ADS 468x60

03 December 2020

கொரோணாவுககு பின்னரான வர்த்தகத்தினை மேம்படுத்த தேசிய அறிவுசார் சொத்துரிமையைப் பயன்படுத்துவதின் முக்கியம்.

உலகம் வேறு ஒரு உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. இந்த புதிய மாற்றத்துக்குள் எம்மையும் எமது பொருளாதார வர்த்தக விடயங்களையும் பழக்கிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக இந்த நெருக்கடியான நிலைக்குள் கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்கவும் வியாபார நடவடிக்கைகளை விஸ்த்தரிக்கவும் தேசிய அறிவுசார் சொத்துரிமையை நாம் கையில் எடுக்க வேண்டும். இங்கு தேசிய அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவம் நாம் அறியாமல் இருக்கின்றோம். அவை பல்கலைக்கழக மட்டத்தில் திட்டங்களாக கொண்டுவரப்பட்டாலும் இன்னும் அவை அந்த சமுகத்திடம் ஏன் அந்த மாணவர்களிடையே அதேபோல் தொழில் முயற்சியாளர்களிடையேயும் மிகக் குறைந்தளவிலேயே கொண்டு சேர்க்கப்பட்டிருப்பது எமது துர்பாக்கியமே. எனவே இவ்வாறான நிலையை மாற்றி இந்த கொரோணாவுக்குப் பின்னரான புதிய நிலைமைக்குள் நாம் எவ்வாறு மீண்டெழுவது என்பனபற்றி இக்கட்டுரையில் ஆராயலாம்.

கொரோனாவுக்குப் பின்னர் இன்று 2020 ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்து அமைப்பின் ((World Intellectual Property Organisation’s (WIPO) உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (Global Innovation Index (GII)  இலங்கை 101 வது இடத்தில் உள்ளது - கடந்த ஆண்டை விட 12 இடங்களின் கணிசமான வீழ்ச்சி - மற்றும் ஒரு பரிதாபகரமான மதிப்பெண் 23.78, இல் 0-100, ஆனால் 100 மிகவும் பெறுமதியான மதிப்பெண்.

02 December 2020

சீனப்பொருளாதார வளர்சி முறைமை இலங்கைக்கு எடுத்துக்காட்டு!

நாம் எந்த அளவில், எங்கு இருக்கின்றோம் என்பதனை இன்னொருவருடன் அல்லது இன்னொரு நாட்டுடன் ஒப்பீட்டு ரீதியிலே பார்க்க முடியும். பொருளாதாரத்திலும் அப்படித்தான் நாம் எம்மை அளவிட்டுக்கொள்ளுகின்றோம். கடந்த தசாப்தங்களில், பல கிழக்கு ஆசிய பொருளாதாரங்கள் தொடர்ச்சியான நிலையான பொருளாதார வளர்ச்சியை அனுபவித்துள்ளன, அதே நேரத்தில் தங்கள் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடும்படியான முன்னேற்றங்களை அடைந்துள்ளன, இது ஒரு சாதனை புகழ்பெற்ற உலக வங்கி ஆய்வில் 'ஆசிய அதிசயம்' என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங், தாய்வான், சிங்கப்பூர் மற்றும் கொரியா குடியரசு  ஆகியவை இந்த சாதனையின் பங்காளிகளாக இருந்தன.

ஒரு ஆய்வாளர் இந்த அதிசயத்தை 'ஒரு தலைமுறையை மேற்கு ஐரோப்பாவின் முன்னேறிய பொருளாதாரங்களை போல் சமூக பொருளாதார வளர்ச்சியில் மாற்றியமைத்துள்ளன' என்று விளக்கினார். இந்த நாடுகளின் குழு இப்போது வறுமையை நீக்கியுள்ள கம்யூனிஸ்ட் சீனாவினையே வியத்தகு முறையில் முந்தியுள்ளது.

01 December 2020

நாம் விவசாயத்தில் சாதிக்கும் தருணம் இது.

என்னதான் மாற்றம் வந்தாலும் நாம் உண்டுவாழ உணவு தேவை, அந்த உணவை உற்பத்தி செய்ய விவசாயிகள் தேவை. நாம் ஒவ்வொருவரும் நாள்தோறும் மூன்று வேளைக்கு சாப்பிட்டு உயிர்வாழ, கோடிக்கணக்கான இலங்கை மக்களின் பசியைப் போக்கும் மாபெரும் சேவை புரிபவர்கள் விவசாயிகள். நம் உழவர் பெருமக்கள், அன்னபூரணியைப் போல, வயிற்றுக்கு உணவு அளித்து வருகின்றனர். ஆனால் அவர்களில் பலர் வறுமையின் பிடியில் இருந்து இன்னும் மீண்டபாடில்லை. இதற்காக பல திட்டங்களை அரசு தனியார் என அனைவரும் எடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விவசாயிகள் விவசாயத்தில் புதிய வகையில் சிந்திக்க வேண்டும். அவர்களது பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

30 November 2020

வியாபார உலகில் டிஜிடல் மீடியா தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளது.

இன்று எமது நாடு மாத்திரமல்ல முழு உலகமே பாரிய மாற்றத்தினை வர்த்தக உலகில் சந்தித்துள்ளது. இதனை நாம் ஒரு இடராக நினைத்து முடங்கி விடாமல் இந்த இடருக்குள் எவ்வாறு எமது வியாபார செயற்பாடுகளையும் அதனோடிணைந்த சேவைகளையும் மக்களிடம் கொண்டு செல்வது, எப்படி எமது வியாபார நடவடிக்கைகளை நிருவகிப்பது என்பனவற்றையெல்லாம் நாம் இன்றய டிஜிடல் உலகில் மாற்றிக்கொள்ளவேண்டும் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான பல டிஜிடல் தளங்கள் உருவாகி எம்மத்தியில் அவை கல்வி வர்த்தக மற்றும் சேவைகள் செயற்பாடுகளில் மெதுமெதுவாக அறிமுகமாகி வருவதனை நாம் உணரத்துவங்கியுள்ளேம். இவற்றை எம் முயற்சிகளுக்குள் நிச்சயம் உள்வாங்கி எம்மை இந்த தொற்றுக்குள்ளும் வாழும் நிலையை உருவாக்கவேண்டும்.

29 November 2020

இளைஞர்கள் தொழில் முயற்சியாண்மையில் வெற்றிபெறுவது எப்படி?

இலங்கைப் பூர்வீக வரலாற்றின்படி எமது சமுகம் தமக்குத் தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்து தன்னிறைவானவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். அன்று அவரவர்கள் செய்த தொழில்களை இன்று 'முயற்சியாண்மை' என பிரத்தியேகமான துறையாக வளர்சி பெற்றுள்ளது. இந்த வியாபார முயற்சிகள் இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருந்துவருகின்றது. இருப்பினும் வேறு வளர்ந்துவரும் நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது மிகக் குறைந்தளவே இவர்கள் இருந்துவருவது குறைபாடாக உள்ளது. அதற்குக் காரணம் இளைஞர்கள் மத்தியில் இன்னும் இவைபற்றிய குறைந்தளவான ஈடுபாடும் மறுபுறத்தில் அவர்களுக்கு அரச துறையில் இணைந்து வேலைசெய்வதற்கான ஈர்புமே இவற்றின் வளர்சிக்கு தடையாக உள்ள காரணம். இவற்றை மேவி, இன்றைய இளைஞர்கள் மத்தியில் எவ்வாறு இவற்றை ஊக்கப்படுத்தி வெற்றிபெறும்படியாக வழிப்படுத்துவது என்பது பலரது வினாவாக உள்ளது. 

27 November 2020

உறங்கியும் உறங்காத அற்புத வரலாறு!

 உறங்கியும் உறங்காத அற்புத வரலாறு 

உலகத்தில் நினைக்காட்டா தமிழனா நீ கூறு


வாய்ப்பேச்சில் வீரர்களாய் வாய்தவர்கள் கண்டேன்

வாய்பேசா மிருகங்களை வதைத்தவர்கள் கண்டேன்

அரசியலில் அராஜகங்கள் புரிந்தவர்கள் கண்டேன்

ஆள்வைத்து அடித்தவீர ஆம்பளைகள் கண்டேன்

13 November 2020

இப்படித்தான் இம்முறை தீபவளி இருக்கவேண்டும்!

நண்பர்கள் மற்றும் வெள்ளிச்சரம் வாசகர்கள் அனைவருக்கும் முதலில் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! 

இது பண்டிகைக்காலம் அதனால் நீங்கள் தீபாவளி கொள்வனவு செய்ய துணிக்கடை, மளிகைக்கடை, நகைக்கடை செல்லும்போது கொரோனா இன்னும் நம்மைவிட்டு போகவில்லை என்பதை நினைவுபடுத்தி கொண்டு தனிமனித, சமுக இடைவெளியைக் கட்டாயம் கடைப் பிடியுங்கள். கடையில் மற்றவர்கள் மறந்தாலும் வாங்கச் செல்லும் நாம் மறக்கவே கூடாது.

நீங்கள் செல்லும்போது மாஸ்க் கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள். எந்தக் கடையில் பொருள்கள் வாங்கச் சென்றாலும், கடைக்குள் செல்வதற்கு முன்பும், வெளியே வரும்போதும் கட்டாயம் சானிடைசரால் கையை சுத்தம் செய்ய தவறாதீர்கள்.

12 November 2020

இப்படியும் ஒரு கல்வியை நாம் நினைக்கவில்லை!

கோவிட்-19 தொற்றுநோய் உலகளவில் கல்வி முறைகளை பாதித்துள்ளது, இது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளை மூடுவதற்கு வழிவகுத்தது. கோவிட்-19 இன் பரவலைக் குறைக்கும் முயற்சியில் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான அரசாங்கங்கள் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூட முடிவு செய்தன என்பது நாம் அறிந்ததே.

அந்தவகையில், மிகமுக்கியமாக இந்த வளர்ந்து வருகின்ற நாடுகளில் அதிலும் எம்போன்ற யுத்தத்தினால் மற்றும் வேறுபல அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியங்களுக்குள் ஏற்கனவே கல்வி பின்னடைந்துள்ள இந்தச் சூழலில், இது நமக்கு விழுந்த பேரிடியாகவே பார்க்கப்படுகின்றது.

இவற்றையெல்லாம் வெற்றிகொள்ளும் மனப்பாங்கை நாம் அனைவரும் சிந்தித்து வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான வெற்றியாளர்களாக கருதப்படுவோம். இதற்கு அனைத்து வகையான சுகாதார பாதுகாப்பு முறைகளையும் நாம் நிச்சயம் கடைப்பிடித்து வாழப்பழகவேண்டும்.