பெரியம்மாவின் முகம்
முழுவதும் ஒரு புன்னகை பரவியிருந்தது. வயதின் காரணமாக சிறிது நடுக்கம் கொண்ட
கைகளால்,
அவனது கையை வழிநடத்தினார். “இல்லை கண்ணா, அப்படியல்ல... இந்தா பார், சிறிது சிறிதாகப்
போடணும். அப்பதான் நல்லா இடிஞ்சு மணம் வரும்” என்று
பாசத்தோடு சொன்னார். அந்தக் காட்சி, ஒரு ஓவியம் போல
இருந்தது. ஒரு வயதான மரத்திற்கும், அதன் கீழ் விளையாடும்
இளம் தளிர்க்கும் இடையே நடக்கும் ஒரு பேச்சு.
அந்த ஒரு கணம், என்
இதயத்தை தொட்டுவிட்டு போனது. இதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய செல்வமான “தொடர்பு”
என்று என்னுள் யாரோ சொல்லுவது போல இருந்தது.
“நாம
ஒன்றுமே பேச முடியவில்லை, அவர்கள் சொல்லுவதைக் கேட்டு ஏதோ
காலம் போகுது” – இந்த வார்த்தைகளை எத்தனை பேர் சொல்லி இருக்கிறார்கள்? எத்தனை பேர் இப்படி நினைத்திருக்கிறார்கள்?
நான் சிந்திக்கத்
தொடங்கினேன். நவீன காலத்தின் இந்த பரபரப்பான ஓட்டத்தில், நாம்
அனைவரும் ஒரே மாதிரியான ஒரு பெரிய தவறைச் செய்து கொண்டிருக்கிறோம். நம் வீட்டு
மூத்தவர்களை – நம் அப்பாவும் அம்மாவும், பாட்டி-தாத்தாக்களை
– நம் பிள்ளைகளிடமிருந்து ஒரு விதமாக “விலக்கி” வைக்கிறோம். “இவர்க
கெடுத்துடுவாங்க”, “வீணா தொந்தரவு பண்ணுவாங்க”,
“பழைய பழக்கத்தைக் கத்துக்குடுப்பாங்க” என்று
எண்ணி, ஒரு கண்ணால் பார்த்து, ஒரு
காதால் கேட்டு, அவர்களைத் தனிமையின் கடும் சித்திரவதைக்கு
உள்ளாக்குகிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல. அந்த
உண்மையை அன்றைக்கு அந்தச் சிறிய நிகழ்வு எனக்கு நினைவூட்டியது.
நம் மூத்தவர்களுக்கு, அவர்களுடைய
வாழ்ந்த நாட்களின் கனவுகளையும், விரும்பியவைகளையும், அனுபவித்த வலிகளையும் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு காது தேவை. ஒரு சிகரெட்டை
எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, “அந்தக் காலத்திலே...” என்று தொடங்கும் கதைகளுக்கு ஒரு இதயம் தேவை. அவர்களின் கையால் வாரி
இடப்படும் ஒரு கவளம் சாதத்தை, “அம்மா, ரொம்ப நல்லா இருக்கு!” என்று சொல்லி சாப்பிட ஒரு
வாய் தேவை. அவர்களின் மடியில் தலை வைத்து, அவர்களின் கையால்
தலையில் தடவப்பட, ஒரு பேரன் அல்லது பேத்தி தேவை.
அவர்கள் நமக்குச் செய்த
அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த நாம் தயாராக இல்லை. சமீபத்தில், ஒரு
வீடியோவில் பார்த்தேன். ஒரு முதிய தாயை, அவரது சொந்த மகனும்,
மனைவியும் சேர்ந்து தள்ளி அடித்து, வீட்டை
விட்டு வெளியேற்றினார்கள். அந்தப் படம் என் கண்களை நீராக்கியது. இதற்காகவா?
ஒரு காலத்தில், இரவு பகல் என்று பாராமல்,
நம்மை வயிற்றில் சுமந்து, பிறக்க வைத்து,
தூக்கத்தை இழந்து, கையில் எடுத்து ஆட்டி,
பள்ளிக்கு அனுப்பி, கல்யாணம் கட்டி, “இப்பதான் என் கடமை முடிஞ்சது” என்று நிம்மதியாக மூச்சு விடும் அந்தத்
தாய்-தந்தையர்களுக்கா இந்த நன்றிகெட்ட செயல்?
குருத்தோலை, பழுத்த
ஓலை விழுவதைக் கண்டு சிரிக்கலாகாது. நமக்கும் அந்தக் காலம் வரும்.
இந்த வார்த்தைகளை நாம்
எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். வாழ்க்கை ஒரு சக்கரம். இன்று நாம்
இளமையில் இருக்கிறோம். நாளை நாமும் முதுமைப் படிவோம். நாம் இன்று நம்
மூத்தவர்களுக்கு செய்கிறோம், அதே செயல் தான் நாளை நம் பிள்ளைகள்
நமக்குச் செய்வார்கள். நாம் இன்று காட்டும் அன்பும், பொறுமையும்,
மரியாதையும் தான் நாளை நமக்குக் கிடைக்கும் பரிசு.
அதனால், இன்றைய
தினமே, இந்த வார்த்தைகளைப் படித்து முடிக்கும் நீங்கள்...
சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில், அந்த
ஒற்றை இருக்கையில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள்
அப்பாவிடம் போய், “அப்பா, சாப்பிட
வரீங்களா?” என்று கேளுங்கள். சமையலறையில் தனியாக உட்கார்ந்து,
“யாரும் பேசமாட்டாங்க” என்று எண்ணி சாப்பிடும் உங்கள் அம்மாவின்
கையைப் பிடித்து, “அம்மா, நீங்கள்
செய்த இந்த புளியோதரை ரொம்ப நல்லா இருக்கு!” என்று சொல்லுங்கள். உங்கள் பிள்ளையின்
கையைப் பிடித்து, அவர்களை உங்கள் தாத்தா-பாட்டியின் அருகில்
அழைத்துச் செல்லுங்கள். “இவர்தான் உன் அப்பாவின் அப்பா” என்று
அறிமுகப்படுத்துங்கள்.
அவர்களின் கதைகளைக்
கேளுங்கள். ஒரே கதையை நூறு தடவை சொன்னாலும், பொறுமையாகக் கேளுங்கள். அந்த
ஒவ்வொரு கதையிலும், அவர்களின் வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு துளி
இருக்கிறது. அந்தத் துளிகளைக் காப்பதன் மூலம், நம்
வரலாற்றையே நாம் காப்பாற்றுகிறோம்.
நம் வீடுகள், பிளாஸ்டிக்
மற்றும் கொன்கிரீட்டால் மட்டும் ஆனவை அல்ல. அது நம்
மூத்தவர்களின் சிரிப்பாலும், நம் சிறியவர்களின் கலாட்டாக்களாலும், இடையே நடக்கும் அன்பான உறவாலும் கட்டப்பட்டவை. அந்த
உறவுகளுக்கு இடம் கொடுப்போம். நம் முதுச்சங்களை பாதுகாப்போம். அன்பாய் இருப்போம்.
ஏனெனில், ஒரு நாள் நாமும்
அப்படித்தான் இருப்போம்.
0 comments:
Post a Comment