ADS 468x60

18 November 2014

எங்க ஊரில் மழை.

மழையே -நீ
முகில்களை உதிர்த்தவில்லை
முத்துக்களை உதிர்த்துகிறாய்
இன்னும் பிரபஞ்சத்தின்
பச்சைக்கெல்லாம்
பிச்சை போடுகிறாய்
ஆக மொத்தம்- நீ
கொடுப்பவன் அதனால்
மேலேயும்- நாம்
பெறுபவர் அதனால்
கீழேயும் இருக்கிறோம்.

08 October 2014

வயல் குழந்தாய்

வயல் குழந்தாய்
நீ அருந்தும் மார்புகள்
பிய்த்து எறியப்படுகிறது
வயல் கொஞ்சும் எங்கள்
பசுமை நிலங்களை
பாலைகளாக்கவோ
வேலை செய்கிறீர்கள்.....

உனக்கு மட்டும்
கைகால் இருந்திருந்தால்
இந்த இயந்திர இதயங்களை
இழுத்தெறிந்திருப்பாய்...

01 October 2014

மட்டக்களப்பு ஏழைகளின் பூமியாம்.

வகுப்பறையில் வாசிக்கவேண்டியவர்கள்
வழிகலெல்லாம் யாசிக்கிறார்கள்
மட்டக்களப்பு ஏழைகளின் பூமியாம்
புள்ளிவிபரம் காட்டி
போட்டி போட்டு பேசிகிறார்கள்!!! ஐயகோ!!

வயிற்றை நிரப்ப முடியாமல்
வாடியபோதெல்லாம் கழுத்தில்
கயிற்றை இறுக்கி கொலை
செய்யவேண்டியவர்கள் இவர்கள் அல்ல,

16 September 2014

மண்ணில் பிறந்தாலே

மன்னவனானாலும் மாடோட்டும் சின்னவனானாலும்
மண்ணில் பிறந்தாலே மறுபடி மண்ணுக்கிரைதானே!!

உன்னில் இருப்பானடா இறைவன் என்னிலிருப்பானடா
எண்ணி உதவிசெய்தால் அதுபோல் இன்பங்கள் வேறுஉண்டோ

சட்டம் படித்தாலும் பெரிய பட்டம் கிடைத்தாலும்
இட்டதே சேருமையா இதற்குள் எத்தனை பேதமையா

கூழ்காச்சி கொடுக்கிறான் அவனே ஆள்வைச்சிம் அடிக்கிறான்
வீழாமல் வாழ்வதுபோல் காட்டியே பாழாகிபோவதைப் பார்.....

31 August 2014

நல்லூர் கந்தன் சந்நிதானம்

நல்லூர் கந்தன் சந்நிதானம்
பார்த்தேன் குலைந்தது எந்நிதானம்
ஈக்கூட நுழையாத இடைவெளி
பார்கும் இடமெலாம் அழைக்கும் கடைவெளி
மக்கள் முகத்தினில் சந்தோசம் கண்டேன்
அகத்தினில் எந்தோசம் கொண்டேன்.

30 August 2014

இது முல்லை வேளை


தங்கம் கலந்த மணல்- அருகே
தாலாட்டும் வங்கப் புனல்
கூட்டமாய் வரும் மீன்கள்- அதை
நோட்டமிடும் மீனவர் கண்கள்
மயிலிறகாய் வருடும் தென்றல்- இது
வருவோர்க்கு வாய்த்த முன்றல்
சூரியனைக் குழைத்து எறிந்த வானம்
நீள் பனைகள் ஒட்டடை துடைக்க
நிலா வருகைகண்டு
உலாவும் பறவைகள் கானம்
இந்த வேளை நமக்கெல்லாம்
பொது உடமைதான்
ஆனாலும் மாற்றான் வீட்டு
மல்லிகைப்போல் இன்னும்
வேலிகள் கடந்து நிற்கும்
வேரற்ற எம்மக்கள்.

23 August 2014

நீ மட்டும் ஏன் கோபிக்கிறாய்!

மழைமேகம் நீரள்ள கடலுக்கு கோபமா
மலைமுகடு கூந்தல் காய காற்றுக்கு கோபமா
உலைமூட்ட எரிவதனால் நெருப்புக்கு கோபமா
மதிவளர்ந்து எறிக்கிறதே வானமே கோவமா
மரமூன்றி வேர்விட்டால் ம
ண்ணுக்கு கோபமா
மனம்மயங்கி இடங்கேட்டால் பெண்ணுக்கு கோபமோ!

மூடுவதால் கண்ணுக்கு கோபமா!
பாடுவதால் இசைக்கு கோவமா!
ஆடுவதால் காலுக்கு கோபமா!
ஓடுவதால் கங்கைக்கு கோபமா!

மலர்ந்து மலர்ந்து மணந்து மணந்து
உலர்ந்து போகுதே மலருக்கு கோவமா!
வானத்தில் திங்கள் வந்தால்
இரவுக்கு கோவமா!
வார்தையில் பங்கம் வந்தால்
வாய்கு கோவமா!
நீயும் நானும் சண்டையிட்டால்
காலத்தின் கோபமா!!!, சாபமா இல்லை பாவமா!!!!

20 July 2014

மட்டக்களப்பு பூர்வீகக் கலைகள் அந்நிய மோகத்தில் ஆடிப்போகும் ஆபத்து...

நாடுகளின் காட்டுவெள்ளம் போன்ற பெருவளர்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாம் வாழுகின்ற ஆசிய நாடுகள் 50 வருடங்களுக்கு பின்னால் நிற்ப்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன. அவைகள் மதவாதம், இனவாதம், மொழிப்பிரிவினை, சாதிச்சண்டை இன்னும் எத்தனையோ.. இவைகள் உழைக்கும் ஆற்றல், கண்டுபிடிப்பாற்றல், புதிது புனையும் ஆற்றல் என்பனவற்றையெல்லாம் அடியோடு அழித்திருக்கின்றது.