்கை, ஆய்வுசெய்யப்பட்ட நிறுவனங்களில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு நிறுவனங்கள் தொற்றுநோயின் விளைவாக வருவாயில் எதிர்மறையான தாக்கத்தை சந்தித்துள்ளதை காட்டுகின்றது.

வங்கி மற்றும் நிதி, வேகமாக விற்பனையாகும் நுகர்வுப்; பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், ஆடைகள் மற்றும் உற்பத்தித்துறை ஆகிய பல்வேறு துறைகளில் உள்ள 15 முன்னணி இலங்கை நிறுவனங்களிடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது. 

அதன் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று, நிறுவனங்கள் ஊழியர்களின்; வருவாய் சரிவைத் திருத்திக்கொள்வதும், அவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதனை உறுதிப்படுத்துவதும் அங்கு பணிபுரியும் தங்கள் பெண் பணியாளர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்  என கண்டறியப்பட்டுள்ளது. 

ஆய்வின் ஆதாரங்களின்படி பெண் ஊழியர்கள் அதிக நேரம் வேலைசெய்ய வேண்டியுள்ளமை, தொலைதூரத்துக்கு வேலைக்காக செல்லவேண்டியுள்ளமை அல்லது நாளாந்த வேலை பணியில் அடிக்கடி ஏற்படும் மாற்றம் அல்லது ஒரு தொழில் நிறுவனத்துக்குள் வேறு பிரிவு அல்லது வேலை செய்யும் இடத்திற்கு அடிக்கடி இணைக்கப்படுதல். போன்ற நெருக்கடிகளுடன்;, பெண் ஊழியர்கள் தங்கள் ஆண் ஊழியர்களுடன்; ஒப்பிடும்போது அதிகரித்த மின்சாரம் மற்றும் பிற பயன்பாட்டு விலைப்பட்டியல்களை சந்திப்பதில் மிகுந்த மன அழுத்தத்தை எதிர்கொண்டுவருகின்றனராம். 

இந்த ஆய்வுக்காக பதிலளித்தவர்களில் ஐந்து பேரில் ஒருவர் இருக்கின்ற வேலையில் இருந்து அதை இழப்பதற்கான சாத்தியங்கள் குறித்து கவலைப்படுவதாகவும், பத்தில் ஒருவர் புதிய வேலைவாய்ப்பைக் தேடிக்கண்டுபிடிக்க முனைவதாகவும் அறிக்கை கண்டறிந்துள்ளது. ஆய்வின் அறிக்கையில் ஐந்து ஊழியர்களில் இருவர் தங்கள் வருமானத்தை ஈடுசெய்ய வேண்டியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது, அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு புதிய துறையில் பிரத்தியேகத் திறமையை வளர்க்கவேண்டும் அல்லது அந்த வேலையில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று நம்புகின்றனராம்;. 

கூடுதலாக, ஆய்வுக்குட்படுத்திய ஊழியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் சம்பளக் குறைப்பை அனுபவித்து வருவதாகவும், அவர்களில் கிட்டத்தட்ட 40 வீதமானோர் இந்த தொற்றுநோய் பரவல்காரணமாக தங்கள் வேலைத்தள நன்மைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். 

இருப்பினும் சமீபத்திய IFC-DFAT ஆய்வுகள் தனியார் துறையில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த ஆதரவை வழங்குவதற்கான பரிந்துரைகளையும் வழங்குகி இருக்கின்றது. அர்த்தமுள்ள நெகிழ்வான ஊழியர்  தொழிற் கொள்கைகளை உருவாக்குதல், ஊழியர்களை - குறிப்பாக பெண்கள் - தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதை ஏற்படுத்துவது, பாதுகாப்பான போக்குவரத்தை வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் உள ஆரோக்கியம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆதரவை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

துரதிர்ஷ்டவசமாக கொவிட்-19 என்பது வேலைகளை மேம்படுத்துவது (upending jobs) மட்டுமல்லாமல், ஊழியர்கள் தங்களை மீண்டும் புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் (re-skill themselves), நிறுவனத்தின் ஊழியர்களது பதவிப்படிநிலைகளை (Hierarchy) உயர்த்துவதற்கும் நிதி ஒதுக்கீட்டை (reducing financial space) குறைத்துள்ளது. இலங்கையில் ஏற்கனவே முறைசார் ஊழியர்களில் (formal workforce  ) சுமார் 34 வீதமானோர்  மட்டுமே பெண்கள் உள்ளனர், அவர்கள் மீது வேலைத்தளங்களில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதால் இந்த எண்ணிக்கை குறைவதைக் காணலாம், இது கடுமையான சமூக பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எமது நாடானது விரைவாக வயதுகூடியவர்களை மக்கள்தொகையில் கொண்ட நாடாக மாறிவரும் நிலையில், அதிகமான பெண் ஊழியர்களை முறைசார் தொழிற்படைக்குள் (formal workforce,) ) ஈர்ந்திழுக்க முன்வரவேண்டும்; என பரிந்துரைத்துள்ளதுடன், அதிகளவான ஆய்வுகள் பெண்களை தொழிற்படைக்குள் அதிகம் வைத்துக்கொள்வதனால் பல பொருளாதார, சமூக முனைகளில் பயனளிக்கும் என்பதைக் காட்டுகின்றன.

கொவிட்-19 பல விதிமுறைகளை மாற்றியமைத்து இருக்கின்றது, இருப்பினும் ஆண்களும் பெண்களும் உள்ள வேலைத்தளத்தில் பாரம்பரிய முறைமைகளில் எதுவித மாற்றங்களையும் பெரிதாகக் கொண்டுவரவில்லை, பெண்கள் தங்கள் அலுவலக வேலைகளுக்கு மேலதிகமாக இப்போது அதிகமாக அவர்களது குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டுக் கடமைகளுடன் சமநிலைப்படுத்த வேண்டியுள்ளது, பெரும்பாலும் அவர்களுக்கு முன்னர் கிடைத்த வீட்டு பணி உதவியாளர்களின் உதவியின்றி செய்வதற்கு தயாராகவேண்டியுள்ளது. இந்த நிலமையினை உணர்ந்த வேலைத்தளங்களில் நிச்சயமாக பாரிய உற்பத்தி பெருக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்பது பொதுவான அவிப்பிராயமாகும்.

Reference

Gendered Impacts of COVID-19 on Employment in the Private Sector, Sri Lanka-https://www.ifc.org/wps/wcm/connect/4c2e49ba-59ec-4369-81fc-49e020104016/Gendered+Impact+of+COVID-19+on+Employment+in+the+Private+Sector+in+Sri+Lanka.pdf?MOD=AJPERES&CVID=nlJ-Qj4


0 comments:

Post a Comment