ADS 468x60

30 November 2020

வியாபார உலகில் டிஜிடல் மீடியா தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளது.

இன்று எமது நாடு மாத்திரமல்ல முழு உலகமே பாரிய மாற்றத்தினை வர்த்தக உலகில் சந்தித்துள்ளது. இதனை நாம் ஒரு இடராக நினைத்து முடங்கி விடாமல் இந்த இடருக்குள் எவ்வாறு எமது வியாபார செயற்பாடுகளையும் அதனோடிணைந்த சேவைகளையும் மக்களிடம் கொண்டு செல்வது, எப்படி எமது வியாபார நடவடிக்கைகளை நிருவகிப்பது என்பனவற்றையெல்லாம் நாம் இன்றய டிஜிடல் உலகில் மாற்றிக்கொள்ளவேண்டும் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான பல டிஜிடல் தளங்கள் உருவாகி எம்மத்தியில் அவை கல்வி வர்த்தக மற்றும் சேவைகள் செயற்பாடுகளில் மெதுமெதுவாக அறிமுகமாகி வருவதனை நாம் உணரத்துவங்கியுள்ளேம். இவற்றை எம் முயற்சிகளுக்குள் நிச்சயம் உள்வாங்கி எம்மை இந்த தொற்றுக்குள்ளும் வாழும் நிலையை உருவாக்கவேண்டும்.

சமீபத்திய வரலாற்றில் முன்னெப்போதையும் விட, டிஜிட்டல் மீடியா தளங்கள் வர்த்தக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தகவல்களின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளன. கோவிட் -19 உருவாக்கிய தற்போதைய நிலையற்ற வியாபார சூழலின் சவாலை எதிர்கொள்ளும் சிறந்த கருவியாக டிஜிட்டல் மீடியாவை உலகம் அடையாளம் கண்டுள்ளது. குறிப்பாக, இன்று எம்மத்தியில் சமூக ஊடகங்கள் பெரிதும் பயனுள்ளதாகிவிட்டதனை நாம் உணரத் துவங்கியுள்ளது.

இலங்கையில் பெரும்பாலான பெரிய அளவிலான வியாபார இயக்குனர்கள் ஏற்கனவே டிஜிட்டல் தளங்களை நோக்கி தங்களை தயார்படுத்தியுள்ளனர். ஆயினும்கூட, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்ததொற்றுக்குப் பின்னர் தங்கள் தொழிலில் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். ஏனெனில் அவர்கள் பெரிதாக தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவில்லை. புதிய ஊடகங்கள் ஊடாக தொடர்புகொள்வதன் மூலம் பெரிய வியாபார இயக்குனர்கள் தங்கள் மேலதிக இலாபத்தின் பங்கை அனுபவித்து வருவதனால் நிறுவப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வியாபாரத் தொழில்கள் கூட சந்தையில் ஒரு பாதகமாகன விளைவுகளை எதிர்கொண்டுள்ளன. இன்று, வியாபாரங்கள்; கோவிட் -19 இன் ஆபத்து காரணமாக இலாபங்கள் வீழ்ச்சியடைந்தமைக்கு மேலதிகமாக ஊழியர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்ற செலவும் அதிகரித்துள்ளது.

எனவேதான், எமது சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்துவது முக்கியமானது, சந்தைப்படுத்தல் செயல்பாடுகளில் (Marketing function) மட்டுமல்லாமல், பணமில்லா கொடுப்பனவுகளைப் (cashless payment) பயன்படுத்துதல் மற்றும் வீட்டிலிருந்தவாறே வேலை செய்தல் (Work from Home) முறைமை போன்ற பிற மாற்று முறைகளும் இன்று முன்னணிவகிக்கின்றன.

இலத்திரனியல்; ஊடகங்கள் கிடைக்கக்கூடிய இடங்களில் வேறு எந்த ஊடகத்தையும் விட வியாபாரத்தில் வேகமாக இருக்கும். இலங்கையின் வர்த்தக சமுகமானது தமது வியாபார நடவடிக்கைகளை டிஜிட்டலுக்கு செல்வதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொற்றுநோய் தோன்றிய பின்னர், அவர்களில் பலருக்கு சமூக ஊடகங்களைத் தழுவுவதை விட வேறு எந்தத் தேர்வும் இருக்கவில்லை. கோவிட் -19 இந்த தத்தெடுப்புக்கு ஒரு ஊக்கியாக செயல்பட்டுள்ளது.

எதிர்கால சந்தைப்படுத்தல் செயல்பாடுகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மிக முக்கியமான கருவியாக மாறி வருகிறது. சந்தைப்படுத்தலானது புதிய டிஜிட்டல் முறைகளால் பாரம்பரிய ஊடகங்கள் முற்றிலும் மாற்றப்படும் நிலை உருவாகி வருகின்றது. இலங்கை நகர்ப்புற மற்றும் புறநகர் சமூகம், ஆறு மில்லியனுக்கும் அதிகமான சமூக ஊடக பயனர்களைக் கொண்டுள்ளது, ஏற்கனவே இணையம் மூலம் உற்பத்தித் தயாரிப்புகளைத் தேடவும் ஒப்பிடவும் அவை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, நிறுவனங்களுக்கு புதிய ஊடகங்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. டிஜிட்டல் மீடியா சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளுக்கான பல மாற்று மற்றும் தேர்வுகளை வழங்குகிறது. மேலும், வழக்கமான முறைகளை விட டிஜிட்டல் தளங்கள் மிகவும் நடைமுறை மற்றும் பல்துறை திறன் கொண்டவை என்பதனை பலர் உணரத்துவங்கியுள்ளது.

இன்று வரம்பற்ற தகவல் திறன் கொண்ட வலைத்தளங்கள், ஒன்லைன் விளம்பரம், ஈ-மார்கட்டிங், சமூக ஊடக விளம்பரம் மற்றும் மொபைல் மார்க்கெட்டிங் ஆகியவை ஒரு நிறுவனம் தேர்வுசெய்யக்கூடிய சில வியாபார சந்தைப்படுத்துதல் தேர்வுகள். சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் இறுக்கமான வரவு செலவுத் திட்டங்களுடன் செயல்படுகின்றன.

புதிய டிஜிடல் பயன்பாடுகளுடன்;, டிஜிட்டல் பயன்பாடுகளின் குறைந்த செலவுகள் காரணமாக நிறுவனங்களின்  சுமைகளை பெரிய இலாபத்துடன் குறைக்க முடியும். தவிர, விளம்பரதாரர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களை அடைய முடியும். விளம்பரதாரர்கள் வயது, சமூக நிலைமைகள் (Social Condition) மற்றும் புவியியல் பகுதிகள் (Geographical Areas) போன்ற அடிப்படையில்; தங்கள் சொந்த இலக்கு வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுக்கும் அனுகூலத்தினைக்; கொண்டுள்ளனர். உண்மையில் பாரம்பரிய ஊடகங்களுடன் இத்தகைய சாதனையை அடைய முடியாது. இந்த முக்கியமான கட்டத்தில் சந்தையில் நிலவும் கடுமையான போட்டி மற்றும் கோவிட்டுக்கு பின்னரான குழப்ப நிலையில் இந்த டிஜிட்டல் உலகில் வியாபார நிறுவனங்கள் உள்நுழைதல் மிக முக்கியமாகும்.

எது எவ்வாறு வளர்சிபெற்றிருப்பினும், இவற்றைப் பயன்படுத்துவதனூடாக நம்பகத்தன்மையை நிறுவுவதும் வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறுவதும் இந்த கடினமான சூழ்நிலையில் வெற்றிபெற முக்கிய காரணிகளாகும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து வியாபாரத்துடன் தொடர்புடைய முக்கியத்துவம் வாய்ந்த பின்னூட்டல் கருத்துகள் மற்றும் சான்றுகளை எளிதாகப் பெற முடியும். வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் நல்ல பரிந்துரைகள் எமது வியாபாரத்தில் நீண்ட தூரம் செல்ல வழிசமைக்கும். பெரும்பாலும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் போது இருக்கும் அவர்களது கருத்தை நம்புகிறார்கள், அதனையே ஒருபொருட்டாக கருதுகிறார்கள்.

இன்று இந்த தொற்றுநோய,; தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தொழில் முயற்சியாளர்கள்; தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் பயனுள்ள மாற்றுகளைக் கொண்டுள்ளனர். பல்வேறு டிஜிட்டல் ஊடகங்கள்; மூலம் நிறுவனங்கள் கூட்டங்களை நடத்தலாம், வட்ஸ்அப், வைபர் அல்லது சூம் போன்ற பிற ஒத்த டிஜிடல் மீடியாப்; பயன்பாடுகள் மூலம் ஒரு குழுவினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கலாம், பயிற்சி அமர்வுகளை நடத்தலாம் மற்றும் கிட்டத்தட்ட ஒரு செயல்பாட்டை திறம்பட இயக்கலாம்.

எளிதான அணுகுமுறைகள் மற்றும் கிடைக்கக்கூடிய இத்தொழில் நுட்பங்களினூடாக தொழிலாளர்கள் நேரில் இருப்பதை விட வசதியாக செயல்பாட்டை மேம்படுத்த அனுமதிக்கிறது. நிறுவனங்கள் டிஜிட்டல் மீடியாவின் ஊடாக கோவிட் -19 தாக்கத்தை குறைக்க மட்டுமல்லாமல், எமது முயற்சியாண்மைகளுக்கு அல்லது தொழில்களுக்கு எதிர்கால மாதிரியாக மாற்ற வேண்டும். அப்போது எம்மிடம் முடங்கிக்கிடக்கும் தொழில் முயற்சியாண்மைகளைத் திறம்பட நடாத்த முடியும். இதில் எம்மத்தியில் இளைஞர்கள் யுவதிகள் நிச்சயம் முன்முரமாக செயற்படவேண்டும். புதிய உலகிற்கு முகம்கொடுத்து இதை ஒரு சந்தர்பமாகப் பயன்படுத்தி எம்மையும் எமது சமுகத்தினையும் முன்னுக்கு கொண்டுவரவேண்டும் என்பதே எனது அவா.

0 comments:

Post a Comment