நாம் ஒவ்வொருவர் உள்ளத்திலும், உணர்வுகளிலும் ஒரு கதை
இருக்கிறது. சில கதைகள் சிரிப்பை விதைக்கின்றன, சில கதைகள்
கண்ணீரை வரவழைக்கின்றன. நான் இன்று ஒரு படத்தைக் கதை போல உங்களுக்கு விளக்கப்
போகின்றேன். ஒரு சின்னப் புகைப்படம், ஆனால் அதற்குள் ஆயிரம்
அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன.
இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். ஒரு காலத்தில் சாதாரணமானவர்களாக, எந்தப் பதவியுமில்லாதவர்களாகத் தோள்களைப் பிணைத்துக்கொண்டு, சிரித்துக்கொண்டிருந்த சில நண்பர்கள். அதே நண்பர்கள், அதே பிணைப்பு, ஆனால் காலமும், அவர்களின் வாழ்வும் இன்று எவ்வளவு மாறிப்போயிருக்கின்றது! இந்த மாற்றத்தின் பின்னணியில்தான், நமது சமூகத்தின் மிகப் பெரிய சவாலும், அதற்கான தீர்வும் மறைந்திருக்கின்றன.
இந்த
உலகம் போட்டி நிறைந்தது, முன்னேற்றம் என்பது ஒரு
வேகமான ஓட்டம். இந்த ஓட்டத்தில், நாம் சிலர், ஒரு சிறு வெற்றி கிடைத்தவுடனேயே, ஒரு நல்ல கல்வி
கிடைத்தவுடனேயே, ஒரு நல்ல வேலை கிடைத்தவுடனேயே, நம்மைச் சுற்றி இருந்த நண்பர்களை, உறவுகளை, ஏன், நம்மையே கூட மறந்துவிடுகின்றோம். அது ஒரு
கசப்பான உண்மை. 'வெற்றி பெறுகின்ற வழியில், பல நண்பர்களை இழப்பார்கள்' என்று சாதாரணமாகச் சொல்வார்கள்.
ஆனால், அந்த நண்பர்களை மறப்பது நம் மனதின் கீழ்த்தரமான
குணம்.
இலங்கையின்
உச்சபட்ச அரசியல் பதவி ஜனாதிபதி பதவி. அப்படிப்பட்ட உச்சப் பதவியை நோக்கி, பெரும்பான்மை
மக்களின் ஒரு தலைவர் நகர்ந்து கொண்டிருக்கிறார். அவர்தான் மதிப்புக்குரிய அனுரகுமார
திஸாநாயக்க. அவரது அண்மையப் புகைப்படம், அவர் இவ்வளவு
பெரிய பதவியில் இருந்தும், தனது பழைய நண்பர்களை மறக்காமல்,
அதே அரவணைப்புடன், தோள்மீது கைபோட்டு
நிற்கின்றதைக் காட்டுகிறது. உண்மையில் இது ஒரு அரிதான குணம். உலகப்புகழ் பெற்ற
தொழிலதிபர் ஹென்றி போர்ட் சொன்னார்: "எல்லாவற்றுக்கும்
முதலில் தயார் நிலையில் இருக்கும் ஒரு தலைமைதான், உலகத்தை
முன்னோக்கி நகர்த்தும்". ஆனால் நான் சொல்வேன்,
தலைமை என்பது தம்மோடு பயணித்த நட்பை மறக்காத மனப்பாங்கு!
உறவுகளே!
இங்கு,
ஏன் பல இளைஞர்கள் தலைமை இல்லாத நாதியற்ற படை அணியாக
சிதறிக்கிடக்கின்றார்கள்? ஏன் வருகின்றவனும் போகின்றவனும்
அவர்களைப் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது
போல, தமக்கான வாக்குகளைப் பெற்றுக்கொள்கின்றார்கள்? காரணம், நாம் நம்பிப் பின்தொடர ஒரு உண்மையான
வழிகாட்டி நம்மிடம் இல்லாததுதான்.
ஆனால், இந்தப்
புகைப்படத்திலிருக்கும் இந்தத் தலைமை, எமக்கான வழிகாட்டியாக
உருவாகிக்கொண்டிருக்கிறார். இவர் வெறும் பெரும்பான்மை மக்களுக்கான தலைவர்
மட்டுமல்ல, பல சிறுபான்மை இளைஞர்களையும் காந்தம் போல
ஈர்க்கிறார் என்பதற்கு யாழ்ப்பாணத் தேர்தல் முடிவுகளே சாட்சி. பல
எதிர்பார்ப்புகளுடன் அந்தத் தலைவருக்கு வாக்களித்த எங்கள் இளைஞர்களின் குரல்கள்,
இப்போது பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
சவால்களும், எதிர்ப்புகளும்
இல்லாமல் எந்தத் தலைமையும் உருவாவதில்லை. ஆனால், சவால்களை
வென்று, மக்களுக்கான நீதியை நிலைநாட்டும் தலைவனே உண்மையான
வழிகாட்டி. நான் உங்களிடம் கேட்கிறேன், நம் சமூகத்தில்
இப்படிப்பட்ட தலைவர்கள் எப்போது வருவார்கள்? காலம் பதில்
சொல்லும், ஆனால் அதற்காக நாம் காத்திருக்கக் கூடாது.
நாம்
நம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும், இந்தப் புகைப்படத்தில் உள்ள
தலைமை போல, நட்பையும், உறவுகளையும்
பேணி வாழ வேண்டும். அந்தப் பண்புதான், நம்மை ஒரு நல்ல
மனிதராக, நாளை ஒரு சிறந்த தலைவராக மாற்றும். நாம் அனைவரும்
இந்தப் பெரும்பான்மைத் தலைவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.
நாம்
இனி குழப்பமான ஒரு குட்டையில் நிற்கும் மீன்களாக இருக்க வேண்டாம்! எதிர்காலம்
என்பது யாரோ ஒருவருக்காகக் காத்திருப்பது அல்ல, நம்முடைய
தனித்துவமான, நடுநிலையான, நீதிக்கான
பயணத்தால் நாம் அதனை உருவாக்குவது.
நன்றி!
0 comments:
Post a Comment